முகப்பு » புகைப்பட செய்தி » ஆன்மிகம் » மேஷம் முதல் மீனம் வரை.. இந்த வாரம் எப்படி இருக்கும்? டிசம்பர் 11 - 17 வரை ராசி பலன்!

மேஷம் முதல் மீனம் வரை.. இந்த வாரம் எப்படி இருக்கும்? டிசம்பர் 11 - 17 வரை ராசி பலன்!

Weekly Horoscope | மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிக்கான இந்த வார (11 -12- 2022 முதல் 17 -12- 2022 வரை) ராசிப்பலனை கணித்தவர் பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • 112

    மேஷம் முதல் மீனம் வரை.. இந்த வாரம் எப்படி இருக்கும்? டிசம்பர் 11 - 17 வரை ராசி பலன்!

    மேஷம்: இந்த வாரம் லாபம் அதிகரிக்கும். எதிலும் இருந்து வந்த சுணக்க நிலை மாறும். மனகஷ்டம் அகலும். வீண்செலவு குறையும். உடல்சோர்வு நீங்கும். மனோதைரியம் கூடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். முயற்சிகள் சாதகமான பலன் தரும். குடும்பத்தில் நிம்மதி குறையும் படியான சூழ்நிலை வரலாம். கணவன், மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது அவர்களின் வெற்றிக்கு உதவும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமடைய பாடுபடுவீர்கள். எதிர்பார்த்த ஆர்டர்கள் வரலாம். சரக்குகளை அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி நிமித்தமாக அலைய வேண்டி இருக்கும். பெண்களுக்கு மனோதைரியம் கூடினாலும் பழைய சம்பவங்களின் நினைவால் மனமகிழ்ச்சி குறையும். மாணவர்களுக்கு திட்டமிட்டபடி செயல்பட முடியாதபடி தடங்கல்கள் ஏற்படலாம். பரிகாரம்: அம்மனை வணங்குவது

    MORE
    GALLERIES

  • 212

    மேஷம் முதல் மீனம் வரை.. இந்த வாரம் எப்படி இருக்கும்? டிசம்பர் 11 - 17 வரை ராசி பலன்!

    ரிஷபம்: இந்த வாரம் கவலைகள் அகலும். பணவரத்து இருக்கும். தைரியம் அதிகரிக்கும். எடுத்த காரியத்தை திருப்தியுடன் செய்து முடிப்பீர்கள். சாமர்த்தியமான பேச்சு இக்கட்டான நேரங்களில் கைகொடுக்கும். எதிலும் கவனம் தேவை. புதிய நண்பர்களின் சேர்க்கையும் அவர்களால் உதவியும் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகள் வழியில் நிம்மதி கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான பணிகள் தடையின்றி நடக்கும். புதிய ஆர்டர் தொடர்பான காரியங்கள் சாதகமான பலன் தரும். வியாபார போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிசுமை குறைந்து மனநிம்மதி அடைவார்கள். பெண்களுக்கு காரியங்களில் ஏற்பட்ட தடை நீங்கி திருப்தியாக நடந்து முடியும். சாதூரியமான பேச்சின் மூலம் பிரச்சனைகள் தீரும். பணவரத்து திருப்தி தரும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் இருந்த போட்டிகள் குறையும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். பரிகாரம்: முருகனை வழிபடுவதால் முயற்சிகள் வெற்றி பெறும்.

    MORE
    GALLERIES

  • 312

    மேஷம் முதல் மீனம் வரை.. இந்த வாரம் எப்படி இருக்கும்? டிசம்பர் 11 - 17 வரை ராசி பலன்!

    மிதுனம்: இந்த வாரம் எதிலும் கவனமாக இருக்க வேண்டிய வாரம். பணதேவை அதிகரிக்கும். வீண்செலவு மனஅமைதி பாதித்தல் ஆகியவை இருக்கும். விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாய்க்கு ருசியாக உணவு உண்பீர்கள். காரிய தாமதம், உடல் சோர்வு, வீண்பகை போன்றவை ஏற்படலாம் உங்களை கண்டு அடுத்தவர் பொறாமை படக்கூடும். குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்களால் டென்ஷன் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே கோபமான பேச்சை விடுத்து அமைதியாக எதையும் எடுத்து சொல்வது நல்லது. பிள்ளைகளின் நலனுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களுக்காக அலைய வேண்டி இருக்கும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து பேசுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வதன் மூலம் நன்மை கிடைக்க பெறுவார்கள். பெண்களுக்கு மனஅமைதி பாதிக்கும் படியான சூழ்நிலை இருக்கும். திடீர் செலவு உண்டாகும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். மாணவர்கள் பாடங்களை மிகவும் கவனமாக படிப்பது கூடுதல் நல்லது. பரிகாரம்: ஸ்ரீநரஸிம்மரை வணங்கி வருவது

