முகப்பு » புகைப்பட செய்தி » ஆன்மிகம் » சுத்தமாகுது திருப்பதி... இனிமேல் மாதம் ஒரு நாள் மாஸ் கிளீனிங்...!

சுத்தமாகுது திருப்பதி... இனிமேல் மாதம் ஒரு நாள் மாஸ் கிளீனிங்...!

Tirupati | திருப்பதி மலையில் இனிமேல் மாதம் ஒரு நாள் சுந்தர திருமலை, சுத்த திருமலை என்ற பெயரில் மாஸ் கிளீனிங் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • 112

    சுத்தமாகுது திருப்பதி... இனிமேல் மாதம் ஒரு நாள் மாஸ் கிளீனிங்...!

    தனியார் நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் திருப்பதி மலையில் சுகாதார பணியில் ஈடுபட்டிருந்த 2000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கடந்த வாரம் திடீரென்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    MORE
    GALLERIES

  • 212

    சுத்தமாகுது திருப்பதி... இனிமேல் மாதம் ஒரு நாள் மாஸ் கிளீனிங்...!

    இதனால் தினமும் சுமார் ஒரு லட்சத்திற்கு மேற்பட்டோர் வந்து செல்லும் திருப்பதி மலையில் சுகாதார பணிகளை தொய்வில்லாமல் மேற்கொள்வது தேவஸ்தானத்திற்கு பெரும் சவாலான காரியமாக அமைந்தது.

    MORE
    GALLERIES

  • 312

    சுத்தமாகுது திருப்பதி... இனிமேல் மாதம் ஒரு நாள் மாஸ் கிளீனிங்...!

    எனவே திருப்பதி மலையில் தூய்மை பணியில் ஈடுபடுவதற்காக ஒப்பந்தம் மூலம் ஊழியர்களை பணியில் அமர்த்தி இருக்கும் மற்ற சில நிறுவனங்களில் இருந்தும், திருப்பதி நகராட்சி உதவியுடனும் தூய்மை பணிகளை தேவஸ்தானம் நிர்வாகம் மேற்கொண்டு வந்தது.

    MORE
    GALLERIES

  • 412

    சுத்தமாகுது திருப்பதி... இனிமேல் மாதம் ஒரு நாள் மாஸ் கிளீனிங்...!

    மேலும் கூடுதலாக தேவஸ்தான நிர்வாக அதிகாரிகள் முதல், தேவஸ்தான அதிகாரிகள், ஊழியர்கள், தன்னார்வலர்கள் ஆகியோரும் தினமும் (தற்போது) திருப்பதி மலையில் தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    MORE
    GALLERIES

  • 512

    சுத்தமாகுது திருப்பதி... இனிமேல் மாதம் ஒரு நாள் மாஸ் கிளீனிங்...!

    தேவஸ்தான அதிகாரிகள் களத்தில் இறங்கி செய்த இந்த தூய்மை பணி மூலம் அவர்களுக்கு சில விஷயங்கள் தெரிய வந்தன. அதாவது சில இடங்களில் தூய்மை பணிகளை முழுவதும் மேற்கொள்ளாமல் இருப்பது தெரிய வந்தது.

    MORE
    GALLERIES

  • 612

    சுத்தமாகுது திருப்பதி... இனிமேல் மாதம் ஒரு நாள் மாஸ் கிளீனிங்...!

    எனவே மாதத்தில் ஒரு நாள் அத்தகைய இடங்களில் மாஸ் கிளீனிங் என்ற பெயரில் 2000 பேரை பயன்படுத்தி தூய்மை பணியை மேற்கொள்ள தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி முடிவு செய்தார்.

    MORE
    GALLERIES

  • 712

    சுத்தமாகுது திருப்பதி... இனிமேல் மாதம் ஒரு நாள் மாஸ் கிளீனிங்...!

    தேவஸ்தானத்தின் முடிவிற்கு திருப்பதிய எஸ் பி பரமேஸ்வர ரெட்டி மற்றும் நகராட்சி அதிகாரிகள் ஆகியோர் ஒத்துழைப்பு கொடுக்க முன்வந்தனர்.

    MORE
    GALLERIES

  • 812

    சுத்தமாகுது திருப்பதி... இனிமேல் மாதம் ஒரு நாள் மாஸ் கிளீனிங்...!

    அதன் அடிப்படையில் முதல்முறையாக இம்மாதம் 13ஆம் தேதி திருப்பதி மலையில் உள்ள இரண்டு மலைப் பாதைகள், மற்றும் இரண்டு படிக்கட்டு வழிகள் ஆகியவற்றை முழுவதுமாக சுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 912

    சுத்தமாகுது திருப்பதி... இனிமேல் மாதம் ஒரு நாள் மாஸ் கிளீனிங்...!

    அப்போது சாலைகள், படிக்கட்டுகள் ஆகியவற்றை சுத்தம் செய்வதுடன் அந்த பகுதியில் பக்தர்கள் விட்டு சென்ற பிளாஸ்டிக் பாட்டில்கள் உள்ளிட்ட மற்ற பொருட்களை அப்புறப்படுத்தவும் தேவையான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

    MORE
    GALLERIES

  • 1012

    சுத்தமாகுது திருப்பதி... இனிமேல் மாதம் ஒரு நாள் மாஸ் கிளீனிங்...!

    2000 பேரை ஒரே நாளில் தூய்மை பணியில் ஈடுபடுத்துவதால் அவர்களுக்கு தேவையான உணவு,குடிநீர், டீ, காபி, மாஸ்க், போக்குவரத்து வசதி, தூய்மை பணிக்கு தேவையான பொருட்கள் மற்றும் சேகரிக்கப்பட்ட குப்பைகளை அப்புறப்படுத்துவது ஆகியவற்றுக்கு தேவையான ஏற்பாடுகளை தேவஸ்தானம் முழு வீச்சில் செய்து வருகிறது.

    MORE
    GALLERIES

  • 1112

    சுத்தமாகுது திருப்பதி... இனிமேல் மாதம் ஒரு நாள் மாஸ் கிளீனிங்...!

    ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு ஒரு குழு என்ற அடிப்படையில் தூய்மை பணியில் ஈடுபட இருக்கும் தேவஸ்தான ஊழியர்கள், தன்னார்வலர்கள், சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோர் உள்ளிட்ட 2000 பேரையும் சிறு சிறு குழுக்களாக பிரித்து பணியில் ஈடுபடுத்த முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன. அதேபோல் ஒவ்வொரு குழுவிலும் உள்ள தேவஸ்தானத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவரை டீம் லீடராக நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 1212

    சுத்தமாகுது திருப்பதி... இனிமேல் மாதம் ஒரு நாள் மாஸ் கிளீனிங்...!

    இனிமேல் ஒவ்வொரு மாதமும் ஒருநாள் சுந்தர திருமலை, சுத்த திருமலை என்ற பெயரில் இந்த செயல் திருப்பதி மலையில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செயலில் பக்தர்கள் தங்களை ஈடுபடுத்தி கொள்ள தடை ஏதும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES