காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவில் பங்குனி உத்திரப் பெருவிழா உற்சவத்தின் 7-ம் நாள் தேரோட்டம்...
kanchipuram ekambaranathar temple | காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவில் பங்குனி உத்திர பெருவிழா உற்சவத்தின் ஏழாம் நாள் இன்று. திருத்தேர் ரதத்தில் எழுந்தருளி ராஜ வீதிகளில் வலம் வந்த ஏலவார்குழலி ஏகாம்பரநாதர் சுவாமி.
சிவபெருமானின் பஞ்சபூத ஸ்தலங்களில் பிரித்வி எனும் மண் ஸ்தலமாக விளங்கும், உலக பிரசித்தி பெற்ற ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் சுவாமி திருக்கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழா உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
2/ 11
உற்சவத்தின் 7-ம் நாளான இன்று ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது.
3/ 11
அப்போது வென் கலர் பட்டு உடுத்தி, மல்லிகைப் பூ, ரோஜா பூ, சம்பங்கி பூ, மாலைகள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் திருத்தேர் உற்சவத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
4/ 11
ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
5/ 11
பின்னர் கோவில் வளாகத்தில் இருந்து புறப்பட்டு சங்கரமடம், பூக்கடை சத்திரம், பேருந்து நிலையம், கச்சபேஷ்வர் கோவில் வழியாக நான்கு ராஜ வீதிகள் வழியாக வீதிஉலா வந்து அருளினார்.
6/ 11
வழிநெடுகிலும் திரளான பக்தர்கள் கூடி நின்று திருத்தேர் உற்சவத்தில் ஏகாம்பரநாதர் சுவாமியை தரிசித்து வழிபட்டு சென்றனர்.
7/ 11
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவில் பங்குனி உத்திரப் பெருவிழா உற்சவத்தின் 7-ம் நாள் தேரோட்டம் இன்று
8/ 11
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவில் பங்குனி உத்திரப் பெருவிழா உற்சவத்தின் 7-ம் நாள் தேரோட்டம் இன்று
9/ 11
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவில் பங்குனி உத்திரப் பெருவிழா உற்சவத்தின் 7-ம் நாள் தேரோட்டம் இன்று
10/ 11
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவில் பங்குனி உத்திரப் பெருவிழா உற்சவத்தின் 7-ம் நாள் தேரோட்டம் இன்று
11/ 11
தேர் வரும் முன்பு பக்தி பரவசத்தில் கோலாட்டம் ஆடும் பெண்கள்...