    MORE
    GALLERIES

  • 412

    மேஷம் முதல் மீனம் வரை.. இந்த வாரம் எப்படி இருக்கும்? டிசம்பர் 11 - 17 வரை ராசி பலன்!

    கடகம்: இந்த வாரம் பகைகள் நீங்கும். எல்லாவற்றிலும் லாபம் கிடைக்கும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்வதன் மூலம் நன்மதிப்பு பெறுவீர்கள். உங்களுடன் கருத்து வேற்றுமை ஏற்பட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் உங்களை நாடி வருவார்கள். குடும்பத்தில் சகஜநிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே சுமுக உறவு இருக்கும். பிள்ளைகளுக்கு தேவையான ஆடை அணிகலன்கள் வாங்கி கொடுப்பீர்கள். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளை சிரமமின்றி செய்து முடிப்பார்கள். பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். பெண்களுக்கு பணவரத்து திருப்தி தரும். காரிய அனுகூலம் உண்டாகும. மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செலவு கூடும். கல்வியில் முன்னேற வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு பாடங்களை படிப்பீர்கள். பரிகாரம்: சிவனை வணங்குவது

    MORE
    GALLERIES

  • 512

    மேஷம் முதல் மீனம் வரை.. இந்த வாரம் எப்படி இருக்கும்? டிசம்பர் 11 - 17 வரை ராசி பலன்!

    சிம்மம்: இந்த வாரம் நன்மைகள் நடைபெறும். காரிய அனுகூலம் உண்டாகும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். துணிச்சலுடன் செயல் பட்டு எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரத்து இருக்கும். இடமாற்றம்,வெளியூர் பயணங்கள், அலைச்சல் ஆகியவை இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். யாரிடமும் எதிர்த்து பேசி விரோதத்தை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நன்மை தரும். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரிவு நீங்கி ஒன்று சேர்வார்கள். பிள்ளைகள் எதிர்காலம் பற்றிய எண்ணம் மேலோங்கும். தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும். அரசு தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கட்டளை இடுகின்ற பதவி கிடைக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்கிறவர்களுக்கு வேலை கிடைக்கும். பெண்கள் எந்த செயலையும் தைரியமாக செய்து முடிப்பீர்கள். மாணவர்களுக்கு வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கம் ஏற்படும். பரிகாரம்: குலதெய்வத்தை வணங்குவது

    MORE
    GALLERIES

  • 612

    மேஷம் முதல் மீனம் வரை.. இந்த வாரம் எப்படி இருக்கும்? டிசம்பர் 11 - 17 வரை ராசி பலன்!

    கன்னி: இந்த வாரம் வரவு இருக்கும். நற்பெயரும் புகழும் உண்டாகும். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு இருக்கும். வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்களை சந்திக்க நேரலாம். எப்படிப்பட்ட பிரச்சனை வந்தாலும் சமாளித்துவிடும் திறமை இருக்கும். குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருக்கும். மனவருத்தத்துடன் சென்ற உறவினர்கள் வருத்தம் நீங்கி மீண்டும் வந்து சேருவார்கள். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வியாபார வளர்ச்சிக்காக துணிச்சலுடன் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற வாய்ப்புகள் வந்து சேரும். சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளின் ஆதரவுடன் பணிகளை திறமையாக செய்து முடிப்பீர்கள். பெண்கள் எந்த பிரச்சனைகளிலும் இருந்து வந்த சுணக்க நிலை மாறும். அடுத்தவர்களின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். பரிகாரம்: பெருமாளை வணங்குவது

    MORE
    GALLERIES

  • 712

    மேஷம் முதல் மீனம் வரை.. இந்த வாரம் எப்படி இருக்கும்? டிசம்பர் 11 - 17 வரை ராசி பலன்!

