முகப்பு » புகைப்பட செய்தி » ஆன்மிகம் » மேஷத்திற்கு செல்லும் குரு... கஜகேசரி ராஜயோகம் யாருக்கு?

மேஷத்திற்கு செல்லும் குரு... கஜகேசரி ராஜயோகம் யாருக்கு?

Gurupeyarchi 2023 | தனுசு ராசிக்காரர்களுக்கு கஜகேசரி ராஜயோகத்துடன் நல்ல நாட்கள் தொடங்கும். தொழிலதிபர்கள் வியாபாரத்தில் வெற்றி பெறுவார்கள் மற்றும் புதிய ஆர்டர்களைப் பெறுவார்கள், இதன் காரணமாக வருமானத்தில் நிறைய லாபம் இருக்கும்.

  • 17

    மேஷத்திற்கு செல்லும் குரு... கஜகேசரி ராஜயோகம் யாருக்கு?

    குரு பகவான் ஏப்ரல் 22ஆம் தேதி மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு மாறப் போகிறார். இந்நிலையில் மேஷ ராசியில் குருவும் சந்திரனும் இணைவதால் கஜகேசரி ராஜயோகம் உருவாகப் போகிறது. இந்த ராஜயோகத்தின் சுப பலன் 3 ராசிக்காரர்களுக்கு அபரிமிதமாக இருக்கும். இந்த நபர்களுக்கு திடீர் பண பலன்கள் கிடைக்கும் மற்றும் அவர்களின் வேலையில், தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

    MORE
    GALLERIES

  • 27

    மேஷத்திற்கு செல்லும் குரு... கஜகேசரி ராஜயோகம் யாருக்கு?

    கஜகேசரி ராஜயோகம் என்றால் என்ன? ஒருவர் ஜாதகத்தில், சந்திரனில் இருந்து அல்லது லக்னத்திலிருந்து 4, 7, பத்தாம் இடத்திலோ அல்லது கேந்திரத்திலோ(லக்னம்) குரு பகவான் ஜம்முனு கால் மேல் கால் போட்டு அமர்ந்து இருந்தால், கஜகேசரி யோகம் உள்ளது என்று பொருள். குரு தெளிந்த புத்தியை(wisdom) அளிப்பவர், சந்திரனோ மனோ காரகன். இந்த யோகம் வாய்க்கப் பெற்றவர்கள் தெளிந்த புத்தியுடன், தங்கள் மனதை கட்டுக்குள் வைத்துக் கொள்ளும் திறமை வாய்க்கப் பெற்றவர்கள்.

    MORE
    GALLERIES

  • 37

    மேஷத்திற்கு செல்லும் குரு... கஜகேசரி ராஜயோகம் யாருக்கு?

    ஒவ்வொரு கிரகமும் அதன் குறிப்பிட்ட நேரத்தில் ராசியை மாற்றுகிறது. குரு விரைவில் ராசி மாறப் போகிறார். இப்படிப்பட்ட நிலையில் மேஷ ராசியில் சஞ்சரித்த பிறகு ஜோதிட சாஸ்திரத்தில் மங்களகரமானதாகக் கருதப்படும் கஜகேசரி யோகம் உருவாகும். ஏப்ரல் 22ஆம் தேதி மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு மாறப் போகிறார். இந்நிலையில் மேஷ ராசியில் குருவும் சந்திரனும் இணைவதால் கஜகேசரி ராஜயோகம் உருவாகப் போகிறது. இந்த ராஜயோகத்தின் சுப பலன் 3 ராசிக்காரர்களுக்கு அபரிமிதமாக இருக்கும்.

    MORE
    GALLERIES

  • 47

    மேஷத்திற்கு செல்லும் குரு... கஜகேசரி ராஜயோகம் யாருக்கு?

