முகப்பு » புகைப்பட செய்தி » ஆன்மிகம் » நவராத்திரியில் துர்க்கையின் ஒன்பது வடிவங்கள் என்னென்ன தெரியுமா?

நவராத்திரியில் துர்க்கையின் ஒன்பது வடிவங்கள் என்னென்ன தெரியுமா?

நவராத்திரி கொண்டாட்டம் தீமையின் மீது நன்மையின் வெற்றியைக் குறிக்கிறது. இந்து புராணங்களின்படி, துர்கா தேவி மகிஷாசுரனுடன் ஒன்பது நாட்கள் போரிட்டு, நவராத்திரியின் 10 வது நாளில் விஜயதசமியாகக் கருதப்படும் அசுரனின் தலையை வெட்டியதாக நம்பப்படுகிறது.

  • 19

    நவராத்திரியில் துர்க்கையின் ஒன்பது வடிவங்கள் என்னென்ன தெரியுமா?

    நாள் 1: ஷைலபுத்ரி
    நவராத்திரியின் முதல் நாளில், ஷைலபுத்ரி வழிபாடு செய்யப்படுகிறது. இந்த ஆண்டு நவராத்திரியின் முதல் நாள்  செப்டம்பர் 26 அன்று வருகிறது. நவராத்திரியின் முதல் நாளின் நிறம் வெள்ளை. குழந்தை பருவத்தில் பார்வதியை பிரதிநிதித்துவப்படுத்தும் வடிவம் இது.

    MORE
    GALLERIES

  • 29

    நவராத்திரியில் துர்க்கையின் ஒன்பது வடிவங்கள் என்னென்ன தெரியுமா?

    நாள் 2: பிரம்மச்சாரிணி
    நவராத்திரியின் இரண்டாம் நாளில் பிரம்மச்சாரிணி மாதாவை வழிபடுகிறார்கள். துர்க்கையின் சந்நியாச வாழ்வை குறிக்கும். பெண் துறவியாக உடையணிந்து, உலர்ந்த ருத்ராட்ச மணிகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட உருவம் அது. நவராத்திரியின் இரண்டாவது நாளின் நிறம் சிவப்பு.

    MORE
    GALLERIES

  • 39

    நவராத்திரியில் துர்க்கையின் ஒன்பது வடிவங்கள் என்னென்ன தெரியுமா?

    நாள் 3: சந்திரகாண்டா
    நவராத்திரியின் மூன்றாம் நாளில், சந்திரகாண்டாவை வழிபடுகிறார்கள். சக்தி வடிவமான அவளுக்கு பத்து கைகள் இருக்கும். அவற்றில் ஒன்பது கைகளில் திரிசூலம், தண்டாயுதம், வில், அம்பு, தாமரை, வாள், மணி மற்றும் நீர்ப்பானை ஏந்தி இருக்கும். மற்றொரு கை  பக்தர்களை ஆசீர்வதிப்பதாய் ஒரு சீரும் புலியின் மீது அமர்ந்திருப்பார். நவராத்திரியின் மூன்றாம் நாளின் நிறம் அரச நீலம்.

    MORE
    GALLERIES

  • 49

    நவராத்திரியில் துர்க்கையின் ஒன்பது வடிவங்கள் என்னென்ன தெரியுமா?

    நாள் 4: குஷ்மாண்டா
    நவராத்திரியின் நான்காவது நாளில், மா கூஷ்மாண்டா வழிபாடு செய்யப்படுகிறது. மஹாசக்தி வடிவமான அவளுக்கு எட்டு கைகள் உள்ளன, அவற்றில் ஆறில் வட்டு, சூலாயம், தாமரை, வில் மற்றும் அம்பு, வாள் மற்றும் ஜெபமாலை ஆகியவை இருக்கும். மற்ற இரண்டு கைகள் தேன் மற்றும் நீர்பானையை ஏந்தியிருக்கும்அவள் ஒரு சிங்கத்தின் முதுகில் அமர்ந்திருப்பாள்.

    MORE
    GALLERIES

  • 59

    நவராத்திரியில் துர்க்கையின் ஒன்பது வடிவங்கள் என்னென்ன தெரியுமா?

