தற்பொழுது கன்னி ராசியில் சஞ்சரித்து வரும் சூரியன் 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 18 ஆம் தேதி அன்று துலாம் ராசிக்கு செல்கிறார். ஏற்கனவே துலாம் ராசியில் கேது சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார். எனவே, சூரியனுடன் மாதம் முழுவதுமே வேறு சில கிரகங்களும் சஞ்சரிக்க இருக்கின்றன. துலாம் ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் மாதம் தான் ஐப்பசி மாதம். துலாம் ராசியில் சூரியன் நீசம் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த ஆண்டு ஐப்பசி மாதத்தில் துலாம் ராசியின் ஆட்சி கிரகமான சுக்கிரனுடன் சேர்ந்து நீசமாகும் சூரியன் இருப்பதால் நீச்சபங்க ராஜயோகம் பெறுவது, ஒரு சில குறிப்பிட்ட ராசிகளுக்கு அதிர்ஷ்டமான மற்றும் யோகமான காலமாக அமைந்துள்ளது. ஐப்பசி 2012 எந்தெந்த ராசிகளுக்கு மிகவும் யோகமான, தொட்டதெல்லாம் துலங்கும், பண பொழியும் என்று சாதகமான காலமாக இருக்கிறது என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
சிம்ம ராசி: இந்த மாதம் நிறைய மாற்றங்களை எதிர்பார்க்கலாம். தொழில்மாற்றம், இட மாற்றம், வேலை மாற்றம், பயணங்கள் என்று ஐப்பசி மாதம் பரபரப்பாக இருப்பீர்கள். இந்த மாற்றங்கள் பெரும்பாலும் உங்களுக்கு சாதகமாக அமையும். மார்கெட்டிங், டிராவல், மீடியா, தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப துறையில் இருப்பவர்களுக்கு மிக மிக யோகமான காலம். வாய், தொண்டை, மூக்கு சார்ந்து சிறிய உடல் உபாதைகள் வரலாம். இளைய சகோதர சகோதரிகள் வழியில் நல்ல செய்திகள் கிடைக்கும்.
கன்னி ராசி: உங்கள் குடும்ப, தன மற்றும் வாக்கு ஸ்தானத்தில் நான்கு கிரகங்கள் சேர்க்கையால், பேச்சு சாதுர்யம் அதிகரிக்கும், கையில் பணம் புரளும். குடும்பத்தார் உங்கள் பேச்சை கேட்டு நடப்பார்கள். கடன் பாக்கி வசூலாகும். முதலீடு செய்யும் அளவுக்கு பண வரவு இருக்கும். சுப காரியம் நடக்கும், நிம்மதி இருக்கும் மகிழ்ச்சி நிலவும்.
துலாம் ராசி: உங்கள் குறிக்கோள் நிறைவேறும் மாதம் இது. வெளிநாட்டு வேலைக்கு அல்லது படிக்க செல்ல முயற்சிப்பவர்களுக்கு, இந்த மாதம் வெளிநாடு யோகம் அமையும். பொறுப்புகள் அதிகரிக்கும், முக்கியத்துவம் அதிகரிக்கும். கடன் தீரும், சிக்கல்களில் இருந்து வெளிவருவீர்கள். சிந்தனைகள் தெளிவாகும். யார் என்ன சொன்னாலும், உங்கள் முடிவே இறுதியாக இருக்கும். பல விதமான நன்மைகள் கிடைக்கும். தடைபட்ட காரியங்கள் வேகமாக நடக்கும்.
விருச்சிக ராசி: பணியில் இட மாற்றம் அல்லது வீட்டில் இருந்து விலகி இருக்கும் சூழல் ஏற்படும். பெரியவர்களின் உடல் நலனில் அக்கறை தேவை. சுப விரயங்களும் செலவுகளும் ஏற்படும். வெளிநாடு அல்லது தூர தேசம் சார்ந்த வேலை வணிகத்தில் சுபிட்சமாக இருக்கும். வெளிநாட்டில் இருக்கும் விருச்சிக ராசியினருக்கு அமோகமான மாதமாக இருக்கும். யாரையும் நம்பி ரகசியங்களை சொல்ல வேண்டாம்.
தனுசு ராசி: இந்த மாதம் உங்களுக்கு மிகவும் சாதகமான காலமாக உள்ளது. வெற்றிகளை வாரிக் குவிப்பீர்கள். பண வரவு, வணிகத்தில் அபரிமிதமான லாபம் என்று பொருளாதார நிலை மேம்படும். வேலை, வணிகம் மற்றும் தொழிலில் இருந்த தடைகள் எல்லாம் நீங்கி, செழிக்கும். குடும்பத்தில் இணக்கம் அதிகரிக்கும். தொட்டதெல்லாம் துலங்கும் காலம். சாதாரணமாக ஏதாவது முயற்சி செய்தாலும், மேன்மையைத் தரும். மூத்த சகோதர சகோதரிகளின் ஆதரவும் உதவியும் கிடைக்கும்.
மகர ராசி: தொழில், வேலை, புதிய வாய்ப்புகள் என்று வேலை சார்ந்த முன்னேற்றங்கள் ஏற்படும். புதிய வேலை அல்லது புரோமோஷனுக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். ஓய்வு பெற்றவர்களுக்கு, ஓய்வூதியம், செட்டில்மென்ட் தொகை இழுவையாக இருந்தால், இந்த காலகட்டத்தில் செட்டில் ஆகும். பொருளாதாரம் மேம்படும். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும்.