நம்மில் பலருக்கு கனவு வராத நாட்களே இருக்காது. அது நல்லவையாகவும் இருக்கலாம்… கெட்டவையாகவும் இருக்கலாம். இந்த கனவுகள் நமக்கு பதட்டங்களை ஏற்படுத்தும். எனினும், நாம் காணும் ஒவ்வொரு கனவுக்கும் அர்த்தம் உள்ளது என உங்களுக்கு தெரியுமா?. ஸ்வப்னா சாஸ்திரத்தின் படி, நாம் காணும் ஒவ்வொரு கனவிற்கும் நிச்சயமாக சில அர்த்தம் இருக்கும். சில கனவுகள் சுப மற்றும் தீய அறிகுறிகளை சுட்டிக்காட்டுகின்றன. நமக்கு வரும் சில விசித்திரமான கனவுகளை பற்றியும் அதன் அர்த்தங்களை பற்றியும் இங்கே காணலாம்.
நம்மில் பலர் சில சமயங்களில் உயரமான ஒரு இடத்தில் இருந்து கீழே விழுவது போல் கனவு கண்டிருப்போம். ஆனால், அதற்கு என்ன அர்த்தம் என நமக்கு தெரியாது. அப்படி, உங்களுக்கு கனவு வந்தால், நிஜ வாழ்வில் நீங்கள் எடுத்த ஒரு சில முடிவுகள் தவறாக இருக்கலாம் எனவும், இதன் காரணமாக நம் வாழ்க்கையில் சில சிக்கல்களை எதிர்க்கொள்ள கூடும் என்றும் அர்த்தம் என கூறப்படுகிறது. அதுமட்டும் அல்ல, நீங்கள் குழப்பமாக இருப்பதையும் இது குறிக்கிறது.
நம்மில் சிலருக்கு சம்பந்தமே இல்லாமல் பரீட்சை எழுதுவது போல கனவு வரும். நிஜ வாழ்வில் வரும் தோல்விகளை கண்டு அச்சப்படுபவர்களுக்கு, தேர்வு எழுதுவது போன்று அல்லது தேர்வுக்கான முடிகளுக்கு காத்திருப்பது போன்று கனவு வரலாம் என கூறப்படுகிறது. அதுமட்டும் அல்ல, நீங்கள் விரைவில் உங்கள் வாழ்க்கை குறித்த முக்கிய முடிவுகளை எடுக்க போகிறீர்கள் என அர்த்தம்.
சில சமயங்களில் இந்த விசித்திரமான கனவு நம்மில் பலருக்கு வந்திருக்கும். மற்றவர்கள் முன் நாம் நிர்வாணமாக நிற்பது போல வித்தியாசமான ஒரு கனவை நீங்கள் கண்டால், நிஜ வாழ்வில் நீங்கள் அச்சத்துடனும், உங்கள் பாதுகாப்பை பற்றிய கவலையுடனும் இருக்கின்றீர்கள் என அர்த்தம். அதுமட்டும் அல்ல, உங்கள் வாழ்க்கையை புரட்டிப்போடக்கூடிய நிகழ்வுகள் நடக்கப் போகிறது என அர்த்தம்.
தெரிந்த அல்லது தெரியாத சில நபர்கள் உங்களை துரத்துவது போன்று நமக்கு அடிக்கடி கனவு வந்திருக்கும், அதன் அர்த்தம், உங்கள் நிஜ வாழ்க்கையில் நீங்கள் எதையே தவிர்க்க முயற்சி செய்தும், முடியாமல் தவிக்கின்றீர்கள் என்று அர்த்தம். இதனால், உங்களுக்கு மன அழுத்தம் மற்றும் மன ரீதியான பிரச்னையை சந்திக்க உள்ளீர்கள் என அர்த்தம்.
மரணம் என்பது கனவுகளில் மிகவும் இயல்பாக வரும் விஷயம் ஆகும். அந்த வகையில் நீங்கள் உங்கள் கனவில் இறப்பு குறித்த காட்சிகளை கண்டால், அத்தகைய கனவு சுப நிகழ்வுக்கான அறிகுறியாக இருக்கும். அத்தகைய கனவுகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது வர இருக்கும் மகிழ்ச்சியை கெடுப்பதாக கூறப்படுகிறது. இது போன்ற கனவுகள் வீட்டில் நடக்க உள்ள சுபகாரியத்தின் அறிகுறியாக கருதப்படுகிறது.
நம்மில் பலருக்கு, நமக்கு நெருக்கமான அல்லது பிடித்த நபருடன் உடலுறவில் ஈடுபடுவதை போல கனவு வந்திருக்கும். இதன் அர்த்தம், உங்கள் துணையுடன் நீங்கள் மகிழ்ச்சியாக இல்லை என்று அர்த்தம். மேலும் நீங்கள் யாருடன் உடல் உறவில் ஈடுபட வேண்டும் என்று கனவு காண்கிறீர்களோ, அந்த நபரின் மீது உங்களுக்கு ஆசை உள்ளது என அர்த்தம். அந்த நபரின் ஆளுமையில் நீங்கள் மிகவும் ஈர்க்கப்பட்டீர்கள். உங்கள் இருவரின் குணாதிசயங்களில் நீங்கள் ஒற்றுமையைக் காண்கிறீர்கள் என்பதற்கான அறிகுறி இது.