ஸ்ரீரங்கத்தில் பங்குனி உற்சவம்: தங்க கருடவாகனத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்!
Srirangam renganathar temple | ஸ்ரீரங்கத்தில் பங்குனி உற்சவம் விழா இன்று நடைபெற்றது. நம்பெருமாள் தங்க கருடவாகனத்தில் எழுந்தருளி ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு சேவைசாதித்தார்.
108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் பெரியகோவில் என அனைவராலும் போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் ஆதி பிரம்மோத்ஸவம் எனப்படும் பங்குனி தேர்திருவிழா கடந்த 10ம்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
2/ 7
பங்குனி தேர்திருவிழாவின் 4வதுநாளான இன்று நம்பெருமாள் தங்க கருடவாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவைசாதித்தார்.
3/ 7
முன்னதாக நம்பெருமாள் காலை கண்ணாடி அறையிலிருந்து பல்லக்கில் புறப்பட்டு, சித்திரை வீதிகளின் வழியாக வலம்வந்து ரெங்கவிலாச மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்துவந்தார்.
4/ 7
தொடர்ந்து மாலை புறப்பாட்டின்போது தங்ககருடவாகனத்தில் நம்பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவைசாதித்ததுடன், பின்னர் நான்கு சித்திரை வீதிகளின் வழியாக வீதி உலா வந்து பின்னர் வாகன மண்டபத்தைச் சென்றடைந்தார்.
5/ 7
ஆயிரக்கணக்கான பக்தர்கள் நம்பெருமாளை வழிபாடு செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்வான பங்குனி தேரோட்டம் 10ம்திருநாளான வருகிற 19ம்தேதி நடைபெற உள்ளது.
6/ 7
ஸ்ரீரங்கத்தில் பங்குனி உற்சவம்: தங்க கருடவாகனத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்!
7/ 7
ஸ்ரீரங்கத்தில் பங்குனி உற்சவம்: தங்க கருடவாகனத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்!.