இதில் தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மதியம் 12 மணி அளவில் கோயிலை வந்தடைந்தது. விழாவில் வில்லியனூர், புதுச்சேரி உள்பட பல்வேறு பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து நாளை மாசிமக விழாவின் சிகர நிகழ்ச்சியாக கோயில் அருகே உள்ள சங்கராபரணி ஆற்றங்கரையில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது.