முகப்பு » புகைப்பட செய்தி » ஆன்மிகம் » செவ்வாய் பெயர்ச்சியால் உருவாகும் தரித்ர யோகம்… பிரச்னைகளை சந்திக்கப்போகும் ராசிகள்!

செவ்வாய் பெயர்ச்சியால் உருவாகும் தரித்ர யோகம்… பிரச்னைகளை சந்திக்கப்போகும் ராசிகள்!

Mars Transit in Cancer on 10th May 2023 | கடக ராசிக்குள் இடம் பெயரும் செவ்வாய். செவ்வாய் பெயர்ச்சியால் உருவாகும் தரித்ர யோகம். செவ்வாய் பெயர்ச்சியின் போது, சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்கள் ஏற்படும்.

 • 15

  செவ்வாய் பெயர்ச்சியால் உருவாகும் தரித்ர யோகம்… பிரச்னைகளை சந்திக்கப்போகும் ராசிகள்!

  ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களின் ராசியை மாற்றிக்கொண்டே இருக்கும். இதை தான் ஜோதிடத்தில் கிரகப்பெயர்ச்சி என்கிறோம். இது ஆன்மீக ரீதியாக மிகவும் முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. அந்தவகையில், மே 10 ஆம் தேதி நவ கிரகங்களின் தளபதியான செவ்வாய் மிதுனத்தில் இருந்து கடக ராசிக்கு பெயர்ச்சி செய்ய உள்ளார். செவ்வாய் பெயர்ச்சியால் தரித்ர யோகமும் உருவாகிறது. இந்த யோகம் சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களை வழங்கும். ஏனென்றால், இது ஒரு அசுப யோகம். அந்தவகையில், மே மாதம் பல இழப்புகளை சந்திக்க உள்ள ராசிக்காரர்கள் யார் என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

  MORE
  GALLERIES

 • 25

  செவ்வாய் பெயர்ச்சியால் உருவாகும் தரித்ர யோகம்… பிரச்னைகளை சந்திக்கப்போகும் ராசிகள்!

  மிதுனம் : செவ்வாய் பெயர்ச்சியால் உருவாகும் தரித்ர யோகம் மிதுன ராசிக்காரர்களுக்கு பல பிரச்சனைகளைத் தரும். உங்களின் வருமானம் குறைவாவும், செலவுகள் அதிகமாகவும் இருக்கும். மேலும், கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையும் உருவாகலாம். புதிதாக முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. இல்லையெனில், பெரிய இழப்புகளை சந்திக்க நேரிடும். எல்லா விஷயங்களிலும் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். எந்த முடிவையும் சிந்தித்து எடுப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும் அதிக அக்கறை செலுத்த வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 35

  செவ்வாய் பெயர்ச்சியால் உருவாகும் தரித்ர யோகம்… பிரச்னைகளை சந்திக்கப்போகும் ராசிகள்!

  துலாம் : துலாம் ராசிக்காரர்கள் தரித்ர யோகத்தால் பல்வேறு சவால்களை சந்திக்க நேரிடும். வருமானத்தை விட செலவு 3 மடங்கு அதிகரிக்கும். புதிய விஷயங்களில் முதலீடு செய்வதைத் தவிர்க்கவும். இருக்கும் பணத்தை சேமித்து வைக்க முயற்சிக்கவும். இது உங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் உதவும். குடும்ப செலவுகளும் அதிகரிக்கும். மொத்தத்தில் மே மாதம் துலாம் ராசியினருக்கு நஷ்டத்தை மட்டுமே ஏற்படுத்தும்.

  MORE
  GALLERIES

 • 45

  செவ்வாய் பெயர்ச்சியால் உருவாகும் தரித்ர யோகம்… பிரச்னைகளை சந்திக்கப்போகும் ராசிகள்!

  மகரம் : செவ்வாய் பெயர்ச்சியால் மகர ராசிக்காரர்களுக்கு மோசமான பலன்களை கொடுக்கும். எனவே, இந்த மாதம் நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்களை ஏமாற்ற சுத்தி இருக்கும் அனைவரும் முயற்சிப்பார்கள். உங்களின் நிதி நிலை மோசமாக பாதிக்கப்படும். திருமண வாழ்வில் பதற்றம் அதிகரிக்கும். பொறுமையாக இருக்க முயற்சிக்க வேண்டும். இல்லாவிட்டால் உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.

  MORE
  GALLERIES

 • 55

  செவ்வாய் பெயர்ச்சியால் உருவாகும் தரித்ர யோகம்… பிரச்னைகளை சந்திக்கப்போகும் ராசிகள்!

  மீனம் : செவ்வாய் பெயர்ச்சியால் உருவாகும் தரித்ர யோகத்தால் மீன ராசியினர் பல இன்னல்களை சந்திப்பார்கள். நீங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் கவனமாக இருக்க வேண்டும். உடல் மற்றும் மன ரீதியாக பிரச்சனைகளை சந்திக்க அதிக வாய்ப்பு உள்ளது. பண பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. எந்த ஒரு முடிவையும் எடுப்பதற்கு முன் அனுபவசாலிகளிடம் கலந்தாலோசித்து எடுப்பது மிகவும் நல்லது. எந்த பிரச்சனையாக இருந்தாலும், அமைதியான முறையில் பேசித்தீர்ப்பது நல்லது.

  MORE
  GALLERIES