முகப்பு » புகைப்பட செய்தி » ஆன்மிகம் » மகா சிவராத்திரி 2023 : சிவராத்திரிக்கு முன் பாம்பு கனவில் வந்தால் என்ன நடக்கும் தெரியுமா?

மகா சிவராத்திரி 2023 : சிவராத்திரிக்கு முன் பாம்பு கனவில் வந்தால் என்ன நடக்கும் தெரியுமா?

mahashivratri 2023 | இந்த ஆண்டு பிப்ரவரி 18 ஆம் தேதி மகாசிவராத்திரி கொண்டாடப்பட உள்ளது. சிவராத்திரிக்கு முன் கனவில் பாம்பு கண்டால் என்ன நடக்கும்? உங்களுக்கு ஏதேனும் கனவுகள் வந்தால் பலன் என்னவாக இருக்கும்? அறிஞர்கள் என்ன சொல்கிறார்கள் என்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

 • 110

  மகா சிவராத்திரி 2023 : சிவராத்திரிக்கு முன் பாம்பு கனவில் வந்தால் என்ன நடக்கும் தெரியுமா?

  உளவியலின் படி, எதிர்காலத்தில் நடக்கும் சில விஷயங்கள் நம் கனவில் வரும். அவற்றைச் சரியாகப் புரிந்து கொண்டால்... வரப்போகும் ஆபத்துக்களைத் தவிர்க்கலாம் என்பது ஐதீகம். சில சமயங்களில் அந்த கனவுகள் சுப அறிகுறிகளாக இருக்கும் என்று ஜோதிடர்கள் கூறுகிறார்கள். சிவராத்திரியை முன்னிட்டு சிவபெருமான் கனவில் முன்கூட்டியே அறிவுரைகளை வழங்குவதாக கூறப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 210

  மகா சிவராத்திரி 2023 : சிவராத்திரிக்கு முன் பாம்பு கனவில் வந்தால் என்ன நடக்கும் தெரியுமா?

  இந்து நாட்காட்டியின் படி, மகாசிவராத்திரி, மாசி மாதத்தில் கிருஷ்ண பக்ஷத்தின் பதினான்காவது நாளில் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, மகாசிவராத்திரி பிப்ரவரி 18, சனிக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இந்தத் தேதியில் ருத்ராபிஷேகம் செய்வதால், சிவபெருமான் விரைவில் மகிழ்ச்சி அடைகிறார். விரதம், வழிபாடு, விழிப்பு, சிவ நாமத்தை தியானம் செய்தல் ஆகியன சிவனின் அருளைப் பெறச் செய்யும். மஹாசிவராத்திரிக்கு முன்பு வரும் சில கனவுகள் நல்ல நிகழ்வுகளைக் குறிக்கின்றன. இந்த கனவுகள் உங்களுக்கு சிவபெருமானின் ஆசிகள் இருப்பதைக் குறிக்கிறது. மகாசிவராத்திரிக்கு முன்பு வரும் கனவுகள் மகிழ்ச்சியை தரும்.

  MORE
  GALLERIES

 • 310

  மகா சிவராத்திரி 2023 : சிவராத்திரிக்கு முன் பாம்பு கனவில் வந்தால் என்ன நடக்கும் தெரியுமா?

  அபிஷேகம் : மகாசிவராத்திரிக்கு முன், சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வது போல் கனவு கண்டால், சிவபெருமான் மகிழ்ச்சி அடைந்து, அந்த நபரின் அனைத்து கஷ்டங்களையும் விரைவில் நீக்குவார் என்று அர்த்தம். மேலும் இந்த கனவு வாழ்க்கையில் மகிழ்ச்சியின் வருகையைக் குறிக்கிறது.

  MORE
  GALLERIES

 • 410

  மகா சிவராத்திரி 2023 : சிவராத்திரிக்கு முன் பாம்பு கனவில் வந்தால் என்ன நடக்கும் தெரியுமா?

  சிவராத்திரிக்கு முன் கனவில் வில்வ இலைகளையும், வில்வ மரத்தையும் கண்டால், நிதி பிரச்சனைகள் தீரும். அத்தகைய கனவு வந்தால், அனைத்து பிரச்சனைகளும் விரைவில் முடிவடையும் மற்றும் நிதி சிக்கல்கள் தீர்க்கப்படும்.

