கானும் பொங்கல் அன்று திருப்பதி மலையில் பாரிவேட்டை என்ற பெயரில் வேடுபறி உற்சவம் நடைபெறுவது வழக்கம்.
2/ 8
அந்த வகையில் காணும் பொங்கல் நாளான நேற்று வேடுபறி உற்சவம் திருப்பதி மலையில் நடைபெற்றது.
3/ 8
வேடு பறி உற்சவத்தை முன்னிட்டு பஞ்ச ஆயுதங்களை தரித்து உற்சவர் மலையப்ப சுவாமி கோவிலில் இருந்து புறப்பட்டார்.
4/ 8
அவருடன் கிருஷ்ணர் மற்றொரு திருவாச்சியில் எழுந்தருளி புறப்பட்டார்.
5/ 8
ஏழுமலையான் கோவிலில் இருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாரிவேட்டை மண்டபத்தை உற்சவர்கள் ஊர்வலம் ஆக அடைந்தனர்.
6/ 8
அங்கு உற்சவர்களுக்கு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன.
7/ 8
தொடர்ந்து மலையப்ப சுவாமி அங்குள்ள வனப்பகுதியில் மூன்று முறை முன்னும் பின்னுமாக எடுத்து செல்லப்பட்ட நிலையில் கோவில் அர்ச்சகர் வனப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த பொய் மான், புலி ஆகிய பொம்மைகள் மீது வெள்ளி வேல் ஒன்றை வீசி எறிந்தார்.
8/ 8
தொடர்ந்து உற்சவர்களுக்கு கற்பூர ஆரத்தி சமர்ப்பிக்கப்பட்டது. அதன் பின் உற்சவர்கள் அங்கிருந்து புறப்பட்டு ஊர்வலமாக ஏழுமலையான் கோவிலை அடைந்தனர்.