காலம் காலமாகவும் வீட்டில் பூஜை செய்து வந்தாலும் பூஜை பாத்திரங்களை எந்த நாளில் சுத்தம் செய்ய வேண்டும் என்ற குழப்பம் அனைவருக்கும் இருக்கின்ற ஒன்றாகும். எப்பொழுதும் பூஜை பாத்திரங்களை வியாழக்கிழமை அன்று சுத்தம் செய்துவிட வேண்டும். ஏனென்றால் வெள்ளிக்கிழமை அன்று வீடு துடைப்பது, ஒட்டடை அடிப்பது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களைத் செய்தால் நமது வீட்டின் மகாலட்சுமி வெளியே சென்று விடும் என்பது ஐதீகமாகும்.
அதுபோல ஒரு சிலர் வெள்ளிக்கிழமை தீபம் ஏற்றி பூஜை செய்த பின்னர் தினமும் விளக்கு ஏற்ற வேண்டும் என்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். ஆனால் ஒரு சிலருக்கு இதிலும் சந்தேகம் இருக்கிறது. அசைவம்சாப்பிடுமம் நாட்களில் எவ்வாறு விளக்கு ஏற்றுவது என்று. ஒரு சிலர் அசைவத்தை ஏற்றுக்கொள்ளும் கடவுள்களை குலதெய்வமாக கொண்டிருப்பார்கள். இவ்வாறானவர்கள் அசைவம் சாப்பிட்டு இருந்தாலும் முகம், கை, கால் மட்டும் கழுவிக்கொண்டு தீபம் ஏற்றலாம். ஆனால் சைவ கடவுளை குலதெய்வமாகக் கொண்டவர்கள் இவ்வாறு செய்தல் கூடாது. அசைவம் சாப்பிட்டடிருந்தால் அன்று விளக்கு ஏற்றுவதை தவிர்க்க வேண்டும். அதுபோல தினமும் காலை வேளையில் குளித்துவிட்டு முதலில் தீபம் ஏற்றி பூஜை செய்து அடுத்த வேலைகளை துவங்குவது என்பது குடும்பத்திற்கு அதிக நன்மையை சேர்க்கிறது.
அதுபோல தினமும் விளக்கு ஏற்றும் பொழுது விளக்கின் திரிகளை மாற்ற வேண்டுமா அல்லது அதே திரியில் விளக்கேற்ற வேண்டுமா என்ற சந்தேகமும் இருக்கிறது. இந்த திரிகளை தினமும் வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம். அல்லது இரண்டு நாட்களுக்கு ஒரு முறையாவது மாற்றிக்கொள்ளலாம். இந்த திரிகளைப் ஒன்றாக சேர்த்து வைத்து ஞாயிற்றுக்கிழமை தோறும் வீட்டில் உள்ளவர்களை சுற்றிப் போடும் பொழுது அந்த கற்பூரத்தில் இந்த திரிகளையும் சேர்த்து எரித்து விட்டால் திருஷ்டி கழிந்தது என்று அர்த்தமாகும்.