முகப்பு » புகைப்பட செய்தி » ஆன்மிகம் » இன்று புதன் பெயர்ச்சி.. குரு உடன் இணையும் நீச்சம் பெற்ற புதன்.. ராஜயோகம் யாருக்கு?

இன்று புதன் பெயர்ச்சி.. குரு உடன் இணையும் நீச்சம் பெற்ற புதன்.. ராஜயோகம் யாருக்கு?

Astrology: மீன ராசியில் ஆட்சி பெற்ற குரு உடன் நீச்சம் பெற்று அமரும் புதனால் சில ராசிக்காரர்களுக்கு நீச்ச பங்க ராஜயோகம் கிடைக்கப் போகிறது.

 • 17

  இன்று புதன் பெயர்ச்சி.. குரு உடன் இணையும் நீச்சம் பெற்ற புதன்.. ராஜயோகம் யாருக்கு?

  புத்திநாதன் புதன் மீன ராசியில் ஆட்சி பெற்ற குரு உடன் சூரியனுடன் நீச்சம் பெற்று அமர்வதால் சில ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் கிடைக்கப் போகிறது. மார்ச் 16ஆம் தேதியான இன்று புதன் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடப்பெயர்ச்சியாகப் போகிறார். இந்த கிரகப்பெயர்ச்சி மற்றும் கூட்டணியால் சில ராசிக்காரர்களுக்கு அற்புதமான கால கட்டம் உருவாகிறது. திடீர் அதிர்ஷ்டம் தேடி வரும். நிகழப்போகும் புதன் பெயர்ச்சியால் இந்த 6 ராசிக்காரர்களுக்கும் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

  MORE
  GALLERIES

 • 27

  இன்று புதன் பெயர்ச்சி.. குரு உடன் இணையும் நீச்சம் பெற்ற புதன்.. ராஜயோகம் யாருக்கு?

  ரிஷபம்: உங்கள் ஜாதகத்தின் 11வது வீட்டில் புதன் சஞ்சரிப்பது நல்ல பலன்களைத் தரும். அடுத்த 15 நாட்கள் மிகவும் மங்களகரமானதாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் உண்டு. குழந்தைகளிடமிருந்து நல்ல செய்தி கிடைக்கும். கர்ப்பிணிப் பெண்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.இந்த காலகட்டத்தில் உங்களுக்கு வருமானம் அதிகரிக்கும். திடீா் வேலை வாய்ப்பு தேடி வரும். காதல் முயற்சிகள் கைகூடும் திருமணம் விசயமாக பேசி முடிக்கலாம்.

  MORE
  GALLERIES

 • 37

  இன்று புதன் பெயர்ச்சி.. குரு உடன் இணையும் நீச்சம் பெற்ற புதன்.. ராஜயோகம் யாருக்கு?

  மிதுனம் :நான்காம் வீட்டில் புதன் சஞ்சரிப்பது மிகவும் சாதகமாகும். தாயின் உடல்நிலை மேம்படும். லக்னாதிபதி சுப ஸ்தானத்தில் இருந்தால் மரியாதை கிடைக்கும். புதிய கார் வாங்கலாம். நீங்கள் புதிய வீடு அல்லது சொத்து வாங்கலாம்.திடீர் அதிர்ஷ்டத்தினால் பண வருமானம் வரும் வேலை செய்யும் இடத்தில் சிலருக்கு புரமோசன் கிடைக்கும். பெண்களுக்கு ஆடை ஆபரணம் சேர்க்கை ஏற்படும். கர்ம, தொழில் ஸ்தானத்தில் இந்த சஞ்சாரம் நிகழ்வது உங்களின் தொழில் விவகாரங்களில் நன்மை அடையலாம்.

  MORE
  GALLERIES

 • 47

  இன்று புதன் பெயர்ச்சி.. குரு உடன் இணையும் நீச்சம் பெற்ற புதன்.. ராஜயோகம் யாருக்கு?

  சிம்மம்:  11ம் வீட்டில் புதன் சஞ்சரிப்பது உங்களுக்கு நன்மை தரும். சம்பளம் உயரும். நீண்ட நாட்களாக வரவேண்டிய பணம் வந்து சேரும். உடல்நலக் கோளாறுகள் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் இருக்கும்.பெண்களுக்கு ஆடை ஆபரணம் சேர்க்கை அதிகரிக்கும். பண வருமானம் திருப்தி தரும். பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும்.

  MORE
  GALLERIES

 • 57

  இன்று புதன் பெயர்ச்சி.. குரு உடன் இணையும் நீச்சம் பெற்ற புதன்.. ராஜயோகம் யாருக்கு?

  துலாம்: புதன் 6ம் வீட்டில் சஞ்சரிப்பது உங்களுக்கு அதிர்ஷ்டம் தரும். நீங்கள் செய்யும் ஒரு நல்ல செயல் உங்களுக்கு நூறு மடங்கு பலனைத் தரும். ஒரு ஆன்மீக பயணம் மனதை அமைதிபடுத்தும். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பர்.பரிசுகள் மற்றும் சலுகைகளைப் பெறலாம். அரசாங்க தேர்வுகளுக்குத் தயாராகும் போட்டியாளர்களுக்கும் மாணவர்களுக்கும் நல்ல காலம். பிடித்த கல்லூரிகளில் உயர் கல்வி படிப்பீர்கள். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும்.

  MORE
  GALLERIES

 • 67

  இன்று புதன் பெயர்ச்சி.. குரு உடன் இணையும் நீச்சம் பெற்ற புதன்.. ராஜயோகம் யாருக்கு?

  தனுசு: 7 மற்றும் 10 ஆம் வீட்டில் புதன் சஞ்சரிப்பது உங்களுக்கு நல்ல பலன்களைத் தரும். மனைவியுடன் உறவு மேம்படும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். கூட்டாண்மை பிரச்சனைகள் தீரும். சமுதாயத்தில் மரியாதை கூடும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். அம்மாவின் ஆரோக்கியம் மேம்படும். புதிய சொத்துக்கள் வாங்கலாம். உடலில் இருந்த சோம்பல் விலகி சுறுசுறுப்பு அதிகரிக்கும். வேலையில் புரமோசன் கிடைக்கும். மன தைரியம் அதிகரிக்கும்.

  MORE
  GALLERIES

 • 77

  இன்று புதன் பெயர்ச்சி.. குரு உடன் இணையும் நீச்சம் பெற்ற புதன்.. ராஜயோகம் யாருக்கு?

  கும்பம் : இரண்டாம் வீட்டில் புதன் சஞ்சரிப்பதால் உங்கள் ஆசைகள் நிறைவேறும். இந்த நேரத்தில் நல்ல அதிர்ஷ்டம் வரும். குழந்தையின் விருப்பம் நிறைவேறும். காரை கவனமாக ஓட்டுங்கள். அடுத்த 15 நாட்கள் உங்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். உடல் நலனில் அக்கறை செலுத்தவும். உங்களுக்கு மூத்த சகோதரர்கள் மற்றும் நண்பர்கள் மூலம் நன்மைகள் ஏற்படும் காலமாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும்.

  MORE
  GALLERIES