ஹோம் » போடோகல்லெரி » ஆன்மிகம் » இந்த வார ராசிபலன்... 08 -01- 2023 முதல் 14 -01- 2023 வரை..

இந்த வார ராசிபலன்... 08 -01- 2023 முதல் 14 -01- 2023 வரை..

Weekly Horoscope | மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிக்கான இந்த வார (08 -01- 2023 முதல் 14 -01- 2023 வரை) ராசிப்பலனை கணித்தவர் பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

 • 112

  இந்த வார ராசிபலன்... 08 -01- 2023 முதல் 14 -01- 2023 வரை..

  மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம்): கிரகநிலை: ராசியில் ராகு - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் (வ) - சப்தம ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் சூரியன், புதன்(வ) - தொழில் ஸ்தானத்தில் சுக்கிரன், சுக்கிரன், சனி - விரைய ஸ்தானத்தில் குரு என கிரகநிலை இருக்கிறது. இந்த வாரம் எதிர்பார்த்த பணவரத்து வந்து சேரும். கொடுத்த வாக்குறுதியை நீங்கள் காப்பாற்ற முடியும். மற்றவர்களுக்கு உங்கள் மீது இருந்த கோபம் குறையும். தொழில் வியாபாரம் முன்னேற்றம் காணப்படும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அவசரப்படாமல் நிதானமாக பணிகளை கவனிப்பது நல்லது. குடும்பத்தில் இருந்த மனவருத்தங்கள் அகலும். பிள்ளைகள் முன்னேற்றத்தில் இருந்த தடை தாமதம் நீங்கும். பெண்களுக்கு கோபத்தை குறைப்பது நன்மை தரும். கலைத்துறையினருக்கு இடைத்தரகர்கள் போன்றவர்களின் ஒத்துழைப்பை எதிர்பாராமல் நீங்கள் நேரடியாகவே முயற்சி செய்து வருவதன் மூலம் புதிய வாய்ப்புகள் சிலவற்றைப் பெற்று மகிழ இடமுண்டு. அரசியல்வாதிகளுக்கு உங்களுக்கு சில சோதனைகள் நேர இடமுண்டு என்றாலும் நீங்கள் உறுதியான மனத்துடன் இருந்து பொறுமை காத்து வருவதன் மூலம் தலைமையின் பேரன்பையும், நன்மதிப்பையும் பெறுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய கவனமுடன் படிப்பது நல்லது. எதிலும் நிதானம் தேவை. பரிகாரம்: குன்றின் மேல் இருக்கும் குமரனை கந்த சஷ்டி கவசம் சொல்லி வணங்கி வர அனைத்து நலன்களும் வளங்களும் உண்டாகும்.

  MORE
  GALLERIES

 • 212

  இந்த வார ராசிபலன்... 08 -01- 2023 முதல் 14 -01- 2023 வரை..

  ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்): கிரகநிலை: ராசியில் செவ்வாய் (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ) - பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன், சனி - லாப ஸ்தானத்தில் குரு - விரைய ஸ்தானத்தில் ராகு என கிரகநிலை இருக்கிறது. இந்த வாரம் பல வித நன்மைகள் ஏற்படும். நண்பர்கள், உறவினர்களிடம் இருந்து வந்த வீண் மனஸ்தாபங்கள் அகலும். நீண்ட நாட்களாக வாங்க வேண்டும் என்று எண்ணிய பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். எதிலும் அவசரம் காண்பிப்பதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் தொடர்பாக இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். ஆக்கப்பூர்வமான யோசனைகள் தோன்றும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்டமிட்டு காரியங்களை செய்து எதிர்பார்த்த வெற்றியை அடைவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். கணவன், மனைவிக்கிடையில் நெருக்கம் உண்டாகும். பிள்ளைகளுக்காக பாடுபடுவீர்கள். எதிர்பாராத செலவுகள் உண்டாகும். பெண்களுக்கு எதிலும் நிதானம் தேவை. பொருள் சேர்க்கை உண்டாகும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் எளிதில் கிடைக்கக் கூடிய காலகட்டம். நீங்கள் பெரும் முயற்சி செய்ய வேண்டிய அவசியமில்லாமலேயே வாய்ப்புகள் தேடி வரும். அரசியல்வாதிகளுக்கு தலைமையின் பாராட்டுகளையும் நன்மதிப்பையும் பெறுவீர்கள். உங்கள் மன உறுதியும், விசுவாசமும் உங்களுக்குப் பொறுப்பான பதவிகளையும் பெற்றுத்தரும். மாணவர்களுக்கு திட்டமிட்டு பாடங்களை படிப்பது கல்வியில் வெற்றிக்கு உதவும். பரிகாரம்: மஹாலக்ஷ்மி அஷ்டகம் சொல்லி வணங்கி வருவது பொருளாதார நிலையை உயர்த்தும்.

