வியாழனும் புதனும் தற்போது மீன ராசியில் இணைந்துள்ளனர். மார்ச் 24 அன்று புதனும் வியாழனும் இணைந்து ரேவதி நட்சத்திரத்தில் நுழைந்தனர். அறிவு, பேச்சு மற்றும் வணிகத்தின் கிரகமாக புதன் கருதப்படுகிறது. மறுபுறம் வியாழன் கிரகம் கல்வி, ஞானம், கௌரவம், திருமணம், அதிர்ஷ்டம், ஆன்மீகம், குழந்தைகள் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறது. இந்த இரண்டு கிரகங்களும் சேர்ந்தால் இந்த 6 ராசிக்காரர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகளாக மாறுவார்கள். இவர்களுக்கு பணம், கார், வீடுகளுக்கு பஞ்சம் இருக்காது. இந்த அதிர்ஷ்டசாலிகள் யார் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.
விருச்சிகம் : வியாழன் மற்றும் புதன் ஆகியவற்றின் கலவையானது விருச்சிகத்தின் விதியையே மாற்றுகிறது.. பணம் இரண்டு கைகளில் வந்துக் கொண்டே இருக்கும். தொழில், வியாபாரத்தில் சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள். திருமணம் ஆனவர்களின் திருமணம் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். குடும்பச் சண்டைகள் தீரும், திருமண உறவுகள் இனிமையாக இருக்கும். கலைத்துறையை சார்ந்தவர்களுக்கு இந்தக் காலம் பொன்னான காலம்.