  MORE
  GALLERIES

 • 510

  மகா சிவராத்திரி 2023 : சிவராத்திரிக்கு முன் பாம்பு கனவில் வந்தால் என்ன நடக்கும் தெரியுமா?

  ருத்ராட்சம்: மஹாசிவராத்திரிக்கு முன் கனவில் ருத்ராட்சம் பார்ப்பது மிகவும் மங்களகரமானது. இத்தகைய கனவுகள் துன்பங்கள் மற்றும் நோய்கள். குறைபாடுகளை நீக்குவதைக் குறிக்கிறது. நிலுவையில் உள்ள அனைத்து பணிகளையும் முடிக்க முடியும்.

  MORE
  GALLERIES

 • 610

  மகா சிவராத்திரி 2023 : சிவராத்திரிக்கு முன் பாம்பு கனவில் வந்தால் என்ன நடக்கும் தெரியுமா?

  கருப்பு சிவலிங்கம் : கருப்பு சிவலிங்கம் சிவபெருமானின் சின்னம். மஹாசிவராத்திரிக்கு முன் உங்கள் கனவில் கருப்பு சிவலிங்கத்தைக் கண்டால், உங்கள் வேலையில் விரைவில் பதவி உயர்வு கிடைக்கும் என்று அர்த்தம்.

  MORE
  GALLERIES

 • 710

  மகா சிவராத்திரி 2023 : சிவராத்திரிக்கு முன் பாம்பு கனவில் வந்தால் என்ன நடக்கும் தெரியுமா?

  பாம்பு : மகாசிவராத்திரிக்கு முன் பாம்பு அல்லது பாம்புகளின் கூடுகளைக் கண்டால், அது உங்கள் செழிப்பு மற்றும் செல்வத்தின் அடையாளமாக கருதப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 810

  மகா சிவராத்திரி 2023 : சிவராத்திரிக்கு முன் பாம்பு கனவில் வந்தால் என்ன நடக்கும் தெரியுமா?

  நந்தி : சிவபெருமானின் வாகனமான நந்தி இல்லாவிட்டால் சிவபெருமானின் குடும்ப வழிபாடு முழுமையடையாது. சிவராத்திரிக்கு முன்போ அல்லது சிவராத்திரியின்போதோ உங்கள் கனவில் நந்தியை கண்டால் சிவபெருமானின் அருள் கிடைக்கும் என்று அர்த்தம். இந்த கனவு உங்கள் வெற்றியைக் குறிக்கிறது.

  MORE
  GALLERIES

 • 910

  மகா சிவராத்திரி 2023 : சிவராத்திரிக்கு முன் பாம்பு கனவில் வந்தால் என்ன நடக்கும் தெரியுமா?

  திரிசூலம்: சிவன் எப்போதும் திரிசூலம் வைத்திருப்பார். திரிசூலத்திற்கு 3 விளிம்புகள் உள்ளன. அவை காமம், கோபம் மற்றும் பேராசை ஆகியவற்றைக் குறிக்கின்றன. படைப்பின் ஒற்றுமையை நிலைநாட்ட சிவபெருமான் திரிசூலத்தைப் பயன்படுத்துகிறார். மஹாசிவராத்திரியின் போது இந்த கனவு வந்தால், மகாதேவன் உங்கள் எல்லா கஷ்டங்களையும் அழிக்கப் போகிறார் என்று அர்த்தம்.

  MORE
  GALLERIES

 • 1010

  மகா சிவராத்திரி 2023 : சிவராத்திரிக்கு முன் பாம்பு கனவில் வந்தால் என்ன நடக்கும் தெரியுமா?

  உடுக்கை: புராணங்களின்படி.. சிவபெருமான் 14 முறை உடுக்கை வாசித்தார். அதன் பிறகு படைப்பில் ராகங்களும் தாளங்களும் பிறந்தன. எனவே மஹாசிவராத்திரி அன்று உடுக்கையை தரிசிப்பது மிகவும் சிறப்பானது. உடுக்கையின் கனவு வாழ்க்கையின் ஸ்திரத்தன்மையைக் குறிக்கிறது. இந்த கனவு உங்கள் வீட்டில் திருமணம் நடக்க போவதை குறிக்கும் அடையாளம்.

  MORE
  GALLERIES