  MORE
  GALLERIES

 • 312

  இந்த வார ராசிபலன்... 08 -01- 2023 முதல் 14 -01- 2023 வரை..

  மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்): கிரகநிலை: பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது - சப்தம ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ) - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சுக்கிரன், சனி - தொழில் ஸ்தானத்தில் குரு - லாப ஸ்தானத்தில் ராகு - விரைய ஸ்தானத்தில் செவ்வாய் (வ) என கிரகநிலை இருக்கிறது. இந்த வாரம் மனக்கவலை அகலும். பணவரத்து திருப்தி தரும். நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும். ஆடம்பர செலவுகள் ஏற்படும். எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறையான எண்ணங்கள் உருவாகும். தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். எதிர்பார்த்த லாபம் வரும். வியாபார செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். அதனால் களைப்பு ஏற்படலாம். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி எல்லோரும் உங்களது வார்த்தைக்கு மதிப்பு தருவார்கள். கணவன், மனைவிக்கிடையே சகஜநிலை நீடிக்கும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும். எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும். பெண்களுக்கு வீண் மனக்கவலை உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கலைத்துறையினருக்கு முயற்சிகளைத் தொடர்வது அவசியம். உங்கள் வசதிகளில் பெரும்குறை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும் அளவில் சில வாய்ப்புகளை பெறக்கூடும். அரசியல்வாதிகள் எதிலும் எப்போதும் எச்சரிக்கையாக செயல்பட வேண்டிய காலகட்டம். சமூகத்தில் அந்தஸ்தான பதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு உயர்கல்வி பற்றிய கவலை நீங்கும். ஆனால் கல்வியில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். பரிகாரம்: பெருமாளை சேவித்து வர மனகுழப்பம் நீங்கும். செல்வ நிலை உயரும்.

  MORE
  GALLERIES

 • 412

  இந்த வார ராசிபலன்... 08 -01- 2023 முதல் 14 -01- 2023 வரை..

  கடகம் (புனர் பூசம் 4-ம் பாதம், பூசம், ஆயில்யம்): கிரகநிலை: சுக ஸ்தானத்தில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ) - சப்தம ஸ்தானத்தில் சுக்கிரன், சனி - பாக்கிய ஸ்தானத்தில் குரு - தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் ராகு - லாப ஸ்தானத்தில் செவ்வாய் (வ) என கிரகநிலை இருக்கிறது. இந்த வாரம் ராசியைப் பார்க்கும் குருவாலும் சனியாலும் எல்லா முயற்சிகளும், காரியங்களும் சாதகமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும். கடினமான வேலைகளையும் எளிதாக செய்து முடிக்கும் திறமை உண்டாகும். மனதில் இருந்த தயக்கம், பயம் நீங்கும். வெளியூர், வெளிநாடு பயணங்கள் செல்ல எடுக்கும் முயற்சிகள் சாதகமான முடியும். தொழில் வியாபாரம் முன்னேற்ற மடையும். லாபம் அதிகரிக்கும். தேவையான பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும் கூடுதல் பொறுப்புகளும் கிடைக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். சுப காரியங்கள் நடக்கலாம். சகோதரர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். சந்தோஷமாக காணப்படுவார்கள். குழந்தைகள் மூலம் பெருமை கிடைக்கும். பெண்களுக்கு எந்த வேலையையும் எளிதாக செய்து விடுவீர்கள். கலைத்துறையினருக்கு சக கலைஞர்களைப் பகைத்துக் கொள்ளாமல் சுமூகமாகப் பழகி வருவது அவசியம். வெளியூர்ப் பயணங்களின் போது கவனம் தேவை. அரசியல்வாதிகளுக்கு உங்களுக்குத் தரப்பட்டுள்ள பொறுப்புகளைத் திறம் பட நிறைவேற்றி தலைமையின் பாராட்டுகளைப்பெறுவது இப்போதைய நிலையில் மிகக் கடினமான இருக்ககூடும். மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நன்மை தரும். திறமை வெளிப்படும். பரிகாரம்: பிரத்தியங்கரா தேவியை வணங்கி வர எதிர்ப்புகள் விலகும். மனோ தைரியம் அதிகரிக்கும்.

