புதன் பகவான் மேஷ ராசிக்கு மார்ச் 31 அன்று பெயர்ச்சி ஆனார். இதை தொடர்ந்து ஏப்ரல் 21 ஆ தேதி மேஷ ராசியில் வக்ர பெயர்ச்சி செய்து வருகிறார். மே 15 ஆம் தேதி வரை புதன் வக்ர நிலையிலேயே இருப்பார். அதன் பின் நேர்கதியில் பெயர்ச்சி ஆக தொடங்குவார். வக்கிர பெயர்ச்சியால் சில ராசிக்காரர்கள் அசுப பலன்களை சந்திக்க உள்ளனர். அந்த ராசிக்காரர்கள் யார் என இந்த தொகுப்பில் பார்க்கலாம் பார்க்கலாம்.
ரிஷபம் : ரிஷபத்தில் விரய ஸ்தானத்தில் புதனின் வக்ரநிலை ஏற்படுவதால் நிதி நிலையில் ஏற்றத் தாழ்வுகள் ஏற்படுவதோடு, பணியிடத்தில் சில பிரச்னைகளை சந்திக்க நேரிடும். நீங்கள் பணியாற்றும் துறையில் வளர்ச்சி அடைய கடினமாக உழைக்க வேண்டியது இருக்கும். பணத்தை செலவிடுவதிலும், முதலீடு செய்வதிலும் கவனம் தேவை. இல்லையெனில் பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அதேசமயம், உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
மிதுனம் : மிதுன ராசிக்கு புதனின் வக்ர பெயர்ச்சி காலத்தில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். இது மட்டுமின்றி இன்று உங்கள் போட்டியாளர்களுக்கு கடும் போட்டியை கொடுக்க வாய்ப்புள்ளது. இந்த நேரத்தில், நீங்கள் வணிகத்தில் வெற்றியை அடைய சரியான திட்டமிடலுடன் நடந்து கொள்ள வேண்டும். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். நீங்கள் ஆரோக்கியத்தில் சரிவைக் காணலாம்.
கடகம் : கடக ராசிக்காரர்களுக்கு புதனின் அமைவு பெரியளவில் சாதகமாக இருக்காது. இந்த நேரத்தில் பல பொன்னான வாய்ப்புகள் உங்கள் கையை விட்டு நழுவ வாய்ப்புள்ளது. கடக ராசிக்காரர்கள் பணியிடத்தில் பல சவால்களை சந்திக்க நேரிடும். திட்டமிட்டு செயல்பட்டு உங்கள் இலக்குகளை நிறைவேற்றுங்கள். உங்கள் வருமானமும் ஏற்ற இறக்கமாக இருக்கும்.
கன்னி : கன்னி ராசி அதிபதியாக இருந்தாலும், அஷ்டம ஸ்தானமான மேஷ ராசியில் புதன் வக்ர நிலையில் இருப்பதால் கன்னி ராசிக்காரர்களுக்கு சில கடினமான சூழலே நிலவும். இந்த காலத்தில் உங்களின் எந்த ஒரு விஷயத்திற்கும் சரியான முடிவு எடுக்க முடியாமல் தவிப்பீர்கள். பணியிடத்தில் அதிக பணிச்சுமை இருக்கும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு நஷ்டம் ஏற்படலாம். உங்கள் குடும்பத்திற்காக நேரம் செலவிட முடியாமல் தவிப்பீர்கள்.
விருச்சிகம் : புதன் வக்ர நிலையில் அமைவதால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு வேலையில் அழுத்தம் அதிகமாக இருக்கும். கடின உழைப்புக்குப் பிறகும் உங்களுக்கு அங்கீகாரம் கிடைக்காமல் போகலாம். உங்கள் வேலையில் மேலதிகாரிகள் குறை காணலாம். இது மட்டுமின்றி, இந்த நேரத்தில் பணியிடத்தில் கடும் போட்டியைச் சந்திக்க வேண்டியிருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள், தோல் தொடர்பான பிரச்சனைகள் வரலாம்.