Lunar eclipse 2023 : இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மே 5 ஆம் தேதி புத்த பூர்ணிமா அன்று நிகழ உள்ளது. ஜோதிடத்தில் கிரகணம் அசுபமாக கருதப்படுகிறது. எனவேதான், கிரகண நாட்களில் எந்த சுப காரியங்களையும் செய்ய வேண்டாம் என கூறப்படுகிறது. கிரகணம் நிகழும் காலம், திதி ஆகியவற்றை கொண்டு சுப மற்றும் அசுப பலன்கள் கணிக்கப்படுகிறது. அந்தவகையில், இந்த ஆண்டில் ஏற்படும் முதல் கிரகணம் பகுதி சந்திர கிரகணம் பல ராசிகளுக்கு நல்ல பலன்களை கொடுக்க உள்ளது.
மே 5 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று நிகழும் கிரகணம், ஒரு பகுதி சந்திர கிரகணம் ஆகும். இது உலகின் பெரும்பாலான பகுதியில் தெரியும். இந்த கிரகணம் கிட்டத்தட்ட 4 மணி நேரம் நிகழ உள்ளது. சூரியன் - பூமி - சந்திரன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும் போது சந்திரன் கிரகணம் ஏற்படுகிறது. அதாவது சூரியன் - சந்திரன் இடையே ஒரே நேர் கோட்டில் பூமி வருவதால் பூமியின் நிழல் சந்திரன் மீது விழுவதால், அது மறைக்கப்படும் நிகழ்வு சந்திர கிரகணம் என அழைக்கிறோம்.
கிரகணம் எங்கு தெரியும்? : நிகழ உள்ள பகுதி சந்திர கிரகணம் உலகில் உள்ள 7 கண்டங்களில் 5 கண்டங்களில் நன்றாக தெரியும் என கூறப்பட்டுள்ளது. அதாவது, ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா, அண்டார்டிகா ஆகிய 5 கண்டங்களில் வசிப்பவர்கள் தெளிவாக பார்க்கலாம். இது தவிர, பசுபிக் அட்லாண்டிக், இந்திய பெருங்கடல் ஆகிய இடங்களிலும் கிரகணத்தை தெளிவாக பார்க்கலாம்.
சந்திர கிரகணம் ஏற்படும் நேரம் : இந்த பகுதி சந்திர கிரகணம் உலக நேரப்படி மே 5 ஆம் தேதி பிற்பகல் 3.14 மணிக்கு தொடங்கி மாலை 7.31 மணி வரை சுமார் 4 மணிநேரம் நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி, பகுதி சந்திர கிரகணம் இரவு 8.44 மணிக்கு தொடங்குகிறது. இரவு 10.52 மணிக்கு கிரகணம் உச்சம் பெற்று, அதிகாலை 1 மணிக்கு நிறைவடைகிறது. கிரகணத்தால் சில ராசிக்காரர்கள் சுப மற்றும் அசுப பலன்களை பெறுவார்கள். அந்தவகையில், சுப பலன்களை பெரும் ராசிக்காரர்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மேஷம்: சந்திர கிரகணத்தின் போது, மேஷ ராசிக்காரர்களுக்கு சுப வாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக நீங்கள் எதிர்பாத்திருந்த, பதவி மற்றும் ஊதிய உயர்வு கிடைக்கும். வியாபாரம் பெருகும், பணம் லக்ஷ்மியின் இருப்பிடமாக இருக்கும். நீங்கள் நினைத்தது எல்லாம், வெற்றிகரமாக செய்து முடிப்பதற்கான சூழல் அமையும்.
மிதுனம் : அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். பதவி உயர்வு கிடைக்கும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும் மற்றும் நீங்கள் அதிக பணம் சம்பாதிப்பீர்கள். தொழிலதிபர்கள் புதிய முயற்சிகளில் முதலீடு செய்து நல்ல லாபத்தைப் பெறுவார்கள். வெளியூர் பயணம் செய்யும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும், அது உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
சிம்மம் : சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த சந்திர கிரகணம் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், வளத்தையும் தரும். உங்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். மூதாதையர் சொத்து தொடர்பான சில நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். மற்றவர்களிடம் பேசும் போது உங்கள் தொனியை நீங்கள் கவனிக்க வேண்டும் மற்றும் வாக்குவாதங்கள் மற்றும் மோதல்களில் இருந்து விலகி இருப்பது நல்லது.
மீனம்: உங்கள் நிதி நிலை மேம்படும். பழைய நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும், வீட்டில் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும், வருமானம் அதிகரிக்கும். புதிய வேலைவாய்ப்பு குறித்த ஏராளமான வாய்ப்புகள் கிடைக்கும். சமூகத்தில், உங்கள் நற்பெயர் அப்படியே இருக்கும். உங்கள் வசீகரமான ஆளுமையால் மக்கள் உங்களை விரும்புவார்கள். லக்ஷ்மி தேவியின் ஆசீர்வாதம் உங்களுக்கு இருப்பதால், உங்களுக்கு நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் உங்கள் கைக்கு வரும்.