    துலாம்: இந்த வாரம் தடைகள் அகலும். விருப்பத்திற்கு ஏற்றவாறு காரியங்கள் நடக்கலாம். மனகுழப்பம் நீங்கும். பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. அடுத்தவருடன் சில்லறை சண்டைகள் ஏற்படலாம். வயிறு தொடர்பான நோய் ஏற்படலாம். பணவரத்து இருக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்பாடுகள் உங்களது கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம். அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் முன்னேற்றத்திற்காக பாடுபடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். எதிர்பார்த்தபடி பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பெண்களுக்கு காரிய தடைகள் நீங்கும். பணவரத்து இருக்கும். மாணவர்கள் யாரிடமும் வாக்குவாதம் செய்யாமல் அனுசரித்து செல்வது நல்லது. பரிகாரம்: ஆஞ்சநேயரை வணங்கி வர நன்மை நடைபெறும்

    MORE
    GALLERIES

  • 812

    மேஷம் முதல் மீனம் வரை.. இந்த வாரம் எப்படி இருக்கும்? டிசம்பர் 11 - 17 வரை ராசி பலன்!

    விருச்சிகம்: இந்த வாரம் ஆதாயம் பெறுவீர்கள். பணவரத்து எதிர்பார்த்ததை விட கூடுதலாக வரும். பேச்சின் இனிமை சாதூர்யத்தால் எடுத்த காரியத்தை திறம்பட செய்து முடிப்பீர்கள். எதிலும் கவனமாக இருப்பது நல்லது. அக்கம்பக்கத்தினரிடம் சில்லறை சண்டைகள் உண்டாகலாம். எதையும் சமாளிக்கும் மனநிலை ஏற்படும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும். பிள்ளைகள் உங்களது கருத்துக்களை கேட்டு அதன்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சியை தரும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் சிறு தடங்கல்கள் உண்டாகலாம். பார்ட்னர் மூலம் நன்மை உண்டாகும். நிதி உதவி எதிர்பார்த்தபடி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைத்து அலுவலக பணிகளை முடிக்க வேண்டி இருக்கும். பெண்கள் சாமர்த்தியமான பேச்சின் மூலமும் சூழ்நிலையை புரிந்து கொண்டு நடப்பதன் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றமடைய கூடுதலாக நேரம் எடுத்துக்கொண்டு கவனத்தை சிதற விடாமல் படிப்பது அவசியம். பரிகாரம்: மஹாலக்ஷ்மியை வணங்கி வர பிரச்சனைகள் அகலும்.

    MORE
    GALLERIES

  • 912

    மேஷம் முதல் மீனம் வரை.. இந்த வாரம் எப்படி இருக்கும்? டிசம்பர் 11 - 17 வரை ராசி பலன்!

    தனுசு: இந்த வாரம் சுகம் அதிகரிக்கும். எதிர்ப்புகள் நீங்கும். நோய்களை நீக்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். பணவரத்து எதிர்பார்த்ததை விட அதிகரிப்பது மனமகிழ்ச்சியை தரும். எதிரிகளால் இருந்து வந்த பிரச்சனை தீரும். நண்பர்கள் மூலம் தேவையான உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் உங்களது பேச்சுக்கு எதிர்பேச்சு பேசியவர்கள் அடங்கி விடுவார்கள். கணவன், மனைவிக்கிடையில் மகிழ்ச்சி நீடிக்கும். பிள்ளைகள் தொடர்பான காரியங்களை செய்து முடிக்க அலைய வேண்டி இருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான பயணங்கள் மேற்கொள்ள வேண்டி இருக்கும். இனிமையான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக பணி தொடர்பான அலைச்சல் இருக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். பெண்களுக்கு உங்களது செயல்களுக்கு இருந்த முட்டுகட்டைகள் விலகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் திறமை வெளிப்படும். கல்வியில் வெற்றி பெற தேவையான உதவிகள் கிடைக்கும். பரிகாரம்: சூரியனை வழிபட உடல் நலம் சீராகும்.

    MORE
    GALLERIES

  • 1012

    மேஷம் முதல் மீனம் வரை.. இந்த வாரம் எப்படி இருக்கும்? டிசம்பர் 11 - 17 வரை ராசி பலன்!

