மேஷம்: மேஷம் இராசிக்காரர்கள் தங்களையும் தங்கள் சுற்றுப்புறங்களையும் சுத்தமாக வைத்திருக்க விரும்புவார்கள். எந்தவொரு பணியை செய்தாலும் அதில் நேர்மை மற்றும் சுத்தம் இருக்க வேண்டும் என நினைப்பார்கள். எப்போதும், எந்த செயலிலும் அவர்களின் கண்களும் காதுகளும் திறந்தே இருக்கும். மேஷ ராசிக்காரர்கள் முக அமைப்பை கவனித்தால் அவர்களின் புருவங்கள் மேல்நோக்கி வளைவதை கவனிக்கலாம். அவர்களுக்கு என்ன பணி ஒதுக்கப்பட்டாலும், அவர்கள் தரும் முதல் முன்னுரிமை பாதுகாப்புக்கு தான். இந்த ராசியில் பிறந்த ஆண்கள் தங்கள் மனைவி சுறுசுறுப்பாகவும் கவர்ச்சியாகவும் இருக்க வேண்டும் என விரும்புகிறார்கள். கணவன் மனைவி உறவில் நிறைய கருத்து வேறுபாடுகள் இருக்கும்.
ரிஷபம்: ரிஷப ராசிக்குரியவர்கள் முகத்தில் எப்போதும் புன்னகை இருந்துகொண்டே இருக்கும். அவர்களின் தோல் மிகவும் மிருதுவானது. அவர்களின் உதடுகளும் மென்மையானதும் கூட.திருமண வாழ்க்கையின் அத்தனை அம்சங்களையும் பெறக்கூடியவர்கள். உண்மைக்கும் நேர்மைக்கும் பிரபலமானவர்கள். தேவைப்படும் காலங்களில் மற்றவர்களுக்கு உதவ யோசிப்பதில்லை.
மிதுனம்: மிதுன ராசிக்காரர்கள் பொறுமையற்ற தன்மையைக் கொண்டவர்கள். இந்த வாரம் அவர்களின் ஆளுமை மற்றும் தன்மை பலரின் இதயங்களை கவர்ந்திழுக்கும். இவர்களுக்கு அரசியல் துறையில் நல்ல பிடிப்பு இருக்கும். ஆன்மிகத்தில் மிகுந்த நாட்டமுள்ளவர்களாக இருப்பார்கள். தொண்டு, நன்கொடைகளில் அதிக அக்கறை காட்டுவார்கள், எதைச் செய்தாலும் கவனத்துடன் செய்வார்கள். இவர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட காதல் இருக்கும், இதன் காரணமாக அது தோல்வியில் முடியும். உறவினர்களுக்கு உதவி செய்ய முன் வருவார்கள், ஆனால் அதற்காக வருந்தவும் செய்வார்கள்..
கடகம்: கடக ராசிகாரர்களே ஆரோக்கியத்தை நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும், ஏனெனில் அது உங்களைத் தொந்தரவு செய்யலாம். உங்கள் உணவில் கவனம் செலுத்துங்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இந்த வாரம் சாதாரணமாக இருக்கும். நீங்கள் தேவையில்லாமல் யாரிடமும் பேசக்கூடாது, உங்கள் வேலையில் கவனம் செலுத்துவது நல்லது. தொழில்புரிபவர்களுக்கு சற்று கவலையாக இருக்கும் ஏனெனில் அவர்கள் அதிக மணி நேரம் வேலை செய்ய நேரிடலாம். திருமணமானவர்களின் இல்லற வாழ்க்கை மன அழுத்தத்தை ஏற்படுத்தும். உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தை நீங்கள் கவனித்துக் கொண்டு அவர்களுடன் அன்புடன் பேச வேண்டும். காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் மகிழ்ச்சிகரமானதாக இருக்கலாம்.
சிம்மம்: சிம்ம ராசி நேயர்களே இந்த வாரம் பெரும்பாலும் பலனளிக்கும் வகையில் இருக்கும். திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கையில் சில பதற்றம் இருக்கும். மிகவும் புத்திசாலித்தனமாக அடியெடுத்து வைக்க வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. காதலிப்பவர்கள் சந்தோஷமான வாழ்க்கையைக் காணலாம். உங்கள் உறவில் நீங்கள் முன்னேறலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் வேலையை அனுபவித்து மகிழலாம். வணிக வர்க்கத்தைப் பொறுத்தவரை, இந்த வாரம் முன்னேற்றத்திற்கான நேரமாக இருக்கலாம். உங்கள் ஆரோக்கியத்தில் ஏற்ற தாழ்வுகள் இருக்கலாம்.
கன்னி: இந்த வாரம் எடுத்த காரியம் கைகூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். மதிப்பும் மரியாதையும் சிறப்பாக இருக்கும். உங்கள் மீதான அவப்பெயர் மறைந்து செல்வாக்கு மேம்படும். உங்கள் சொல்லுக்குப் பிறர் மரியாதை கொடுப்பர். வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்ப பிரச்சனை கட்டுக்குள் அடங்கி இருக்கும். ஆனாலும் தேவையான இடங்களில் நீங்கள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. தேவைகள் ஒவ்வொன்றாகப் பூர்த்தியாகும். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளை வாங்கலாம். நண்பர்கள் இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும்.
