மேஷம்: இந்த வாரம் பணவரத்து திருப்திகரமாக இருக்கும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களை வெற்றிகரமாக செய்வீர்கள். எதிர்பார்த்த உதவிகள் வந்து சேரும். அடுத்தவருக்கு உதவிகள் செய்யும் போது கவனமாக இருப்பது நல்லது. தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு வேகமாக இல்லாவிட்டாலும் நிதானமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதையும் ஆலோசித்து செய்வது நன்மை தரும். மேல் அதிகாரிகள் கூறுவதற்கு மாற்று கருத்துக்களை கூறாமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் நிதானமாக பேசுவது குடும்ப அமைதியை தரும். நண்பர்கள், உறவினர்கள் விலகி செல்வது போல் இருக்கும். பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். கலைத்துறையினர் மனதிற்கு திருப்தியளிக்கும் வகையில் அனைத்து விஷயங்களும் நடக்கும். அரசியல்வாதிகள் மாற்று கருத்துக்களை மற்றவர்களிடம் கூறாமல் இருப்பது நன்மை தரும். மாணவர்களுக்கு எதையும் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசித்து செய்வது நன்மை தரும். கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - செவ்வாய் - வியாழன் பரிகாரம்: கந்த சஷ்டி கவசம் சொல்லி வருவதால் கஷ்டங்கள் போகும். மன குழப்பம் நீங்கி தைரியம் உண்டாகும்.
ரிஷபம்: இந்த வாரம் நீங்கள் பிறரின் நட்பை பயன்படுத்தி எதையும் செய்து முடிப்பீர்கள். வீண் அலைச்சல் குறையும். சிக்கல்கள் தீரும். எண்ணிய காரியம் கைகூடும் குறிக்கோள் நிறைவேறும். சமூகத்தில் அந்தஸ்து உண்டாகும். தொழில் வியாபாரத்தில் மாற்றம் செய்ய எண்ணுவீர்கள். சிலர் புதிய தொழில் தொடங்க முற்படுவார்கள். அவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. வாடிக்கையாளர்களின் தேவைகளை சமாளித்து விடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் உண்டாகும். குறிக்கோளை அடைவது லட்சியமாக கொண்டு செயல்படுவீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே திடீர் வாக்குவாதங்கள் உண்டாகலாம். வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு வெளியே தங்க நேரிடலாம். வீண்செலவுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு எண்ணிய காரியம் கை கூடும். கலைத்துறையினருக்கு அடுத்தவரை பார்த்து எதையும் செய்ய தோன்றலாம். அரசியல்வாதிகளுக்கு வீண் அலைச்சல் குறையும் சிக்கலான பிரச்சனைகளில் நல்ல முடிவு கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் மதிப்பெண் பெற எண்ணுங்கள். அதற்கான முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் - புதன் - வெள்ளி பரிகாரம்: அம்மனை வணங்கி வர பிரச்சனைகள் குறையும். தடைபட்ட காரியங்களில் தடை நீங்கும்.
மிதுனம்: இந்த வாரம் எதிர்ப்புகள் விலகும். தொல்லைகள் தீரும். வீண்கவலைகள் ஏற்பட்டு நீங்கும். கோபத்தை கட்டுப்படுத்துவது நல்லது. பணவரத்து தாமதப்படும். தொழில் வியாபாரத்தில் வேகம் குறைந்தாலும் திருப்திகரமாக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மற்றவர்களின் ஆலோசனையை கேட்டு செயல்படுவதை தவிர்ப்பது நல்லது. மேல் அதிகாரிகள் மூலம் நன்மை உண்டாகும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும். எதிர்பார்த்த காரியங்கள் நடக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். உறவினர், நண்பர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கி நெருக்கம் ஏற்படும். பெண்களுக்கு வீண் கவலைகள் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்கள் ஆலோசனைகளை ஏற்குமுன் அதுபற்றி பரிசீலிப்பது நல்லது. அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தில் இருந்து வந்த கருத்து மோதல்கள் அகலும். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் வந்து குவியும். மாணவர்களுக்கு எதிலும் நல்லது கெட்டதை யோசித்து அதன் பின்பு அந்த காரியத்தில் ஈடுபடுவது நன்மை தரும். கல்வியில் கூடுதல் கவனம் தேவை. அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் - புதன் - வெள்ளி பரிகாரம்: புதன்கிழமை அன்று பெருமாளை வணங்க மனதெளிவு உண்டாகும். அறிவு திறன் அதிகரிக்கும்.