    மகரம்: இந்த வாரம் நோய் நீங்கும். மனக்கவலை ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத செலவு ஏற்படும். மற்றவர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பதால் பகை ஏற்படாமல் இருக்கும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் பாராட்டு கிடைப்பது அரிது. சிலரது எதிர்பாராத பேச்சு மனவருத்தத்தை தரலாம் குடும்பத்தில் இருப்பவர்களுடன் கருத்து மோதல் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த பூசல்கள் சரியாகும். பிள்ளைகளுக்கு தேவையன பொருட்களை வாங்குவது மற்றும் அவர்களது நலனுக்காக பாடுபட வேண்டியும் இருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கும் போது தீர ஆலோசித்த பின் முடிவு எடுப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள், சக ஊழியர்களின் கருத்துக்கு மாற்று கருத்து சொல்லாமல் இருப்பது நன்மை தரும். பெண்கள் உங்களது கருத்துக்கு சிலர் மாற்று கருத்து கூறலாம். எதிர்த்து பேசாமல் அமைதியாக இருப்பது நல்லது. மாணவர்கள் மனதை தளரவிடாமல் படிப்பது வெற்றியை தரும். பரிகாரம்: நவக்கிரக சந்திரனை வழிபடுவது

    MORE
    GALLERIES

  • 1112

    மேஷம் முதல் மீனம் வரை.. இந்த வாரம் எப்படி இருக்கும்? டிசம்பர் 11 - 17 வரை ராசி பலன்!

    கும்பம்: இந்த வாரம் சுணங்கிக் கிடந்த காரியங்கள் வேகம் எடுக்கும். அடுத்தவருடன் ஏற்படும் பிரச்சனைகளிலும் வாக்குவாதத்திலும் வெற்றியே கிடைக்கும். பணவரத்தும் கூடும். ஆனால் எந்த காரியத்தில் ஈடுபட்டாலும் அடுத்தவரை நம்புவதிலும் எச்சரிக்கை தேவை. உங்களுக்கு மிகவும் வேண்டியவர் உங்களை விட்டு விலகி செல்லலாம். மாற்று மதத்தினரின் உதவி கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்து செல்வது மனதுக்கு இதமாக இருக்கும். கணவன், மனைவிக்கிடையே சிறிய வாக்குவாதம் ஏற்படலாம். பிள்ளைகள் உங்களை புரிந்து கொண்டு நடப்பது மனதுக்கு நிம்மதியை தரும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த பணவரவு இருக்கும். போட்டிகள் குறையும் புதிய முயற்சிகளில் ஈடுபட தோன்றும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் செய்யும் பணிகள் திருப்திகரமாக நடந்து முடியும். எதிர்பார்த்த இடமாற்றம் வரலாம். பெண்களுக்கு சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். அடுத்தவரை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பதில் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டிகள் விலகும். பாடங்களை படிப்பதில் இருந்த இடையூறுகள் நீங்கும். பரிகாரம்: முருகனை வணங்குவது

    MORE
    GALLERIES

  • 1212

    மேஷம் முதல் மீனம் வரை.. இந்த வாரம் எப்படி இருக்கும்? டிசம்பர் 11 - 17 வரை ராசி பலன்!

    மீனம்: இந்த வாரம் சுபவிரையங்கள் ஏற்படும். துன்பம் வருவது போல் இருக்குமே தவிர, ஆனால் வராது. மனதில் ஏதேனும் கவலை, பயம் அவ்வப்போது ஏற்படும். உங்களது பேச்சே உங்களுக்கு எதிர்ப்பை உண்டாக்கலாம். யோசித்து பேசுவது நல்லது. ஆன்மீக எண்ணம் அதிகரிக்கும். குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பிள்ளைகள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள், நண்பர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. தொழில் வியாபாரம் மூலம் வர வேண்டிய லாபம் தாமதப்படும். எதிர்பார்த்த நிதியுதவி ஓரளவு கிடைக்கும். ஆர்டர்களுக்காக இருந்த அலைச்சல் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பம் இல்லாத மாற்றம் வரலாம். பெண்கள் எந்த ஒரு காரியத்தையும் செய்து முடிக்கும் வரை அந்த காரியம் முடியுமோ, முடியாதோ என்ற மனக் கவலை இருக்கும். வீண் அலைச்சல் குறையும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறுவது பற்றிய மனக்கவலை இருக்கும். பரிகாரம்: நாகதேவதையை வணங்குவது

    MORE
    GALLERIES