துலாம்: இந்த வாரம் எல்லா விதத்திலும் நன்மை உண்டாகும். எதையும் துணிச்சலுடன் எதிர் கொள்வீர்கள். தடைபட்டு வந்த காரியங்களில் தடை நீங்கும். உங்களது சாமர்த்தியமான பேச்சால் ஆதாயம் உண்டாகும். தொழில், வியாபாரம் போட்டிகள் நீங்கி நன்கு நடக்கும். உங்களது வியாபாரத்திற்கு முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாதுரியமான பேச்சால் மேல் அதிகாரிகளின் கட்டளைகளை நிறைவேற்றி பாராட்டு பெறுவார்கள். குடும்பத்தில் வாழ்க்கை துணை உங்களுக்கு ஆதரவாக இருப்பார். விருந்தினர் வருகை இருக்கும். பெண்களுக்கு காரிய தடைகள் நீங்கும். கலைத்துறையினருக்கு பணவரத்து அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு உங்கள் செயல்களுக்கு தடைகளை ஏற்படுத்தியவர்கள் தாமாகவே விலகி செல்வார்கள். மாணவர்களுக்கு ஆசிரியர்கள், சக மாணவர்கள் உதவிகள் கிடைக்கும்.
விருச்சிகம்: இந்த வாரம் உங்கள் வாழ்க்கை தரம் உயர நீங்கள் எடுக்கும் முயற்சிகள் கை கூடும். நெருக்கமானவர்களுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள். முன்பின் யோசிக்காமல் எதையாவது பேசி விடுவீர்கள். தொழில், வியாபாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகளின் போது மிகவும் நிதானமாக பேசுவது நன்மை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு வகையில் அலைச்சல், கூடுதல் செலவை சந்திப்பார்கள். வேறு ஒருவர் செய்த செயலுக்கு வீண் பழி ஏற்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படும். உறவினர்களிடம் பேசும் போதும் அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லும் போதும் நிதானமாக இருப்பது நல்லது. பெண்களுக்கு முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.
தனுசு: இந்த வாரம் எடுத்த முயற்சிகள் கை கூடும். வரவுக் கேற்ற செலவு ஏற்படும். எதையும் சாதிக்கும் திறமையும், சாமர்த்தியமும் உண்டாகும். மனோ தைரியம் கூடும். தொழில், வியாபாரத்தில் செலவுகள் அதிகரிக்கும். செவ்வாய் சஞ்சாரத்தால் உங்கள் கீழ் வேலை செய்பவர்களின் செயல்களால் உங்களுக்கு கோபம் உண்டாகலாம். உத்தியோகம் தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். அலுவலகத்தில் உள்ள சக ஊழியர்கள், மேல் அதிகாரிகளிடம் வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் விருந்தினர் வருகை குடும்பத்தினரின் ஆரோக்கிய குறைவு ஆகியவற்றால் செலவு அதிகரிக்கும். பெண்களுக்கு வலிய சென்று உதவுவதன் மூலம் வீண் பழி ஏற்படலாம்.
மகரம்: இந்த வாரம் பணவரத்து கூடும். வாக்கு வன்மையால் லாபம் உண்டாகும். வீண் பயணங்களும் அலைச்சலும் உண்டாகும். இடமாற்றம் ஏற்படலாம். கெட்ட கனவுகள் தோன்றும். உஷ்ணம் சம்பந்தமான நோய்கள் வந்து நீங்கும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். வரவேண்டிய பணம் தாமதமாக வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கடுமையான வேலை இருக்கும். உத்தியோகம் காரணமாக வெளியில் தங்க நேரிடும். குடும்பச் செலவுகள் கூடும். குடும்பம் பற்றிய கவலைகள் உண்டாகும். உறவினர்கள், நண்பர்களிடம் பேசும்போது நிதானமாக பேசுவது நன்மை தரும். பெண்களுக்கு வீண் அலைச்சலும் பயணங்களும் ஏற்படலாம். சாமர்த்தியமான பேச்சு லாபம் தரும். கலைத்துறையினர் நேரம் தவறி உண்பதை தவிர்ப்பது நல்லது.
கும்பம்: இந்த வாரம் பொன், பொருள் சேரும். வாகன யோகம் உண்டாகும். விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்புகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். முன்னேற்றம் காணப்படும். தொழில் விரிவாக்கத்திற்கான பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை சுமை குறையும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குடும்பத்தினருக்காக பொருட்களை வாங்குவீர்கள். சுப நிகழ்ச்சிகள் நடக்கும். பெண்களுக்கு புதிய தொடர்புகள் மூலம் லாபம் உண்டாகும்.
மீனம்: கவலை, பயம் இல்லாமல் எப்போதும் மகிழ்ச்சியுடன் காணப்படும் மீன ராசியினரே நீங்கள் மற்றவர்களிடம் எதையும் எதிர்பார்க்காமல் உதவிகள் செய்பவர்கள். இந்த வாரம் மற்றவர்களின் உதவியால் காரிய அனுகூலம் உண்டாகும். பகைகளில் வெற்றி கிடைக்கும். பணவரத்து தாராளமாக இருக்கும். கையிருப்பு கூடும். இதுவரை இருந்த தொல்லைகள் நீங்கும். நீண்ட தூரப் பயணங்களால் லாபம் உண்டாகும். மனதில் தைரியம் பிறக்கும். சுக்கிரன் சஞ்சாரம் வாக்கு வன்மையால் ஆதாயத்தை பெற்று தரும். உயர்மட்ட பதவியில் உள்ளவர்களின் உதவி கிடைக்கும். தொழில், வியாபாரம் சற்று நிதானமாக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டி இருக்கும்.