  MORE
  GALLERIES

 • 512

  இந்த வார ராசிபலன்... 08 -01- 2023 முதல் 14 -01- 2023 வரை..

  சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1-ம் பாதம்): கிரகநிலை: தைரிய வீர்ய ஸ்தானத்தில் கேது - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்கிரன், சனி - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் குரு - பாக்கிய ஸ்தானத்தில் ராகு - தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் செவ்வாய் (வ) என கிரகநிலை இருக்கிறது. இந்த வாரம் எதிலும் கவனமாக இருப்பது நல்லது. காரியங்களில் தடை தாமதம் உண்டாகாமல் இருக்க எதையும் திட்டமிட்டு செய்வது நன்மை தரும். எதிலும் தலையிடாமல் ஒதுங்கி சென்றாலும் மற்றவர்கள் வலிய வந்து உங்களையும் இழுப்பார்கள். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் இருந்த மந்தமாக நிலை மாறும். பழைய பாக்கிகள் வசூலாகும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும், வேலை பளுவும் ஏற்படலாம். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே விட்டுக் கொடுத்து செல்வது நன்மை தரும். பிள்ளைகளுக்காக அலைய வேண்டி இருக்கும். குடும்பத்திற்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பெண்களுக்கு மற்றவர்களின் பேச்சை கேட்டு எதிலும் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. கலைத்துறையினருக்கு பல முன்னனி நிறுவனங்கள் தாமே உங்களைத் தேடி வந்து வாய்ப்பு கொடுக்கும். உங்கள் திறமைகள் முழுவதையும் வெளிப்படுத்தி ஆதரவை பெருவாரியாகப் பெறுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு உங்கள் தன்னலமற்ற தொண்டுக்குப் பாரட்டுகள் குவியும். உங்கள் செல்வாக்கும் சொல்வாக்கும் உங்களூக்குத் தனி மரியாதையைப் பெற்றுத் தரும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய பயத்தை விலக்கி விட்டு ஆர்வமாக படிப்பது வெற்றிக்கு உதவும். பரிகாரம்: முருகனை வணங்கி வர காரிய தடைகள் நீங்கும். குடும்பத்தில் அமைதி உண்டாகும்.

  MORE
  GALLERIES

 • 612

  இந்த வார ராசிபலன்... 08 -01- 2023 முதல் 14 -01- 2023 வரை..

  கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்): கிரகநிலை: தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது - சுக ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ) - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுக்கிரன், சனி - சப்தம ஸ்தானத்தில் குரு - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் ராகு - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் (வ) என கிரகநிலை இருக்கிறது. இந்த வாரம் பணவரத்து. பொருள்வரத்து அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மற்றவர்களால் கைவிடப்பட்ட காரியத்தை செய்து முடிப்பீர்கள். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் அனுகூலமாக நடந்து முடியும். தொழில் வியாபாரத்திற்கு தேவையான பண உதவி கிடைக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் சாதகமான நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பமில்லாத இடமாற்றம் உண்டாகலாம். குடும்பத்தில் இருந்த சண்டைகள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். திருமணம் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் கைகூடும். வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகள் மகிழ்ச்சியாக காணப்படுவார்கள். பெண்களுக்கு எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கலைத்துறையினருக்கு பல முயற்சிக்குப் பிறகு புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். சக கலைஞர்களின் போட்டி உங்கள் வாய்ப்புகளுக்கு சவாலாக இருக்கும். அரசியல்வாதிகளுக்கு உங்களுக்கு தேவையற்ற வீண் சோதனைகள் வரலாம். உங்களைப் பாராட்டியவர்களே இப்போது தரக்குறைவாக பேசலாம். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த மந்தநிலை மாறும். சுறுசுறுப்பாக பாடங்களை படிப்பீர்கள். பரிகாரம்: நவக்கிரகங்களை வணங்கி வர எல்லா நலன்களும் உண்டாகும். வாழ்வில் சுபிட்சம் ஏற்படும்.

