ஜோதிடத்தில் ராகு ஒரு மெதுவாக நகரக்கூடிய கிரகமாக கருதப்படுகிறது. சில இடங்களில் இது நிழல் கிரகம் என்றும் அழைக்கப்படுகிறது. சுமார் 18 மாதங்களுக்குப் பிறகு ராசியை மாற்றப் போகிறார் ராகு. ராகு கிரகம் மார்ச் 27ல் மேஷ ராசிக்குள் நுழைகிறது. வேத ஜோதிடத்தில், ராகு தொற்றுநோய்கள், தோல் நோய்கள், பேச்சு, அரசியல் மற்றும் மத பயணங்களுக்கு காரணமாக கருதப்படுகிறது. ஒரு கிரகம் ராசியை மாற்றினால், அது ஒருவரின் வாழ்க்கையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
மிதுனம்: மிதுன ராசிக்காரர்கள் ராகுவின் சஞ்சாரத்தால் மகத்தான பல நல்ல பலன்களைப் பெறுவார்கள். நிர்வாகப் பணியில் இருப்பவர்களுக்கு கௌரவம் உயரும். வியாபாரிகளுக்கு சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் நிதி முதலீடு செய்து பலன் பெறுவார்கள். இது தவிர, பங்குச் சந்தையில் பணத்தை முதலீடு செய்வதன் மூலம் லாபம் கிடைக்கும்.
கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு ராகுவின் சஞ்சாரம் சாதகமாக அமையும். இந்த நேரத்தில், நிதி நிலைமை மேம்படும். நல்ல பண வரவு கையில் இருக்கும். அத்துடன் இந்த ராகு பெயர்ச்சி காலத்தில் நல்ல பணம் சம்பாதிக்க முடியும். மேலும், பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கும் இந்த நேரம் சாதகமாக இருக்கும். இது வியாபாரத்தில் லாபத்தை ஏற்படுத்தும்.
விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு ராகுவின் சஞ்சாரம் சாதகமாக இருக்கும். பயணத்தின் போது பணம் சம்பாதிப்பதில் வெற்றி பெறுவீர்கள். ஒரு புதிய தொழிலைத் தொடங்கலாம். அதில் அதிகமான லாபத்தினையும் பார்க்கலாம். பங்குச்சந்தையிலிருந்து திடீர் பண ஆதாயத்திற்கான அறிகுறி உள்ளது. மேலும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சம்பள உயர்வும் கிடைக்கும்.
கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு ராகுவின் சஞ்சாரம் நன்மைகளைத் தரும். பயணத்தின் போது பொருளாதார நிலை மேம்படும். மேலும், வியாபாரத்தில் முதலீடு செய்த பலன் கிடைக்கும். மூலதனம் அதிகரிக்கும். இது தவிர உத்தியோகத்தில் திடீர் பதவி உயர்வு பற்றிய நல்ல செய்திகள் கிடைக்கும். பங்குச்சந்தையில் முதலீடு செய்வது நன்மை தரும்.