கடகம்: இந்த வாரம் வீண் அலைச்சல் நீங்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மனதில் தெளிவு உண்டாகும். ஆக்கபூர்வமாக எதையும் செய்யும் எண்ணம் தோன்றும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. பணம் வரும் வாய்ப்பு உள்ளது. தொழில், வியாபாரம் விரிவுபடுத்துவது தொடர்பான திட்டங்கள் தோன்றும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயணங்களால் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகள் கூறுவதை மறுத்து பேசாமல் அனுசரித்து செல்வது நன்மையை தரும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் நீங்கும். தெளிவான முடிவுகள் மூலம் நன்மை உண்டாகும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். பெண்களுக்கு எதையும் புதுமையாக செய்து வெற்றி காண்பீர்கள். கலைத்துறையினருக்கு மனதில் இருந்த குழப்பம் நீங்கி தெளிவு உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு காரியங்கள் துரிதமாகும். புதிய பதவிகள் தேடிவரும். மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கூறுவதை கேட்டு அதன்படி நடப்பதும், பாடங்களில் இருக்கும் சந்தேகங்களை உடனுக்குடன் கேட்டு தெரிந்து கொள்வதும் வெற்றிக்கு உதவும். அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் - வியாழன் - வெள்ளி பரிகாரம்: குருபகவானுக்கு கொண்டைக்கடலை மாலை அர்ப்பணித்து வணங்கி வர செல்வம் சேரும். வாழ்க்கை துணையின் ஆதரவு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
சிம்மம்: இந்த வாரம் உங்கள் பேச்சில் வேகம் இருக்கும். எல்லாவிதத்திலும் நன்மை உண்டாகும். மனோ தைரியம் வரும். எதையும் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். அந்நிய நபர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் அதிக உழைப்பின் மூலம் லாபம் கிடைக்க பெறுவார்கள். பொருளாதாரம் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் சாதகமாக பலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த ஒரு வேலையையும் கூடுதல் உழைப்பின் மூலம் செய்து முடிக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். எதிர்பார்த்த தகவல் நல்ல தகவலாக இருக்கும். அவசரத்தை தவிர்ப்பது நல்லது. சகோதரர் வழியில் உதவியை எதிர்பார்க்கலாம். பெண்களுக்கு எதிர்ப்புகள் நீங்கும். அரசியல்வாதிகளுக்கு நெருக்கடியான நேரத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கலைத்துறையினருக்கு முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். மாணவர்களுக்கு கூடுதலாக நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும். தேவையான உதவிகள் கிடைக்கும். அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - செவ்வாய் - வியாழன் பரிகாரம்: நவகிரகங்களை தீபம் ஏற்றி வழிபட்டு வர எதிர்ப்புகள் விலகும். பிரச்சனைகளில் சுமூக முடிவு உண்டாகும். தைரியம் கூடும்.
கன்னி: இந்த வாரம் வாக்கு வன்மையால் எதையும் சாதகமாக செய்து முடிப்பீர்கள். திறமை அதிகரிக்கும். திட்டமிட்டபடி செயலாற்றுவதில் கவனம் செலுத்துவீர்கள். ராசிநாதன் புதனின் சார பலம் பலவித நற்பலன்களை அளிக்கும். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் சாதுரியமான பேச்சினால் எதிலும் லாபம் காண்பார்கள். வர்த்தக திறமை அதிகரிக்கும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையால் முன்னேற்றமடைவார்கள். இழுபறியாக இருந்த வேலையை துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். பிள்ளைகளிடம் கனிவுடன் பேசுவது நல்லது. விருந்தினர் வருகை இருக்கும். குடும்ப பிரச்சனைகளில் சாதகமான முடிவே உண்டாகும். பெண்களுகள் துணிச்சலாக எதிலும் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு வாகனங்களில் செல்லும்போதும் பயணங்களின் போதும் கவனம் தேவை. கலைத்துறையினர் எந்த காரியத்திலும் திட்டமிட்டு செயல்படுவது அவசியம். மாணவர்களுக்கு திறமையால் முன்னேற்றம் உண்டாகும். கஷ்டமான பாடங்களையும் துணிச்சலாக படித்து முடிப்பீர்கள். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி பரிகாரம்: நவக்கிரகத்தில் புதனை வணங்க குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். பண கஷ்டம் குறையும்.
