முகப்பு » புகைப்பட செய்தி » ஆன்மிகம் » மகா சிவராத்திரி 2023: சிவராத்திரி அன்று கண் விழிக்க முடியவில்லையா? சிவபெருமானின் ஆசிர்வாதத்தை பெற இதை மட்டும் செய்யுங்கள்..!

மகா சிவராத்திரி 2023: சிவராத்திரி அன்று கண் விழிக்க முடியவில்லையா? சிவபெருமானின் ஆசிர்வாதத்தை பெற இதை மட்டும் செய்யுங்கள்..!

Maha shivratri 2023 | மகா சிவராத்திரி விரதமானது எம பயத்தை நீக்கும். சிவனடியார்களை எமதூதர்கள் நெருங்க அஞ்சுவார்கள் என சிவ புராணம் கூறுகிறது.

 • 16

  மகா சிவராத்திரி 2023: சிவராத்திரி அன்று கண் விழிக்க முடியவில்லையா? சிவபெருமானின் ஆசிர்வாதத்தை பெற இதை மட்டும் செய்யுங்கள்..!

  மகாசிவராத்திரி அன்று கண் விழித்திருந்து விரதமிருந்து இறைவனை வணங்கும்போது முழுமையான இறைவன் அருள் கிடைக்கும். நினைத்த காரியம் நடக்கும் என்பது நம்பிக்கை.  சிவ ராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கிப் போகும். யார் வேண்டுமானாலும் சிவராத்திரி விரதத்தை மேற்கொள்ளலாம். மகாசிவராத்திரி நாளில் இரவெல்லாம் கண் விழித்து சிவபெருமானை வழிபட வேண்டும். இதனால் இறைவன் அருள் கிடைப்பதோடு நினைத்த காரியம் நடக்கும் என்பது ஐதீகம்.

  MORE
  GALLERIES

 • 26

  மகா சிவராத்திரி 2023: சிவராத்திரி அன்று கண் விழிக்க முடியவில்லையா? சிவபெருமானின் ஆசிர்வாதத்தை பெற இதை மட்டும் செய்யுங்கள்..!

  ஆனால் அப்படி சிவராத்திரி அன்று கண் விழிக்க முடியாதவர்கள் கவலைப்பட வேண்டாம். அவர்களும் சிவனின் முழு அருளை பெற முடியும். எல்லோருக்கும் உடல்நிலை ஒரே மாதிரியாக இருக்காது. விரதம் இருக்கவும், கண்விழிக்கவும் ஒத்துழைக்காது. ஆகவே உடல்நிலை சரியில்லாதவர்கள் விரதம் இருக்க முடியாதவர்கள் கவலைப்பட வேண்டாம்.

  MORE
  GALLERIES

 • 36

  மகா சிவராத்திரி 2023: சிவராத்திரி அன்று கண் விழிக்க முடியவில்லையா? சிவபெருமானின் ஆசிர்வாதத்தை பெற இதை மட்டும் செய்யுங்கள்..!

  மகா சிவராத்திரி தினத்தில் காலையிலேயே குளித்து விட்டு சிவனை நினைத்து விளக்கேற்றி விட வேண்டும். அதன் பிறகு மனதார சிவனை நினைத்து 1 மணி நேரம் தொடர்ந்து ஒரே இடத்தில் அமர்ந்து ‘சிவசிவ’ என்ற மந்திரத்தை உச்சரியுங்கள்.

  MORE
  GALLERIES

 • 46

  மகா சிவராத்திரி 2023: சிவராத்திரி அன்று கண் விழிக்க முடியவில்லையா? சிவபெருமானின் ஆசிர்வாதத்தை பெற இதை மட்டும் செய்யுங்கள்..!

  எத்தனை முறை மந்திரத்தை உச்சரிப்பது என்ற கணக்கு வைத்துக்கொள்ள வேண்டாம். ஒரு மணி நேரம் இறைவனுக்காக இந்த நாமத்தை சொன்னாலே போதும். சிவராத்திரி அன்று விரதம் இருந்த முழு பலனை நீங்கள் அடைந்து விடுவீர்கள். அதேபோல சிவராத்திரியில் மூன்றாம் கால பூஜையில் சிவபெருமானை தரிசனம் செய்வது மிக மிக சிறப்பு.

  MORE
  GALLERIES

 • 56

  மகா சிவராத்திரி 2023: சிவராத்திரி அன்று கண் விழிக்க முடியவில்லையா? சிவபெருமானின் ஆசிர்வாதத்தை பெற இதை மட்டும் செய்யுங்கள்..!

  18ம் தேதி நள்ளிரவு சரியாக 12.00 மணிக்கு சிவ ஆலயங்களில் மூன்றாம் கால பூஜை நடைபெறும். அதில் கலந்து கொண்டால் மிகவும் நல்லது. அத்துடன் அன்று சிவனுக்கு வில்வ இலையை சாற்றுவது மிக மிக அற்புதமான பலன்களை கொடுக்கும்.

  MORE
  GALLERIES

 • 66

  மகா சிவராத்திரி 2023: சிவராத்திரி அன்று கண் விழிக்க முடியவில்லையா? சிவபெருமானின் ஆசிர்வாதத்தை பெற இதை மட்டும் செய்யுங்கள்..!

  நீங்கள் வேண்டிய வரத்தை இந்த நேரத்தில் கேட்டால் அது உடனடியாக நிறைவேறும். சிவபெருமான் மனம் குளிர்ந்து வரங்களை அளிக்கக்கூடிய மிக சிறப்பு வாய்ந்த நேரம் இது. காரணம் இந்த மூன்றாம் கால பூஜையில் தான் பார்வதி தேவி சிவபெருமானை வழிபட்டதாக புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES