முகப்பு » புகைப்பட செய்தி » ஆன்மிகம் » புதன் வக்ர நிவர்த்தி…. இன்று முதல் இந்த ராசிகளின் வாழ்க்கை அமோகமா இருக்க போகுது!!

புதன் வக்ர நிவர்த்தி…. இன்று முதல் இந்த ராசிகளின் வாழ்க்கை அமோகமா இருக்க போகுது!!

Mercury Direct In Aries on may 15th | புதன் பகவான் தனது வக்ர பெயர்ச்சியை இன்று (15 மே 2023) காலை 8:30 மணிக்கு நிவர்த்தி செய்து, நேரடி பெயர்ச்சிக்கு மாறியுள்ளார். புத்த நேரடி இயக்கத்தால் சில ராசிக்காரர்களுக்கு சுப பலன் கிடைக்கும். அந்த ராசிக்காரர்கள் யார் என பார்க்கலாம்.

  • 18

    புதன் வக்ர நிவர்த்தி…. இன்று முதல் இந்த ராசிகளின் வாழ்க்கை அமோகமா இருக்க போகுது!!

    ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில், தங்கள் ராசியை மாற்றிக்கொண்டே இருக்கும். இதை ஜோதிடத்தில் கிரக பெயர்ச்சி என கூறுகின்றனர். இந்த கிரக மாற்றத்தில், ஏற்படும் சிறு மாற்றங்களும் ஒருவரது வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், புத்திகாரகனான புதன் பகவான் தற்போது மேஷத்தில் உள்ளார். இவர், மேஷ ராசிக்கு 2023 மார்ச் 31 ஆம் தேதி பெயர்ச்சி செய்தார். இதையடுத்து, 2023 ஏப்ரல் 21 ஆம் தேதி மேஷ ராசியில் வக்ர நிலையில் பயணிக்கத் தொடங்கினார். தற்போது, இவர் வக்ர நிலையிலேயே அஸ்தமனமாகி, நீண்டும் உதயமாகி உள்ளார்.

    MORE
    GALLERIES

  • 28

    புதன் வக்ர நிவர்த்தி…. இன்று முதல் இந்த ராசிகளின் வாழ்க்கை அமோகமா இருக்க போகுது!!

    இன்று ( மே 15, 2023) காலை 8:30 மணியளவில், புதன் மேஷ ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்து, நேர் பாதையில் பயணிக்க துவங்கியுள்ளார். இதனால், பல ராசியினருக்கு சுப பலன் கிடைக்கும். இருப்பினும், குறிப்பிட்ட சில ராசியினர் திடீர் பண வரவு, அதிர்ஷ்டம், மகிழ்ச்சி ஆகிய பலன்களை பெற உள்ளனர். அவர்கள் யார் என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

    MORE
    GALLERIES

  • 38

    புதன் வக்ர நிவர்த்தி…. இன்று முதல் இந்த ராசிகளின் வாழ்க்கை அமோகமா இருக்க போகுது!!

    மிதுனம் : உங்கள் ராசியின் 11 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடைந்த்துள்ளார். இதனால், நீங்கள் புதிய வருமான ஆதாரங்களைப் பெறுவீர்கள். பழைய முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். நீண்ட காலமாக தடைப்பட்டிருந்த வேலை, கூடிய விரைவில் முடிவடையும். உங்களின் நம்பிக்கை அதிகரிக்கும். வாகனம் அல்லது சொத்து வாங்குவதற்கான வாய்ப்புக்கள் அதிகரிக்கும். இதனால் சமூகத்தில் உங்களின் அந்தஸ்து அதிகரிக்கும்.

    MORE
    GALLERIES

  • 48

    புதன் வக்ர நிவர்த்தி…. இன்று முதல் இந்த ராசிகளின் வாழ்க்கை அமோகமா இருக்க போகுது!!

