முகப்பு » புகைப்பட செய்தி » ஆன்மிகம் » ஏன் ஆடையில்லாமல் குளிக்கக்கூடாது?... ஜோதிடம் கூறும் காரணம் இதோ!

ஏன் ஆடையில்லாமல் குளிக்கக்கூடாது?... ஜோதிடம் கூறும் காரணம் இதோ!

never bathe like that you will get problem | குளிக்கும்போது சில விதிகளை கடைபிடிப்பது மிகவும் நல்லது என்று கூறப்படுகிறது. இது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு நல்லது. ஆனால், ஜோதிட சாஸ்திரத்தில் குளிப்பதற்கு என சில விஷயங்கள் உள்ளது. அவற்றைப் பின்பற்றினால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். அந்த விதிகள் என்ன என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

  • 18

    ஏன் ஆடையில்லாமல் குளிக்கக்கூடாது?... ஜோதிடம் கூறும் காரணம் இதோ!

    ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் காலை கண் முழிப்பதில் இருந்து இரவில் படுக்கைக்கு செல்லும் வரை செய்ய வேண்டிய முக்கியமான விஷயங்கள் பல உள்ளன. சமைப்பது, சாப்பிடுவது, வேலைக்கு செல்வது, குளிப்பது, நகம் வெட்டுவது என அனைத்து வேலைகளும் முக்கியம். நம் வாழ்க்கையில் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் சில நடைமுறைகள் உள்ளது. அதை நமது முன்னோர்கள் காலம் காலமாக கடைப்பிடித்து வருகின்றனர்.

    MORE
    GALLERIES

  • 28

    ஏன் ஆடையில்லாமல் குளிக்கக்கூடாது?... ஜோதிடம் கூறும் காரணம் இதோ!

    நமது முன்னோர்களும் சரி… நமது பெற்றோர்களும் சரி.. காலை எழுந்தவுடன் குளிக்க வேண்டும் என கூறுவார்கள். அதுவும், இன்னும் சில வீடுகளில் சமைப்பதற்கு முன் குளிக்க வேண்டும் என்ற விதியை கடைபிடிப்பார்கள். அது நம்மில் பலர் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், குளிப்பதற்கு சில விதிகள் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா?. ஆமாம்… உண்மைதான் குளிப்பதற்கு என வேத சாஸ்த்திரத்தில் சில முறை இருப்பதாக கூறப்படுகிறது. குளிக்கும் போது தவறுதலாக நாம் செய்யும் சில விஷயங்கள் நமக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 38

    ஏன் ஆடையில்லாமல் குளிக்கக்கூடாது?... ஜோதிடம் கூறும் காரணம் இதோ!

    இந்து மத சாஸ்திரங்களின்படி ஒருவர் குளிக்கும் போது நிர்வாணமாக குளிக்கக் கூடாது என கூறப்படுகிறதாம். ஆனால், நம்மில் பலர் குளிக்கும் போது ஆடைகள் எதுவும் அணியாமல் தான் குளிப்போம். நிர்வாணமாக குளிப்பதால் வாழ்க்கையில் பிரச்சினைகள் ஏற்படும் என கூறப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 48

    ஏன் ஆடையில்லாமல் குளிக்கக்கூடாது?... ஜோதிடம் கூறும் காரணம் இதோ!

    காலம் காலமாக ஆடை அணியாமல் குளித்தால் தீய சக்திகள் வீட்டிற்குள் நுழையும் என்ற ஐதீகம் உள்ளது. இதனால், குளிப்பவரின் மனமும், வீடும் பாதிக்கப்படும். எனவே, குளிக்கும் போது உடலில் ஏதாவது ஆடை அணிய வேண்டும் என கூறப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 58

    ஏன் ஆடையில்லாமல் குளிக்கக்கூடாது?... ஜோதிடம் கூறும் காரணம் இதோ!

    இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், ஆடை இல்லாமல் குளித்தால் லட்சுமி தேவி கோபப்படுவாள் என்பதும் ஐதீகம். இதனால், அவர்களின் பொருளாதார நிலை பாதிக்கப்படும். ஆடை என்றால், சுடிதார், சேலை, சட்டை அல்ல. குறைந்த பட்சம் டவலில் போர்த்தியாவது குளிப்பது அவசியம் என அறிவியல் கூறுகிறது.

    MORE
    GALLERIES

  • 68

    ஏன் ஆடையில்லாமல் குளிக்கக்கூடாது?... ஜோதிடம் கூறும் காரணம் இதோ!

    மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், நீங்கள் நிர்வாணமாக குளித்தால், சில சமயங்களில் உங்களுக்கு பித்ரு தோஷம் ஏற்படும் எனவும் கூறப்படுகிறது. நீங்கள் நிர்வாணமாக குளித்தால் முன்னேர்கள் கோபப்படுவார்கள். இதனால், வாழ்க்கையில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

    MORE
    GALLERIES

  • 78

    ஏன் ஆடையில்லாமல் குளிக்கக்கூடாது?... ஜோதிடம் கூறும் காரணம் இதோ!

    நிர்வாணமாக குளிப்பதற்குப் பின்னால் மற்றொரு புராண உண்மை உள்ளது. கோபிகைகள் நீராடும் போது அவர்களின் ஆடைகளை கிருஷ்ணர் மறைத்தார். பிறகு, கோபியர்கள் அவரிடம் கெஞ்சிய பிறகு அவர் ஆடைகளை கொடுத்தார். இதன் அர்த்தம், கிருஷ்ணர் கோபியர்களிடம் ஒருபோதும் நிர்வாணமாக நீராடக்கூடாது என்பதை உணர்த்துவதாக கூறப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 88

    ஏன் ஆடையில்லாமல் குளிக்கக்கூடாது?... ஜோதிடம் கூறும் காரணம் இதோ!

    குளிப்பதற்கு பின்னால் உள்ள மற்றொரு சுவாரஷ்யமான விஷயம் என்ன என்றால், முன்பெல்லாம் கழிப்பறைகள் வீட்டை விட்டு தள்ளி இருக்கும் அல்லது குளிப்பதற்காக மிடுக்காய் வைத்து ஒரு கழிப்பறை வைத்திருப்பார்கள். அப்படி அதற்கு ஏதாவது பூச்சிகள் வந்தால், நம்மால் அப்படியே வெளியில் ஓடி வர முடியாது என்பதால் இதை கூறியுள்ளனர். தற்போது எல்லாவீடுகளிலும் அறைக்கு அரை கழிப்பறை உள்ளது. இருப்பினும் சில அவசர சூழ்நிலைகளில் நம்மால் அப்படியே வெளியே வர முடியாது என்பதால் மட்டுமே இது கூறப்படுகிறது.

    MORE
    GALLERIES