இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் (Lunar Eclipse 2023) மே 5, 2023 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சித்ராபௌர்ணமி அன்று நிகழ உள்ளது. சூரியனுக்கும் நிலவுக்கும் இடையில் பூமி வரும் போது சந்திர கிரகணம் (chandra grahan) நிகழ்கிறது. மே 5 ஆம் தேதி ஏற்பட உள்ள பகுதி சந்திர கிரகணத்தின் தோஷம் நீங்க, கிரகணம் முடிந்தவுடன் நீங்கள் கட்டாயம் செய்ய வேண்டிய சில விஷயங்கள் என ஜோதிடம் சில தகவல்களை சொல்கிறது. இதுபற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தலைக்கு குளிக்கவும் : சாஸ்திரங்களின்படி சூரிய கிரகணமாக இருந்தாலும் சரி சந்திர கிரகணமாக இருந்தாலும் சரி. கிரகணம் முடிந்த உடனே குளிக்கவும். கிரகணத்தின் போது வளிமண்டலத்தில் உள்ள நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை திடீரென அதிகரிக்கிறது. இது உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். எனவே, கிரகணம் முடிந்த உடனேயே குளிக்க வேண்டும் என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
தானம் : கிரகணம் ஒரு அசுபமான காலமாக கருதப்படுகிறது. எனவே அதன் பிறகு சில வேலைகளைச் செய்வது நல்லது. அதில் மிக முக்கியமான ஒன்று தானம் செய்வது. தானியங்கள், சமைத்த உணவு, உடைகள் போன்றவற்றை ஏழைகளுக்கு தானமாக வழங்க வேண்டும். இது வீட்டில் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் அமைதியை அதிகரிக்க செய்யும் என்பது ஐதீகம்.
விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு உணவளிப்பது : கிரகணத்தால் ஏற்படும் பேரிடர்களைத் தவிர்க்க விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு உணவளிப்பது நல்லது. முக்கியமாக வீட்டில் இருக்கும் பசுவிற்கு தீவனம் கொடுப்பது, பறவைகளுக்கு கூரையில் தானியம் மற்றும் தண்ணீரை வைப்பது. காக்கைக்கு உணவு வைப்பது நல்லது. இவையாவும் அறிவியல் பூர்வமானது அல்ல என்றாலும் ஆன்மீக ஜோதிட நம்பிக்கையின்படி சொல்லப்படுபவை ஆகும்.