முகப்பு » புகைப்பட செய்தி » சபரிமலை செல்லும் வெளியூர் பக்தர்களுக்கு கேரள அரசின் முக்கிய அறிவிப்பு.!

சபரிமலை செல்லும் வெளியூர் பக்தர்களுக்கு கேரள அரசின் முக்கிய அறிவிப்பு.!

Sabarimalai | நீண்ட தூர பயணமாக சபரிமலைக்கு வரும் பக்தர்களளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

  • 17

    சபரிமலை செல்லும் வெளியூர் பக்தர்களுக்கு கேரள அரசின் முக்கிய அறிவிப்பு.!

    மண்டல பூஜையையொட்டி, சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. தினமும் ஐயப்பனுக்கு விசேஷ பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

    MORE
    GALLERIES

  • 27

    சபரிமலை செல்லும் வெளியூர் பக்தர்களுக்கு கேரள அரசின் முக்கிய அறிவிப்பு.!

    இவர்களில் தமிழகத்தில் இருந்து செல்லும் பக்தர்களே அதிகம். இந்தநிலையில் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ்  அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    MORE
    GALLERIES

  • 37

    சபரிமலை செல்லும் வெளியூர் பக்தர்களுக்கு கேரள அரசின் முக்கிய அறிவிப்பு.!

    அதில் கொரோனா கட்டுப்பாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகள் பக்தர்களின் வருகை மிக குறைவாக இருந்தது. தற்போது கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டு உள்ளதால் இந்தாண்டு பக்தர்களின் எண்ணிகை அதிகமாகவே இருந்து வருகிறது.

    MORE
    GALLERIES

  • 47

    சபரிமலை செல்லும் வெளியூர் பக்தர்களுக்கு கேரள அரசின் முக்கிய அறிவிப்பு.!

    இதன் காரணமாக தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, புதுச்சேரியில் இருந்து நீண்ட தூர பயணமாக சபரிமலைக்கு வரும் பக்தர்களளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

    MORE
    GALLERIES

  • 57

    சபரிமலை செல்லும் வெளியூர் பக்தர்களுக்கு கேரள அரசின் முக்கிய அறிவிப்பு.!

    அப்படி வரும் பக்தர்களுக்கு ஓய்வு கிடைப்பது இல்லை. இதனால் அப்படிப்பட்ட தொலைத்தூர பக்தர்களுக்கு மலை ஏற்றம் சிரமமாக இருக்கும்.

    MORE
    GALLERIES

  • 67

    சபரிமலை செல்லும் வெளியூர் பக்தர்களுக்கு கேரள அரசின் முக்கிய அறிவிப்பு.!

    இதனை கருத்தில் கொண்டு வெளி மாநிலங்களில் இருந்து நீண்ட தூரம் பயணம் செய்து வரும் பக்தர்கள் நிலக்கல்லில் வாகனங்களை நிறுத்தி விட்டு 2 அல்லது 3 மணி நேரம் இளைப்பாறிய பிறகு மலை ஏற வேண்டும் எனக் கூறியுள்ளார்.

    MORE
    GALLERIES

  • 77

    சபரிமலை செல்லும் வெளியூர் பக்தர்களுக்கு கேரள அரசின் முக்கிய அறிவிப்பு.!

    ஏற்கனவே பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால்,  சாமி தரிசனம் செய்ய கூடுதலாக ஒரு மணிநேரம் அனுமதி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக மாலை நேரத்தில் 4 மணிக்கு நடை திறக்கப்படும் நிலையில், மாலை 3 மணிக்கே நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதனால் தொலைத்தூரத்தில்  இருந்து வரும் பக்தர்கள் அனைவரும் நன்கு ஓய்வு எடுத்த பின்னரே மலை ஏற வேண்டும் என்று கேர அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

    MORE
    GALLERIES