ஜோதிடத்தில் முக்கியமானதாக கருதப்படும் 9 கிரகங்களும் குறிப்பிட்ட கால நிலையில் பெயர்ச்சி செய்து கொண்டே இருக்கும். அந்தவகையில், தேவர்களின் தளபதியான செவ்வாய் பூமி காரகன் என அழைக்கப்படுபவர். தைரியம், ஆற்றல் மற்றும் வேகம் ஆகியவற்றைத் தரக்கூடிய செவ்வாய், வரும் 13 ஆம் தேதி முதல் மே 10 ஆம் தேதி வரை இரண்டு மாதங்கள் தனது பகை கிரகமான புதன் ஆட்சி செய்யும் மிதுனத்திற்கு இடம் பெயர்கிறார். இதனால், சில ராசிகள் நஷ்டத்தை சந்திப்பார்கள். அந்த ராசிக்காரர்கள் யார் என இங்கே பார்க்கலாம்.
ரிஷபம் : மிதுனத்திற்கு பெயரும் செய்வாய், ரிஷபத்திற்கு சாதகமாக இருக்காது. இந்த காலங்களில் நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. நீங்கள் என்ன செய்தாலும், அந்த செயலில் நிதானமாக இருப்பது நல்லது. குடும்ப விஷயத்தில் அனுசரித்துச் செல்வது நல்லது. உங்கள் காதல் வாழ்க்கையில் சிக்கல் ஏற்படலாம். அலுவலகத்தில் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. துர்க்கை அம்மனுக்கு சிவப்பு மலர்களை அர்ப்பணித்து வழிபடுங்கள்.
மிதுனம் : உங்கள் சொந்த ராசியில் சஞ்சரிக்க உள்ள செவ்வாய் பகவான் பல நேரங்களில் சாதகமற்ற சூழலை உங்களுக்கு ஏற்படுத்துவார். தொழில் வாழ்க்கையில் சில திடீர் மாற்றங்கள் ஏற்படும். மந்தமான மனநிலையை உணர்வீர்கள். உங்கள் உடல் நலனில் கவனம் செலுத்துவது அவசியம். தேவையற்ற தகராறு, வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். பரிகாரமாக அனுமன் சாலிசாவை தினமும் குறைந்தது 3 முறை படிக்கவும்.
கடகம் : செவ்வாய் மிதுன ராசியில் சஞ்சரிப்பது கடக்க ராசியினருக்கு சாதகமாக கருதப்படுவதில்லை. இந்த சஞ்சாரத்தால் உங்கள் ஜாதகத்தில் விபரீத ராஜயோகம் உண்டாகும். இந்த நேரத்தில், எதிரிகள் விஷயத்தில் கவனம் தேவை.ஆரோக்கியம் பலவீனமாக இருக்கும். தேவையற்ற மன அழுத்தம் உங்களுக்கு ஏற்படலாம். பரிகாரமாக வலது கையில் செம்பு வளையல் அணியவும்.
தனுசு : செவ்வாயின் சஞ்சாரம் செய்வதால் உங்களுக்கு நல்ல பலன்களை ஏற்படுத்தாது. உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உங்கள் உறவில் அனுசரித்துச் செல்வது நல்லது. கோவத்தை கட்டுப்படுத்துவது உங்கள் எதிர்காலத்திற்கு நல்லது. கூட்டு வியாபாரம், தொழில் குறித்த எந்த முடிவையும் கலந்தாலோசித்து எடுக்கவும். இல்லையெனில் சற்று மோசமான விளைவை ஏற்படுத்தும். வீண் செலவுகளை தவிர்க்கவும். ஏனென்றால், இந்த காலத்தில் பண விரயம் ஏற்படலாம். பரிகாரமாக ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் அனுமன் கோவிலில் வெல்லம் தானம் செய்யுங்கள்.
கும்பம் : கும்ப ராசியினருக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாயின் சஞ்சாரம் நிகழ்கிறது. இதனால், குழந்தையுடன் தகராறு அதிகரிக்கலாம். குழந்தைகளின் ஆரோக்கியம் மோசமடையலாம் மற்றும் உங்களிடம் நடத்தையில் நிறைய மாற்றங்களைக் காணலாம். வீடு, மனை சொத்து சார்ந்த விஷயங்களில் நிதானம் தேவை. நீங்கள் செய்யும் தொழில், வியாபாரத்தில் ரிஸ்க் எடுப்பதைத் தவிர்க்கவும்.