இதில், மீனாட்சி அம்மன் கோவில் விழாக்கள் ஏப்ரல் 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதன் தொடர்ச்சியாக தினமும் காலை, மாலை வேளைகளில் கற்பக விருட்சம், சிம்மம், தங்க சப்பரம், பூதம், அன்னம், கைலாச பர்வதம், காமதேனு, தங்கப்பல்லக்கு, தங்க குதிரை, தங்க ரிஷபம், நந்திகேசுவரர், யாளி, வெள்ளி சிம்மாசனம் உள்ளிட்ட வாகனங்களில் திருவீதியுலா வந்தனர்.