இன்று ( ஜூன் 7 ஆம் தேதி) இரவு 07:58 மணிக்கு கிரகங்களின் அதிபதியான புதன் பகவான் தனது ராசியை மாற்ற உள்ளார். அதாவது, புதன் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு மாற உள்ளார். இவர் ஜூன் 7 முதல் ஜூன் 24 பிற்பகல் வரை ரிஷப ராசியிலேயே இருப்பார். இந்த சஞ்சாரத்தின் தாக்கம் அனைத்து ராசிகளில் காணப்படும். ஏனென்றால், புதனின் சஞ்சாரம் சிலருக்கு சுபமாக இருக்கும் அதே சமயம் சிலருக்கு பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும். அந்தவகையில், புதனின் சஞ்சாரம் 12 ராசிகளுக்கு எப்படி இருக்கும் என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மேஷம் : புதன் சஞ்சாரம் உங்களுக்கு நல்ல பலன்களை தரும். பண ஆதாயத்தால் பொருளாதாரம் வலுவடையும், சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக கைக்கு வராமல் இருந்த பணம் கைக்கு வந்து சேரும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டும். வயிற்றில் பிரச்சனை ஏற்பட வாய்ப்புகள் அதிகம். கடினமான சூழ்நிலையிலும் வெற்றி கிடைக்கும்.
துலாம் : வேலை செய்யும் இடத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனென்றால், அலுவலக அரசியலுக்கு பலியாக வேண்டிஇருக்கலாம். வேலையில் அக்கறையுடன் இருங்கள், வீண் வாக்குவாதங்களில் ஈடுபடாதீர்கள். பண ஆதாயத்தால் பொருளாதாரம் வலுவடையும். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள், மன அழுத்தத்தை ஆதிக்கம் செலுத்த வேண்டாம்.
தனுசு : புதன் சஞ்சாரம் உங்களுக்கு இயல்பாக இருக்கும். நீங்கள் பயணம் செய்ய ஏற்ற நேரம் இது. வெளிநாட்டில் வசிக்கும் வாய்ப்பு அல்லது பெரிய நிறுவனத்தில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும். இருப்பினும், இந்த நேரத்தில் உங்கள் எதிரிகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். கவனமாக வேலை செய்யுங்கள். ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும்.