திருப்பதி மலையில் தங்கும் அறைகள் ஒதுக்கீடு செய்வதில் இன்று முதல் புதிய நடைமுறையை தேவஸ்தான நிர்வாகம் நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் கொண்டு வந்துள்ளது. இந்த நடைமுறையின் அடிப்படையில் அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கு உரிய ரசீதுகளை பக்தர்கள் வாங்கும்போது பேஸ் ஐடென்டிஃபிகேஷன் டெக்னாலஜி மூலம் பக்தர்களின் முகம் அங்குள்ள வெப்கேம் மூலம் படம் பிடிக்கப்பட்டு தேவஸ்தான சர்வரில் சேமித்து வைக்கப்படும்.