திருத்தேரினை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்கின்றனர். வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் கூடி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்களுக்கு ஆங்காங்கே நீர்மோர், பிரசாதம் வழங்கப்படுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான திருக்கல்யாணம் வியாழனன்றும், தெப்ப உற்சவம் சனியன்றும் நடைபெறவுள்ளது.