  MORE
  GALLERIES

 • 712

  இந்த வார ராசிபலன்... 08 -01- 2023 முதல் 14 -01- 2023 வரை..

  துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்): கிரகநிலை: ராசியில் கேது - தைரிய வீர்ய ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ) - சுக ஸ்தானத்தில் சுக்கிரன், சனி - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு - சப்தம ஸ்தானத்தில் ராகு - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் செவ்வாய் (வ) என கிரகநிலை இருக்கிறது. இந்த வாரம் எடுத்த காரியங்களில் இருந்த தடைதாமதம் நீங்கும். ராசிநாதன் சுக்கிரன் சஞ்சாரத்தால் பணவரத்து அதிகரிக்கும். எந்த ஒரு வேலையை செய்யும் போதும் மனமகிழ்ச்சியுடன் செய்வீர்கள். வீடு, வாகனம் வாங்கும் சுபச்செலவுகள் ஏற்படலாம். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும். சுக்கிரன் சஞ்சாரம் புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் புத்தி சாதூரியத்தால் முன்னேற்றம் காண்பீர்கள். சரக்குகளை அனுப்பும் போது கூடுதல் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிர்பந்தமாக இடமாற்றம் அல்லது பணிமாற்றம் இருக்கலாம். உழைப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் குறையும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக பாடுபடுவீர்கள். உறவினர் மூலம் உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு சுபச்செலவு அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு உங்களுக்குக் கிடைக்கும் சிறு வாய்ப்புகளைக் கூட வீணாக்காமல் பயன்படுத்துவது நல்லது. உங்கள் திறமைகளை வெளிக்கொண்டு சிறந்த காலகட்டம் இதுவாகும். அரசியல்வாதிகளுக்கு உங்கள் மீது தலைமை அதிகமான நம்பிக்கை கொள்ளும். உங்களுடைய விசுவாசத்திற்கு மேலிடம் உங்களுக்கு சரியான பதவிகளை அளிப்பார்கள். மாணவர்களுக்கு கல்வி பற்றிய சிந்தனை அதிகரிக்கும். திட்டமிட்டபடி பாடங்களை படிப்பதில் கவனம் செலுத்துவீர்கள். பரிகாரம்: குல தெய்வத்தை வணங்கி வர குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். காரிய அனுவலம் உண்டாகும்.

  MORE
  GALLERIES

 • 812

  இந்த வார ராசிபலன்... 08 -01- 2023 முதல் 14 -01- 2023 வரை..

  விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை): கிரகநிலை: தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரியன், புதன்(வ) - தைரிய வீர்ய ஸ்தானத்தில் சுக்கிரன், சனி - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு - சப்தம ஸ்தானத்தில் செவ்வாய் (வ) - விரைய ஸ்தானத்தில் கேது என கிரகநிலை இருக்கிறது. இந்த வாரம் எந்த காரியத்தை செய்தாலும் லாபம் ஏற்படும். பணவரத்து அதிகரிக்கும். உடல் சோர்வு நீங்கும். வீண் பிரச்சனைகள் அகலும். நண்பர்கள் உறவினர்களுடன் மனவருத்தம் நீங்கி சுப உறவு உண்டாகலாம். பயணங்கள் செல்ல நேரிடும். கூட்டு தொழில் அல்லது வியாபாரம் செய்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் உண்டாகும். வேலைப்பளு கூடும். குடும்பத்தில் அடுத்தவர்களால் ஏதேனும் குழப்பம் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். பெண்களுக்கு உறவினர்களிடம் பேசும் போது கவனமாக பேசுவது நல்லது. கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதார நிலை உயர்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். சேமிப்புகளில் கவனம் செலுத்துவீர்கள். அரசியல்வாதிகளுக்கு உங்கள் பொறுப்பான பணிகளுக்காக தலைமையின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். அவர்களின் தனிப்பட்ட அபிமானத்தையும் பெற்று மகிழ்வீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது. பெரியோர் சொல்படி நடப்பது வெற்றிக்கு உதவும். பரிகாரம்: முருகனை வணங்கி வர பிரச்சனைகள் தீரும். பொருள் சேர்க்கை ஏற்படும். மனஅமைதி கிடைக்கும்.

