ஜோதிட சாஸ்திரத்தின் படி கிரகங்கள் சீரான இடைவெளியில் ராசிகளை மாற்றுகின்றன. இது மனித வாழ்க்கையை பாதிக்கிறது. அதன்படி பிப்ரவரி 27-ம் தேதி, புதன் பெயர்ச்சி நடைபெறவிருக்கிறது. கும்ப ராசிக்கு செல்லும் புதன், அதே ராசியில் ஏற்கனவே சஞ்சரித்துக் கொண்டிருக்கும் நீதியின் கடவுளான சனி கிரகத்துடன் ஒரே வீட்டில் இருப்பார். ஒரே வீட்டில் இருக்கும்போது, இருவரின் சேர்க்கையால் ஏற்படும் நன்மைகளும் தீமைகளும் அனைத்து ராசியினருக்கும் வெவ்வேறு மாற்றங்களைத் தரும்.
மேலும்,புதன் மற்றும் சனியின் இந்த சேர்க்கையானது மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. கிரகங்களின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றம் சிலருக்கு சாதகமான பலனையும் சிலருக்கு எதிர்மறையான விளைவையும் ஏற்படுத்துகிறது. கும்ப ராசியில் இருக்கும் சனீஸ்வரருடன் புதன் நுழைவதால் ஏற்படும் கூட்டணியால் சில ராசியினருக்கு ஜாக்பாட் அடிக்கபோகுது. அது எந்தெந்த ராசிகள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்
ரிஷபம்: கும்ப ராசியில் புதன் சஞ்சரிப்பது ரிஷப ராசியினருக்கு வெற்றியைத் தரும். வியாபாரத்தில் மகத்தான வெற்றி கிடைக்கும். நல்ல லாபம் கிடைக்க வாய்ப்புகள் அமையும். இது உங்கள் நிதி நிலையை பலப்படுத்தும். அத்துடன் பணம் பெறவும் வாய்ப்பு உள்ளது. பணியாளர்கள் தங்கள் பணியில் நம்பிக்கையைப் பெறுவார்கள். இந்த நேரத்தில் உங்கள் நிதி நிலை முன்பை விட சிறப்பாக இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.
சிம்மம்: தொழிலதிபர்களுக்கு இது நல்ல நேரம். நீங்கள் சொந்தமாக தொழில் தொடங்கலாம், உங்களிடம் ஏற்கனவே தொழில் இருந்தால் விரிவாக்க வாய்ப்பு உள்ளது. புதிய நபர்களுடன் பணிபுரியும் வாய்ப்பு ஏற்படும். சட்ட அல்லது நிதித் துறையில் பணிபுரிந்தால், இந்த நேரத்தில் அதிக வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
மேஷம்: இந்த ராசிக்கு புதன் சஞ்சாரம் சிறப்பாக இருக்கும். ஊழியர்களின் சம்பளம் உயர வாய்ப்பு உள்ளது. குறிப்பாக பண விஷயங்களில் வெற்றி கிடைக்கும். ஏதேனும் சர்ச்சையில் சிக்கிக் கொண்டாலும் கவலைப்பட வேண்டாம். முடிவு உங்களுக்கு சாதகமாக வரலாம். தொழில் சம்பந்தமானவர்கள் முன்னேற்றத்திற்கான சிறந்த வாய்ப்புகளைப் பெறுவீர்கள், வேலையில் அதிக வாய்ப்புகள் தேடி வரும்.