துலாம்: இந்த வாரம் பல வழிகளிலும் ஏற்பட்ட தொல்லைகள் குறையும். ஆனால் எந்த ஒரு வேலையிலும் எச்சரிக்கையுடன் ஈடுபடுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதும் நல்லது. திடீர் இடமாற்றம் ஏற்பட்டாலும் அதன் மூலம் சாதகம் உண்டாகலாம். வீண் செலவுகள் கவுரவ குறைச்சல் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் மெத்தன போக்கு காணப்பட்டாலும் குருவின் சஞ்சாரத்தால் தேவையான பணவரத்தும் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சல் காரியங்களில் இழுபறி என்ற நிலையை காண்பீர்கள். பேச்சை குறைத்து செயலில் ஈடுபடுவது நன்மையை தரும். குடும்பத்தில் சுமூகமான நிலை காணப்படும். பிள்ளைகள் பற்றிய கவலை இருந்து வரும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. தாய் தந்தையின் உடல் நிலையிலும் கவனம் செலுத்துவது நல்லது. பெண்களுக்கு தொல்லைகள் குறையும். அரசியல்வாதிகளுக்கு வீண் செலவுகள் உண்டாகலாம். வாக்கு கொடுப்பதற்கு முன் யோசித்து கொடுக்கவும். கலைத்துறையினருக்கு பணவரத்து எதிர்ப்பார்ப்பது போல் இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் மெத்தன போக்கு ஏற்படாமல் தீவிர கவனத்துடன் பாடங்களை படிப்பது வெற்றிக்கு வழி வகுக்கும். அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி பரிகாரம்: ஊனமுற்றவர்களுக்கு தொண்டு செய்வதும் சிவனை வழிபடுவதும் கஷ்டங்களை நீக்கி வீண் விரயத்தை குறைக்கும். காரியத்தடை நீங்கும்.
விருச்சிகம்: இந்த வாரம் இனிமையான பேச்சின் மூலம் சிக்கலான காரியங்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். உங்கள் திறமையை கண்டு அடுத்தவர்கள் வியப்பார்கள். அலைச்சலை தவிர்ப்பதன் மூலம் களைப்பு ஏற்படாமல் தடுத்து கொள்ள முடியும். வேளை தவறி உணவு உண்ணாமல் பார்த்துக்கொள்வது நல்லது. பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் சாதுரியமாக செயல்பட்டு முன்னேற்றம் காண்பார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு பாராட்டு பெறுவார்கள். ஆனால் கடுமையான பணியின் காரணமாக சோர்வு உண்டாகலாம். குடும்ப விஷயங்களில் ஆர்வம் காண்பீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் கவனம் செல்லும். பிள்ளைகள் முன்னேற்றத்திற்காக பாடுபடுவீர்கள். பெண்களுக்கு திடீர் என்று கோபம் உண்டாவதை தவிர்ப்பது நல்லது. கலைத்துறையினருக்கு தங்களின் திறமையை கண்டு மற்றவர்கள் பாராட்டுவார்கள். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பணவரத்து இருக்கும். மாணவர்களுக்கு கோபத்தை குறைத்து நிதானத்தை கடைபிடிப்பது முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும். பாடங்களை நன்கு படித்து பாராட்டு பெறுவீர்கள். அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி பரிகாரம்: ஆஞ்சனேய கவசத்தை படித்து வருவது மன குழப்பங்கள் நீங்கும். தைரியம் உண்டாகும். தடைபட்ட காரியங்கள் நன்கு நடந்து முடியும்.
தனுசு: இந்த வாரம் எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சாமல் சாமர்த்தியமாக செயல்படுமளவு தன்னம்பிக்கை ஏற்படும். மனம் மகிழும்படியான சம்பவங்கள் நடக்கலாம். ஆடை, அலங்கார பொருட்கள் வாங்கும் எண்ணம் தோன்றும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும் சூழ்நிலை ஏற்படும். பணவரத்து கூடும். மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். நீண்ட தூர தகவல்கள் நல்ல தகவல்களாக வரும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கப்பெறுவார்கள். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும். குழந்தைகள் முன்னேற்றத்தில் ஆர்வம் காட்டுவீர்கள். பெண்களுக்கு நீண்ட தூரத்தில் இருந்து வரும் தகவல்கள் மனதிருப்தியை தருவதாக இருக்கும். அரசியல்வாதிகளுக்கு முயற்சிகளில் சாதகமான பலன் பெறுவீர்கள். கலைத்துறையினர் புதிய வாய்ப்புகளை பெறுவார்கள். மாணவர்களுக்கு திறமையாக எதையும் செய்து பாராட்டு பெறுவீர்கள். கல்வியில் முன்னேற்றத்திற்கு எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன் பரிகாரம்: வியாழக்கிழமையில் குரு பகவானுக்கு நெய்தீபம் ஏற்றி வணங்க செல்வம் சேரும். செயல்திறன் கூடும். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும்.