  MORE
  GALLERIES

 • 912

  இந்த வார ராசிபலன்... 08 -01- 2023 முதல் 14 -01- 2023 வரை..

  தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1-ம் பாதம்): கிரகநிலை: ராசியில் சூரியன், புதன்(வ) - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்கிரன், சனி - சுக ஸ்தானத்தில் குரு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் (வ) - லாப ஸ்தானத்தில் கேது என கிரகநிலை இருக்கிறது. இந்த வாரம் எல்லா காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். பணவரத்து அதிகரிக்கும். கடன் பிரச்சனை தீரும். தகராறு, வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகும். கவுரவம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் நீங்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். பண பிரச்சனை தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு குறையும். முயற்சிகள் காலதாமதமாக பலன் கொடுக்கும். எதை பற்றியும் கவலைப்படாமல் செயலாற்றுவீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். திருமண காரியங்கள் கைகூடும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளிகுறையும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சியை தரும். பெண்களுக்கு எதிர்ப்புகள் விலகும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கொட்டும். அதன் மூலம் உங்களது பொருளாதார நிலை உயரும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பாராத இடங்களிலிருந்து விரும்பிய உதவிகள் கிடைக்கும். மனஉற்சாகத்துடன் கட்சி பிரசாரங்களில் பங்கேற்பீர்கள். வழக்குகளும் முடிவுக்கு வரும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டிகள் குறையும். எதை பற்றியும் கவலைப்படாமல் காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். பரிகாரம்: குரு பகவானை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். பண பிரச்சனை தீரும். குடும்ப நன்மை ஏற்படும்.

  MORE
  GALLERIES

 • 1012

  இந்த வார ராசிபலன்... 08 -01- 2023 முதல் 14 -01- 2023 வரை..

  மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்): கிரகநிலை: ராசியில் சுக்கிரன், சனி - தைரிய வீர்ய ஸ்தானத்தில் குரு - சுக ஸ்தானத்தில் ராகு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய் (வ) - தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் கேது - விரைய ஸ்தானத்தில் சூரியன், புதன்(வ) என கிரகநிலை இருக்கிறது. இந்த வாரம் மன உறுதி அதிகரிக்கும். எதையும் கண்டு அஞ்சாமல் பணியாற்றுவீர்கள். வாக்குவன்மையால் காரிய அனுகூலம் உண்டாகும். பணதேவை ஏற்படலாம். தேவையான நேரத்தில் மற்றவர்களின் உதவி கிடைக்கும். புதிய சொத்து வாங்குவதில் கவனம் செல்லும். தொழில் வியாபாரம் முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும். திறமையான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் சொல்வதை செய்வதன் மூலம் நன்மை கிடைக்க பெறுவார்கள். குடும்பத்தில் அமைதி ஏற்படும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகள் பற்றிய கவலை நீங்கும். பெண்களுக்கு புதிதாக செய்யும் காரியங்களில் கவனம் தேவை. கலைத்துறையினருக்கு புதிய புதிய வாய்ப்புகள் பெருமளவில் தேடி வரும். வாய்ப்பு தேடி நீங்கள் பெருமளவில் அலைந்த நிலைமாறி, உங்களைத் தேடி பலர் வரும் நிலை ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு உங்கள் செல்வாக்கு நாளுக்குநாள் பெருகி வரும். பொருளாதார வசதி நல்ல முறையில் மேம்படும். பொது மக்களிடமும் உங்களுக்கு பெருமதிப்பு இருந்து வரும். மாணவர்களுக்கு ஆசிரியர் சொல்படி பாடங்களை படிப்பது கூடுதல் மதிப்பெண் பெற்று வெற்றி பெற உதவும். பரிகாரம்: சனி பகவானை வணங்கி வர கஷ்டங்கள் குறையும். வேலை பளு குறையும்.

