யானைமேல் அழகர் அய்யனார் கோயிலில் நடந்த குடமுழுக்கு விழா... புகைப்படங்கள்...
Tanjore Yanaimel Azhagar Ayyanar Temple: யானைமேல் அழகர் அய்யனார் ஆலய குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கலசங்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள புதூர் பகுதியில் அருள்மிகு யானைமேல் அழகர் அய்யனார் கோயில் அமைந்துள்ளது.
2/ 7
மிகவும் பழமையான இந்த ஆலயம் ஒரத்தநாடு, தென்னமநாடு உள்ளிட்ட பகுதிகளின் குலதெய்வமாக விளங்கி வருகிறது.
3/ 7
இந்நிலையில் இந்த ஆலய குடமுழுக்கு விழாவை முன்னிட்டு திருப்பணிகள் நடைபெற்று வந்தன. பணிகள் நிறைவடைந்ததையடுத்து, கடந்த 18ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது.
4/ 7
தினமும் நடைபெற்று வந்த பூஜையில் இன்று காலை ஆறாம் கால பூஜை செய்யப்பட்டு, கடம் புறப்பாடு நடைபெற்றது.
5/ 7
பின்னர் கோவிலின் கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
6/ 7
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
7/ 7
மேலும் கலசங்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது. குடமுழுக்கு விழாவினை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.