கைலாஷ்நாத் மகாதேவ் சிவன் சிலை: கைலாஷ்நாத மஹாதேவ் நேபாளத்தில் மிக உயரமான நின்ற நிலையில் உள்ள சிவனின் சிலையாக விளங்குகிறது. சிலை தாமிர வர்ணத்திலும் முகம் அமைதியாகவும், இனிமையானதாகவும், பக்தர்களை வரவேற்பதாகவும் உள்ளது. இந்த சிலை நேபாளத்தின் தலைநகரான காத்மண்டுவில் அமைந்துள்ளது. 144 அடி (44 மீ) உயரம் கொண்ட இந்த சிலை, செம்பு, துத்தநாகம், கான்கிரீட் மற்றும் எஃகு பயன்படுத்தி செய்துள்ளார்கள். உயரமான சிலைகள் பட்டியல் படி, கைலாஷ்நாத் மகாதேவ் உலகின் மிகச்சிறந்த சிலையாக உள்ளது
முருதேஸ்வரர் சிவன் சிலை: கர்நாடக மாநிலத்தில் உள்ள பட்கல் என்னுமிடத்தில் உள்ள முருதேஸ்வரர் கோவில் அருகில் இந்த சிலை அமைந்துள்ளது புகழ்பெற்ற இந்த கோவிலில் இருக்கும் சிவன் சிலை உலகின் இரண்டாவது மிகப்பெரிய சிவன் சிலை. கடற்கரையின் அருகில் இஅமிந்துள்ல இது 122 அடி உயரம் கொண்டது. வெள்ளி நிறத்தில் சிவன் பிரமாண்டமாக தெரிகிறார்.