    நாள் 5: ஸ்கந்தமாதா
    நவராத்திரியின் ஐந்தாம் நாள் மா ஸ்கந்தமாதாவை வழிபடுகிறார்கள். தனிமையில் இருக்கும் துர்க்கை உருவம். அவளுக்கு நான்கு கைகள் உள்ளன, அவற்றில் இரண்டு தாமரைகளை வைத்திருக்கும், மூன்றாவது கையில் தன் ஆறு தலை குழந்தை கார்த்திகேயனை பிடித்து மடியில் அமர்ந்திருக்கிறாள். நான்காவது கையால் தன் பக்தர்களை ஆசிர்வதிக்கிறாள். அவள் சிங்கத்தின் முதுகில் அமர்ந்திருக்கிறாள். நான்காவது நாளின் நிறம் பச்சை.

    MORE
    GALLERIES

  • 69

    நவராத்திரியில் துர்க்கையின் ஒன்பது வடிவங்கள் என்னென்ன தெரியுமா?

    நாள் 6: காத்யாயனி
    நவராத்திரியின் ஆறாவது நாளில்,  காத்யாயனி  வழிபடப்படுகிறார்.போர் கோலத்தில் உள்ள துர்கை. நான்கு கைகளில் வாள், கேடயம், தாமரை, திரிசூலம் ஆகியவற்றை ஏந்தியிருப்பாள். அவள் ஒரு கோபம்கொண்ட சிங்கத்தின் மீது அமர்ந்திருப்பதைப் பார்க்கலாம். நவராத்திரியின் ஆறாம் நாளின் நிறம் சாம்பல்.

    MORE
    GALLERIES

  • 79

    நவராத்திரியில் துர்க்கையின் ஒன்பது வடிவங்கள் என்னென்ன தெரியுமா?

    நாள் 7: காலராத்திரி
    நவராத்திரியின் ஏழாவது நாளில், காலராத்திரியை வழிபடுகிறார்கள். துர்க்கையின் அழிவின் வடிவம் அது. இரத்தம் தோய்ந்த மூன்று கண்களையும், கூந்தலையும், கழுத்தில் கபால மாலையை அணிந்திருக்க, அவளது நான்கு கைகளும் திரிசூலம், கத்தி, வஜ்ராயுதம் மற்றும் ஒரு கோப்பையை வைத்திருக்கின்றன. தன் வாகனமாக கழுதையின் மேல் அமர்ந்திருக்கிறாள்.
    நவராத்திரியின் ஏழாவது நாளின் நிறம் ஆரஞ்சு.

    MORE
    GALLERIES

  • 89

    நவராத்திரியில் துர்க்கையின் ஒன்பது வடிவங்கள் என்னென்ன தெரியுமா?

    நாள் 8: மகாகௌரி
    நவராத்திரியின் எட்டாவது நாளில் மஹாகௌரியை வழிபடுகிறார்கள்.துர்கா மீட்சியின் வடிவம். நான்கு கைகளில் மூன்று திரிசூலம், மினி டிரம் மற்றும் தாமரை ஏந்திய நிலையில், அவளது ஒரு கை தன் பக்தர்களுக்குப் பாதுகாப்பளிக்கிறது. ஒரு வெள்ளை எருது மீது  மஹாகௌரி அமர்ந்திருக்கிறாள்.
    நவராத்திரியின் எட்டாவது நாளின் நிறம் மயில் பச்சை.

    MORE
    GALLERIES

  • 99

    நவராத்திரியில் துர்க்கையின் ஒன்பது வடிவங்கள் என்னென்ன தெரியுமா?

    நாள் 9: மா சித்திதாத்ரி
    நவராத்திரியின் ஒன்பதாம் நாளில், மா சித்திதாத்திரி வழிபாடு செய்யப்படுகிறது துர்காவின் மகாசக்தி  வடிவம். அவளது நான்கு கைகளில் ஒவ்வொன்றும் ஒரு வட்டு, சங்கு, இளஞ்சிவப்பு தாமரை மற்றும் ஒரு தந்திரம் ஆகியவற்றை ஏந்தியிருக்கும். அவள் முழுமையாக மலர்ந்த தாமரையின் மீது அமர்ந்திருப்பாள்.நவராத்திரியின் ஒன்பதாம் நாளின் நிறம் இளஞ்சிவப்பு.

    MORE
    GALLERIES