சித்திரை திருவிழாவின் முதல் நாளான இன்று மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றம் செய்யும் நிகழ்வு இன்று காலை 10:30 மணியில் இருந்து 10:54 மணிக்குள் மிதுன லக்கனத்தில் நடைபெற்றது. கம்பத்தடி மண்டப கொடி மரம் அருகே மீனாட்சி சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் எழுந்தருளி சிறப்பு பூஜைகளும் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, மங்கல வாத்தியங்கள் இசைக்க தங்கக் கொடி மரத்தில் உற்சவக் கொடியேற்றம் விமரிசையாக நடைபெற்றது...
ஏப்ரல் 12ம் தேதி மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம், 13ம் தேதி திக் விஜயம், 14ம் தேதி தமிழ்ப்புத்தாண்டு தினத்தன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், ஏப்ரல் 15ம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருத்தேரோட்டம், ஏப்ரல் 15ம் தேதி மாலை கள்ளழகர் எதிர்சேவை, ஏப்ரல் 16ம் தேதி கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு காலை 5.50 முதல் 6.20 மணிக்குள் நடைபெறுகிறது.