  MORE
  GALLERIES

 • 1112

  இந்த வார ராசிபலன்... 08 -01- 2023 முதல் 14 -01- 2023 வரை..

  கும்பம் (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்): கிரகநிலை: தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு - தைரிய வீர்ய ஸ்தானத்தில் ராகு - சுக ஸ்தானத்தில் செவ்வாய் (வ) - பாக்கிய ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சூரியன், புதன்(வ) - விரைய ஸ்தானத்தில் சுக்கிரன், சனி என கிரகநிலை இருக்கிறது. இந்த வாரம் எடுக்கும் காரியங்களை செய்வதற்கு அனுபவ அறிவும், செயல்திறனும் அதிகரிக்கும். உங்களது செயல்களுக்கு பாராட்டுகள் கிடைக்க பெறுவீர்கள். சுபச்செலவு அதிகரிக்கும். வாகனங்கள் பயன்படுத்தும் போது கவனம் தேவை. சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்க்கை தரம் உயரும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்தநிலை நீங்கும். உங்களது பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அடுத்தவரை நம்பி பொறுப்புக்களை ஒப்படைப்பதை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களின் ஒத்துழைப்பால் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையில் இருந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். பெண்களுக்கு அடுத்தவருக்கு உதவி செய்யும் போது கவனம் தேவை. கலைத்துறையினருக்கு முயற்சி செய்தால் பல புதிய வாய்ப்புகளைப் பெறலாம். உங்களால் நேரடியாக செய்து முடிக்கக்கூடியவற்றை நீங்களாகவே செய்து முடிப்பது நன்மை தரும். அரசியல்வாதிகளுக்கு உங்களின் பணிகளில் கவனம் செலுத்துவது நன்மை தரும். மேலிடத்தில் உங்களைப் பற்றி அவதூறு கூறுபவர்கள் உங்களுடனே இருப்பார்கள். மாணவர்களுக்கு பாடங்களை படிக்கும் போது மிகுந்த கவனத்துடன் படிப்பது நல்லது. பரிகாரம்: விநாயக பெருமானுக்கு தேங்காய் உடைத்து வழிபட எல்லா சிக்கல்களும் தீரும். முயற்சிகள் சாதகமான பலன் தரும்.

  MORE
  GALLERIES

 • 1212

  இந்த வார ராசிபலன்... 08 -01- 2023 முதல் 14 -01- 2023 வரை..

  மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி): கிரகநிலை: ராசியில் குரு - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு - தைரிய வீர்ய ஸ்தானத்தில் செவ்வாய் (வ) - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் சூரியன், புதன்(வ) - லாப ஸ்தானத்தில் சுக்கிரன், சனி என கிரகநிலை இருக்கிறது. இந்த வாரம் எதையும் சாதிக்கும் திறமையும், சாமர்த்தியமும் அதிகமாகும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். எதிர்ப்புகள் விலகும். புதிய நண்பர்கள் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். மரியாதை கூடும். மனதில் துணிச்சல் அதிகரிக்கும். தன்னம்பிக்கையுடன் செயலாற்றுவீர்கள். தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும். தேவையான பண உதவியும் கிடைக்கும். கடன் தொல்லை குறையும். தொழில் போட்டிகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த கருத்து வேற்றுமை நீங்கி ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகள் எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். உறவினர்கள் மூலம் நன்மை உண்டாகும். பெண்களுக்கு மனோ தைரியம் கூடும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் காணப்படும். உங்கள் வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். அரசியல்வாதிகளுக்கு பலரும் பொறாமைப்படும் அளவிற்கு உங்கள் வளர்ச்சி இருக்கும். மேலிடத்திலிருந்து முழு ஆதரவும் கிடைக்கப்பெறுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டிகள் குறையும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். மனதில் நம்பிக்கை உண்டாகும். பரிகாரம்: ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி வணங்க உடல் ஆரோக்கியம் உண்டாகும். குடும்ப பிரச்சனைகள் தீரும்.

  MORE
  GALLERIES