கனவுகள் சிலருக்குச் சுகமானவையாகவும் வேறு சிலருக்குப் பெரும் நெருடல்களை அளிப்பதாகவும் அமைந்துவிடுகின்றன. அதிரவைக்கும் கனவுகளைக் கண்டு தூக்கம் தொலைத்த பலர் உண்டு! கனவுகள் ஏன் வருகின்றன, கனவுகள் பலிக்குமா, கனவுகளுக்கும் பலாபலன்கள் உண்டா, அவை என்னென்ன? என்றும் கனவில் இந்த 5 விஷயங்கள் தென்பட்டால் அந்த கனவுகளுக்கு என்ன அர்த்தம்? என்பது பற்றிய விவரங்களை ஜோதிடர் ஆச்சார்யா பண்டிட் அலோக் பாண்டியா விளக்குகிறார்.
எத்தனை நாள்களில் இந்த கனவு பலிக்கும்? ஓர் இரவு என்பது நான்கு யாமங்களாகப் பிரிக்கப்படுகிறது. இதில், முதலாம் யாமத்தில் கண்ட கனவு ஒரு வருடத்துக்குள்ளும், 2-ம் யாமத்தில் கண்ட கனவு 8 மாதத்துக்குள்ளும், 3-ம் யாமத்தில் கண்ட கனவு 3 மாதத்துக்குள்ளும், 4-ம் யாமத்தில் கண்ட கனவு 10 நாள்களுக்குள்ளும், அதிகாலைக் கனவு உடனடியாகவும் பலிக்கும்.