மேஷம் : இந்த மாதத்தில் நீங்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். ஆனாலும், போதிய பலன் கிடைக்காது. தொழிலிலும் பெரிய அளவுக்கு லாபம் கிடைக்காது. நீங்கள் ஏதேனும் ஒரு நிறுவனத்தில் வேலை செய்பவர் என்றாலும், அதுசார்ந்த கவலைகள் வரக் கூடும். அத்தகைய சூழலில் நேர்மறையாக சிந்தித்து, பணியில் கவனம் செலுத்துங்கள். உடல்நலன் நன்றாக இருக்கும்.
ரிஷபம் : இந்த மாதத்தில் உங்கள் பொருளாதார சூழல் சிறப்பாக இருக்கும் என்றாலும், செலவுகளும் அதிகரிக்கும். குடும்பத்தினருக்காகவும் அதிக செலவு செய்ய நேரிடலாம். இந்த மாதத்தில் வீடு மற்றும் வாகனங்களில் முதலீடு செய்யலாம். பணி சார்ந்த சில வளர்ச்சிகள் ஏற்படுவதற்கான அறிகுறி தென்படும். எனினும், நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும்.
மிதுனம் : உங்கள் மனம் இந்த மாதத்தில் ஓய்வின்றி இருக்கும். வயிறு சார்ந்த பிரச்சினைகள் வரக் கூடும். திருமணம் ஆகாத நபர்களுக்கு திருமணம் நடைபெற வாய்ப்பிருக்கிறது. வணிகத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும். குறைவாக செலவு செய்தால் நிறைய சேமிக்க முடியும். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு பணி உயர்வு கிடைக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால், தனியார் வேலையில் இருப்பவர்களுக்கு சிக்கல் வரலாம்.
கடகம் : வேலை மற்றும் வணிகத்திற்கு உகந்த மாதமாக மே மாதம் இருக்கும். வேலை தொடர்ந்து சிறப்பாக செய்யும் காரணத்தால் வெற்றி கிடைக்கும். உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும். சிலருக்கு உங்களிடம் அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும். தந்தையிடம் இருந்து ஆதரவு கிடைக்கும். இந்த மாதம் பேச்சில் மிகுந்த கட்டுப்பாடு அவசியம். தேவையின்றி யாருடனும் வாதம் செய்ய வேண்டாம்.
சிம்மம் : வணிகத்தைப் பொருத்தவரையில் இந்த மாதம் சிறப்பாக இருக்கும். வணிகத்தில் புதிய திட்டங்களை செயல்படுத்த வியாபாரிகளுக்கு வாய்ப்பு கிடைக்கும். மூத்தவர்களின் ஒத்துழைப்புடன் தொழிலில் வெற்றி கிடைக்கும். குடும்பம் சார்ந்த உறவுகளில் சில கசப்புகள் ஏற்படலாம். மாணவர்களுக்கு படிப்பில் கவனம் இன்றி போகும்.
கன்னி : பணி சார்ந்த விஷயத்தில் மே மாதம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். பணி உயர்வு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. பணியிடத்தில் பாராட்டு கிடைக்கலாம். பணியிடத்தில் அரசியல் செய்வதை தவிர்க்கவும். பேச்சை கட்டுப்படுத்த வேண்டும். மதம் சார்ந்த உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும். திருமண வாழ்வில் எல்லாம் சிறப்பாக அமையும். உடல் நலன் சார்ந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
துலாம் : இந்த மாதத்தில் தொழில் சார்ந்த விஷயங்களில் ஏற்றம், இறக்கம் என இரண்டுமே கலந்து காணப்படும். நஷ்டம் மற்றும் லாபம் என இரண்டையும் எதிர்கொள்ளும் வாய்ப்புண்டு. அரசு வேலை வாய்ப்புகளில் இருப்பவர்களுக்கு சிறப்பான மாதம் ஆகும். தனியார் வேலையில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களிடம் இருந்து முழு ஆதரவு கிடைக்கும்.
விருச்சிகம் : உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவுவதற்கான சூழல் காணப்படுகிறது. குடும்பத்தில் மதம் சார்ந்த விழா நடைபெறக் கூடும். தொழில் எந்தவித சிக்கலுமின்றி இயல்பாக நடக்கும். செலவுகளைக் காட்டிலும் சேமிப்புகள் கூடுதலாக இருக்கும். பங்குச் சந்தையில் முதலீடு செய்திருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
மகரம் : இந்த மாதம் முழுவதுமே நேர்மறையான சூழல் நிலவும். பணியிடத்தில் கவனம் செலுத்தவும். பணம் சார்ந்த விஷயங்களில் நீங்கள் கவனமுடன் இருப்பீர்கள். வெளிநாடு அல்லது நெடுந்தொலைவுக்கு பயணம் செய்ய வேண்டியிருக்கும். வேலை மற்றும் வணிகத்தில் வளர்ச்சி காணப்படும். இந்த மாதம் கோபம் அதிகமாக இருக்கும். அதை கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள்.
கும்பம் : நிதி நிலைமை இந்த மாதம் சிறப்பாக இருக்கும் என்றாலும், அதற்கு நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். உடல்நலன் மோசமாக இருக்கும். மனநலன் சார்ந்த சிக்கல்களும் வரக் கூடும். பணியில் சில தாமதங்கள் மற்றும் தடங்கல்கள் ஏற்படக் கூடும். புதிய வேலையை நீங்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டுள்ளீர்கள் என்றால் சாதகமான முடிவு கிடைக்கும்.
மீனம் : இந்த மாதம் உங்களுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது. உங்களுக்கு ஏதேனும் தடங்கல் ஏற்பட்டால், அதில் இருந்து வெளியே வருவதற்கு குரு பகவான் உதவியாக இருப்பார். வருமானம் நல்லபடியாக இருக்கும் என்றாலும் செலவுகளும் சற்று அதிகம்தான். நீங்கள் எங்கு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். நல்ல பலன் கிடைக்கும். முடிவுகளை சாதூர்யமாக எடுக்கவும்.