கொரோனா தொற்று கட்டுப்பாடு காரணமாக கடந்த 2020 மார்ச் 20ம் தேதி முதல் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கட்டண சேவைகளில் பங்கு பெறவும் , அங்கபிரதட்சணம் செய்வதற்கும் அனுமதி நிறுத்தப்பட்டிருந்து. இந்நிலையில் 2 ஆண்டுகளுக்கு பின்னர் ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி முதல் அங்கப்பிரதட்சணம் செய்யவும் கட்டண சேவைகளில் பங்கு பெறவும் பக்தர்களுக்கு தேவஸ்தான நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.