மகரம்: இந்த வாரம் மனதில் நம்பிக்கை உண்டாகும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். பேச்சின் இனிமையால் காரிய வெற்றி உண்டாகும். எதிலும் தாமதமான போக்கு காணப்படும். எதிர்ப்புகள் விலகும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்தமான போக்கு மாறும். வேகம் பிறக்கும். கடன் பிரச்சனை தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்க பெறுவார்கள். இடமாற்றத்துடன் பதவி உயர்வு சிலருக்கு கிடைக்கலாம். குடும்ப பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவிக்கிடையே மனகசப்பு நீங்கும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க நினைப்பீர்கள். பெண்களுக்கு எதிர்ப்புகள் விலகும். அரசியல்வாதிகளுக்கு காரிய தடை தாமதம் நீங்கும். ஆரோக்கியம் உண்டாகும். கலைத்துறையினருக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு வாய்ப்புகள் வந்து குவியும். பலவழிகளிலும் வருமானம் வந்து சேரும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த பிரச்சனைகள் தீரும். முடிவு எடுக்க முடியாமல் இழுபறியாக இருந்த விஷயங்களில் நல்ல முடிவு கிடைக்கும். அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி பரிகாரம்: அருகிலிருக்கும் பெருமாள் ஆலயத்திற்கு சென்று வணங்க வாழ்க்கை வளம்பெறும். மனஅமைதி உண்டாகும்.
கும்பம்: இந்த வாரம் இழுபறியாக பாதியில் நின்ற காரியங்கள் நன்கு நடந்து முடியும். விரும்பிய காரியத்தை நிறைவேற்ற தேவையான மனோ பலத்தை தரும். வராமல் நின்ற பணம் கைக்கு வந்துசேரும். புதிய நபர்களின் நட்பும், அதனால் மன மகிழ்ச்சியும் ஏற்படும். மதிப்புகள் கூடும். தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். வேலைபளு குறையும். திறமையான பேச்சின் மூலம் சக ஊழியர்களின் நட்பை பெறுவீர்கள். குடும்பத்தில் இருப்பவர்கள் மூலம் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். ஆனால் மனதில் ஏதாவது குறை இருக்கும் வெளிக்காட்ட மாட்டீர்கள். பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். உறவினர்கள் வருகை இருக்கும். பெண்களுக்கு மனோ தைரியம் கூடும். அரசியல்வாதிகளுக்கு எடுத்த காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். கலைத்துறையினர் எதிலும் அவசரம் காட்டாமல் இருப்பது நன்மை தரும். மாணவர்களுக்கு கல்வியில் திறமை வெளிப்படும். பாடங்கள் படிப்பதில் தீவிர கவனம் செலுத்துவீர்கள். அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி பரிகாரம்: மாரியம்மனை தீபம் ஏற்றி வணங்க குழப்பங்கள் தீரும். காரிய வெற்றி உண்டாகும்.
மீனம்: இந்த வாரம் வீண் செலவை குறைக்க திட்டமிட்டு செயல்படுவது நல்லது. கூடுமானவரை பயணத்தை தவிர்ப்பது நன்மை தரும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். புதிய நபர்களிடம் கவனமாக இருப்பது நன்மை தரும். உறவினர் உதவி கிடைக்கும். தொழில் வியாபாரம் எதிர்பார்த்தபடி நன்கு நடக்கும். பணதட்டுப்பாடு ஏற்பட்டு பின்னர் சரியாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இருந்த சங்கடங்கள் சரியாகும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பதில் கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களது ஆலோசனை கேட்டு நடப்பது மனதுக்கு திருப்தி தரும். கணவன் மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவதால் வருத்தங்கள் நீங்கும். பிள்ளைகளின் செயல்பாடுகள் மனதுக்கு திருப்தி தருவதாக இருக்கும். விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு வரும். பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு பணவரத்து இருக்கும். எடுக்கும் முடிவுகளுக்கு ஆலோசனைகள் அவசியம். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கூடுதல் முயற்சிகள் தேவை. விளையாட்டில் ஆர்வம் உண்டாகும். அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன் பரிகாரம்: லஷ்மி நரசிம்மரை வணங்க குடும்ப கஷ்டம், கடன் தொல்லை நீங்கும். வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.