கார்த்திகை திருநாளன்று வீடுகள் தோறும் அகல் விளக்கால் அலங்கரிக்கப்படும். இந்த நாளன்று நெல் பொரியும், அவல் பொரியும் வெல்லப்பாகிலிட்டு பரம்பொருளான சிவ பெருமானுக்கு நிவேதனம் செய்வது வழக்கம். ஆண்டுதோறும் மிகச்சிறப்பாக கொண்டாடப்படும் திருவிழாக்களில் குறிப்பாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது.
தீப பலன்கள் : நமது வீட்டு பூஜையறையில் ஒரு முக தீபம் ஏற்றினால் மத்திம பலன் தரும். இரண்டு முக தீபம் ஏற்றினால் குடும்பம் ஒற்றுமை தரும். மூன்று முக தீபம் ஏற்றினால் புத்திர சுகம் தரும். நான்கு முக
தீபம் ஏற்றினால் பசு, பூமி சுகம் தரும். ஐந்து முக தீபம் ஏற்றினால் செல்வம் பெருகும்.