    மேஷம் : மேஷ ராசியினருக்கு கஜகேசரி ராஜயோகம் மிகவும் பலன் தரும். உங்கள் நிதி நிலை மேம்படும். அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். தொழிலதிபர்கள் அதிக லாபம் அடைவார்கள். உங்கள் தொழிலில் சிறப்பான முன்னேற்றம் காண்பீர்கள். பணியாளர்களின் சம்பளம் உயரும். பதவி உயர்வும் கிடைக்கும். இந்த நேரத்தில், நீங்கள் கூட்டாண்மையில் ஒரு புதிய தொழிலைத் தொடங்க விரும்பினால், இந்த நேரம் உங்களுக்கு மிகவும் மங்களகரமானதாகவும் வெற்றிகரமானதாகவும் இருக்கும் என  கருதப்படுகிறது. திருமணமாகாதவர்களுக்கு இந்த நேரத்தில் திருமண வாய்ப்புகள் வரலாம்.

    MORE
    GALLERIES

  • 57

    மேஷத்திற்கு செல்லும் குரு... கஜகேசரி ராஜயோகம் யாருக்கு?

    தனுசு : கஜகேசரி ராஜயோகம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். ஏனெனில் இந்த யோகம் உங்கள் ராசியிலிருந்து இரண்டாம் வீட்டில் உருவாகப் போகிறது. இது செல்வம் மற்றும் பேச்சு இடமாகக் கருதப்படுகிறது. எனவே, இந்த காலகட்டத்தில் நீங்கள் திடீர் பணம் பெறலாம். மேலும், தொழிலதிபர்கள் புதிய தொழிலை எடுக்க நினைக்கலாம் அல்லது இந்த நேரத்தில் ஒரு புதிய ஒப்பந்தம் செய்யலாம். மேலும், மீடியா, பிலிம் லைன், மார்க்கெட்டிங் வேலை செய்பவர்களும் இந்த முறை தங்களை சாதகமாக நிரூபிக்க முடியும்.

    MORE
    GALLERIES

  • 67

    மேஷத்திற்கு செல்லும் குரு... கஜகேசரி ராஜயோகம் யாருக்கு?

    கடக ராசி : கஜகேசரி ராஜயோகம் உங்களுக்கு மங்களகரமாக பலனளிக்கும். ஏனெனில் இந்த யோகம் உங்கள் ராசியிலிருந்து ஒன்பதாம் வீட்டில் அமையப் போகிறது. இது அதிர்ஷ்டமாகவும் வெளிநாட்டு இடமாகவும் கருதப்படுகிறது. அதனால்தான் இந்த நேரத்தில் நீங்கள் அதிர்ஷ்டம் பெறலாம். வெளியூர் பயணமும் மேற்கொள்ளலாம். மறுபுறம், எந்தவொரு போட்டித் தேர்வுக்கும் தயாராகும் மாணவர்களுக்கு, இந்த நேரம் சாதகமாக அமையும். மேலும், ஏதேனும் ஒரு அரசு வேலையில் வெற்றிபெற சமீபத்தில் ஏதேனும் தேர்வு எழுதியவர்கள் இந்த நேரத்தில் வெற்றி பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 77

    மேஷத்திற்கு செல்லும் குரு... கஜகேசரி ராஜயோகம் யாருக்கு?

    மீனம் : மீன ராசியினருக்கு கஜகேசரி ராஜயோகம் ஏற்றது. ஏனெனில் உங்கள் லக்ன வீட்டில் இந்த யோகம் அமையப் போகிறது. எனவே இந்த நேரத்தில் உங்கள் ஆளுமை மேம்படும். இதனுடன் தன்னம்பிக்கை கூடுகிறது. அதே நேரத்தில், நீங்கள் நிதி விஷயங்களிலும் வியாபாரத்திலும் நன்மைகளைப் பெறுவீர்கள். இந்த நேரத்தில், நீங்கள் கூட்டாண்மையில் ஒரு புதிய தொழிலைத் தொடங்க விரும்பினால், உங்களுக்கு மிகவும் மங்களகரமானதாகவும் வெற்றிகரமானதாகவும் கருதப்படுகிறது. திருமணமாகாதவர்களுக்கு இந்த நேரத்தில் திருமண வாய்ப்புகள் வரலாம். திருமணமானவர்களின் உறவும் வலுப்பெறும். அதே நேரத்தில், உங்கள் மனைவியும் முன்னேற்றம் அடையலாம்.

    MORE
    GALLERIES