ஜோதிட சாஸ்திரத்தின்படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் தங்களின் ராசியை மாற்றும். அப்படி மாற்றும் போது சில சமயங்களில் சில கிரகங்கள் மற்ற கிரகங்களுடன் சேர்வதால், ராஜயோகங்கள் உருவாகும். அவை சுப அல்லது அசுப யோகங்களாகவும் இருக்கலாம். இதனால், நமக்கு நல்ல அல்லது அசுப பலன்களை கொடுக்கும். இந்நிலையில், 2023 மார்ச் 31 ஆம் தேதி புதன் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு செல்கிறார்.
மேஷ ராசியில் ஏற்கனவே சுக்கிரன் இருக்கிறார். புதன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் மேஷத்தில் லட்சுமி நாராயண யோகம் உருவாகிறது. இது மிகவும் மங்களகரமான யோகமாக பார்க்கப்படுகிறது. இது பண பலன், மகிழ்ச்சி, நல்ல முன்னேற்றம் ஆகியவற்றை கொடுக்கும். மேஷ ராசியில் உருவாகும் லட்சுமி நாராயண யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார் யார் என இங்கே பார்க்கலாம்.
சிம்மம் : சிம்ம ராசியில் இருந்து 9 ஆவது வீட்டில் லட்சுமி நாராயண யோகம் உருவாகிறது. இந்த யோகத்தால் நீங்கள் செய்யும் அனைத்து செயல்களிலும் வெற்றி பெறுவீர்கள். அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். தொழில் ரீதியாக அதிகமாக பயணம் செய்வீர்கள். அலுவலகத்தில் உங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும். சுப காரியங்களில் பங்கு பெரும் வாய்ப்பு கிடைக்கும். மாணவர்களுக்கும் இந்த யோகம் நல்ல பலன்களை கொடுக்கும். படிப்பில் சிறந்து விளங்குவார்கள். ஆசிரியர்கள் மத்தியில் பாராட்டும் புகழும் கிடைக்கும்.
கடகம் : கடக ராசியில் இருந்து 10 ஆவது வீட்டில் லட்சுமி நாராயண யோகம் உருவாகிறது. உங்களுக்கு தொழில் மற்றும் வியாபார ரீதியில் நல்ல பலன் கிடைக்கும். தொழில் மட்டும் பொருளாதார முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதிய வேலையைத் தொடங்க நினைத்தால், அதற்கு சரியான நேரம் இது. வியாபாரம் செய்பவர்கள் இந்த யோக காலத்தில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். முக்கியமாக இக்காலத்தில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும்.
மிதுனம் : மிதுனத்தின் 11 ஆவது வீட்டில் லட்சுமி நாராயண யோகம் உருவாகிறது. இதனால், இந்த ராசிக்காரர்களுக்கு நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். திருமணமானவர்களின் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். நீண்ட கால ஆசை நிறைவேறும். வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புகள் கிடைக்கும். பங்கு சந்தையில் முதலீடு செய்தால், எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.