    கடகம் : உங்கள் ராசியின் 10 ஆம் வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடைந்த்துள்ளார். புதன் உங்களின் 12 ஆம் வீட்டில் அதிபதியாக இருப்பதால் வேலைக்காக வெளியூர் பயணம் செல்ல இது நல்ல நேரம். பணியில் உங்களின் புதிய முயற்சிகள் வெற்றி பெரும். சக ஊழியர்களின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் உங்கள் பணியை மாற்ற விரும்பினால், அதைச் செய்ய இது ஒரு நல்ல நேரம். எந்த விஷயத்திலும் அவசரம் காட்ட வேண்டாம்.

    MORE
    GALLERIES

  • 58

    புதன் வக்ர நிவர்த்தி…. இன்று முதல் இந்த ராசிகளின் வாழ்க்கை அமோகமா இருக்க போகுது!!

    சிம்மம் : உங்கள் ராசியின் 9 ஆம் வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடைந்த்துள்ளார். உங்கள் வாழ்க்கையில் பல சுப பலன்களை நீங்கள் பெற உள்ளீர்கள். வேலை தொடர்பான சில பயணங்களை மேற்கொள்வீர்கள். இதனால், உங்களுக்கு நல்ல ஆதாயம் கிடைக்கும். எதிர்பாராத பண வரவுகளை பெறுவீர்கள். வருமானத்தில் நல்ல உயர்வு இருக்கும்.

    MORE
    GALLERIES

  • 68

    புதன் வக்ர நிவர்த்தி…. இன்று முதல் இந்த ராசிகளின் வாழ்க்கை அமோகமா இருக்க போகுது!!

    கன்னி : கன்னி ராசிக்காரர்களுக்கு புதன் லக்ன அதிபதியாகவும், 10 ஆம் வீட்டு அதிபதியாகவும் உள்ளார். இந்நிலையில், உங்கள் ராசியின் 8 ஆம் வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடைந்த்துள்ளார். பரம்பரை சொத்துக்களை பெறுவதற்கு இது ஒரு நல்ல கட்டமாகும். உங்கள் தொழில் வாழ்க்கையில் இந்த கட்டத்தில் பல திடீர் நிகழ்வுகள் ஏற்படும். பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். நீட நாட்களாக உங்களுக்கு வராமல் இருந்த பணம் உங்கள் கைக்கு வந்து சேரும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

    MORE
    GALLERIES

  • 78

    புதன் வக்ர நிவர்த்தி…. இன்று முதல் இந்த ராசிகளின் வாழ்க்கை அமோகமா இருக்க போகுது!!

    தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு புதன் 7 ஆம் வீட்டிலும், 10 ஆம் வீட்டு அதிபதி 5 ஆம் வீட்டிலும் நேரடியாகப் பெறுகிறார். இது உங்கள் படைப்பாற்றலை அதிகரிக்கும் மற்றும் பொதுவாக வேலை மற்றும் வாழ்க்கை தொடர்பான சிறந்த தர்க்கரீதியான முடிவுகளை எடுக்க உதவும். வணிக ஒப்பந்தங்கள் வெற்றிகரமாக மாறும் மற்றும் இந்த கட்டத்தில் நீங்கள் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தலாம்.

    MORE
    GALLERIES

  • 88

    புதன் வக்ர நிவர்த்தி…. இன்று முதல் இந்த ராசிகளின் வாழ்க்கை அமோகமா இருக்க போகுது!!

    மீனம் : புத்த உங்கள் ராசியின் 2 ஆம் வீட்டில் வக்ர நிவர்த்தி அடைந்த்துள்ளார். இதனால், நிதி ரீதியாக உங்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். எதிர்பாராத பண வரவைப் பெற வாய்ப்புள்ளது. உங்களின் பேச்சு மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். இதனால் பேச்சு தொடர்பான வேலை செய்பவர்களுக்கு, இக்காலம் சிறப்பாக இருக்கும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரிகளுக்கு நல்ல லாபத்தை தரும் காலமாக இருக்கும். ஆனால், ஏழரை சனி நடப்பதால், சனியின் தாக்கத்தைக் குறைக்க, சனி பகவானை மறவாமல் வழிபட வேண்டும்.

    MORE
    GALLERIES