6 நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவில் தினமும் காலை சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலையில் எழுந்தருளியதை தொடா்ந்து சுவாமிக்கு பூர்ணாகுதி தீபாராதனை, அபிஷேகம், அலங்காரம் நடைபெறும். கடந்த ஆண்டை போல இந்தாண்டும் கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக 1ம் திருநாள் முதல் 5ம் திருநாள் வரை பக்தர்களுக்கு அதிகாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதிக்கப்பட்டார்கள்.
மேலும் பக்தர்கள் அங்கபிரதட்னம் செய்யவே தங்கி விரதம் இருக்கவோ மற்றும் அன்னதானம் வழங்கவோ அனுமதியில்லை. நவம்பர் 9-ம்தேதி நடைபெறும் சூரசம்ஹாரம் 6-ம் திருநாளன்றும், நவம்பர் 10-ம் தேதி நடைபெறும் திருக்கல்யாணம் 7-ம் திருநாளான்றும் பக்தர்களுக்கு தரிசனத்திற்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் சூரசம்ஹாரம் நடைபெறும் இடம் உள்ளிட்ட கோவிலின் அனைத்து பகுதிகளும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.