மேஷம் : இன்றைய நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமைகிறது. நீங்கள் சமூகத்தில் நல்ல பேர் எடுக்க வாய்ப்புள்ளது. இன்று நீங்கள் பண இலாபங்களை எதிர்பார்க்கலாம். உங்கள் சொந்த வாழ்க்கையில் சந்தோஷமும் திருப்தியும் நிறைந்திருக்கும். இன்று நீங்கள் அறிவுப்பூர்வமாக பேசுபவர்களின் ஒரு அங்கமாக இருப்பீர்கள். உங்கள் மனதில் இன்று பல வித எண்ணங்கள் இருந்து கொண்டே இருக்கும். நீங்கள் எதிலும் திருப்தி அடையும் குணத்தைக் கொண்டிருந்தால் பயனடைய வாய்ப்புண்டு.
ரிஷபம் : இன்றைய நாள் உங்களுக்கு சந்தோஷமான நாளாக அமைகிறது. நீங்கள் நாள் முழுவதும் சந்தோஷமாக இருப்பீர்கள். நீங்கள் மன ரீதியாகவும் ஆரோக்கியத்தை உணர்வீர்கள். உங்கள் வேலைகள் எல்லாம் நீங்கள் நினைத்தாற்போல முடிவடையும். வருமானத்தில் இலாபம் ஏற்படும். உங்களால் முடிவடையாத வேலைகள் இன்று முழுமையாகும். உங்கள் பெற்றோர்களிடமிருந்து நல்ல செய்தியை நீங்கள் எதிர்பார்க்கலாம். அவர்களால் உங்களுக்கு இலாபமும் கிடைக்கும். நோயால் அவதிப்படுபவர்கள் நோயிலிருந்து விடுபட வாய்ப்புள்ளது. உங்கள் சக பணியாளர்கள் உதவியாக இருப்பார்கள்
மிதுனம் : இன்றைய நாள் உங்களுக்கு கவலையான நாளாக அமைகிறது. இந்த வாரம் உங்கள் வாழ்க்கைத் துணை அல்லது குழந்தையின் உடல் நலம் கொஞ்சம் கவலைக்குறியதாக இருக்கும். எந்த வித வாக்குவாதம் மற்றும் பேச்சுவார்த்தைகளிலிருந்து தள்ளி இருக்கவும். உங்களை அவமானபடுத்துவதற்கான வாய்ப்பை எவருக்கும் கொடுக்காதீர்கள். நண்பர்களுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். வயிறு சம்பந்தமான நோய் ஏற்பட வாய்ப்புண்டு. வேலையின் ஆரம்பத்திலேயே தோல்விகள் வர வாய்ப்புள்ளது. வாகன போக்குவரத்தைத் தவிர்க்கவும்.
கடகம் : இன்றைய நாள் உங்களுக்கு சோர்வான நாளாக அமைகிறது. கெட்ட எண்ணங்கள் உங்களை வருத்தமடையச் செய்ய வாய்ப்புள்ளது. நீங்கள் உற்சாகம், சக்தி மற்றும் சந்தோஷத்தை இழந்த மாதிரி இருப்பீர்கள். குடும்ப உறவினர்களுடன் சண்டை போடவும் வாய்ப்புள்ளது. செலவுகள் அதிகரிக்கும், நீங்கள் செய்யும் வேலையில் தோல்வியைச் சந்திப்பீர்கள். நீங்கள் இருதய நோயால் பாதிக்கப்படலாம்.
சிம்மம் : இன்றைய நாள் உங்களுக்கு அமைதியான நாளாக அமைகிறது. நீங்கள் இன்று மிக்க மகிழ்ச்சியையும், அமைதியையும் அனுபவிப்பீர்கள். சகோதர, சகோதரிகளின் பிணைப்பு மேலும் பலமாகும். அவர்கள் உங்களுக்கு உதவியாகவும் இருப்பார்கள். நீங்கள் ஒவ்வொரு உறவின் உணர்வுகளின் ஆழத்தைப் புரிந்துகொள்வீர்கள். பக்கத்தில் இருக்கும் சுற்றுலா தளத்துக்குச் செல்ல திட்டமிடுவீர்கள். இன்று நீங்கள் பதற்றம் இல்லாமல் இருப்பீர்கள். செய்யும் எந்த வேலையிலும் வெற்றி அடைவீர்கள்.
கன்னி : இன்றைய நாள் உங்களுக்கு முயற்சி செய்ய வேண்டிய நாளாக அமைகிறது. குடும்ப சூழ்நிலை சந்தோஷமானதாக இருக்கும். உங்கள் இனிப்பான பேச்சுகளின் மூலம் எந்த வேலையையும் வெற்றிகரமா முடித்துக்கொள்வீர்கள். அறிவுப்பூர்வமான பேச்சுகளிலிருந்து விலகி இருக்க வேண்டும். இன்று நீங்கள் சில இனிப்புப் பண்டத்தை விரும்பி சாப்பிடுவீர்கள். உங்கள் செலவுகள் அதிகரிக்கலாம். உங்களுக்கு இது எதையும் முயற்சி செய்து பெறவேண்டிய காலமாக இருக்கும்.
துலாம் : இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பான நாளாக அமைகிறது. உங்கள் ஆக்கபூர்வ தன்மையின் உச்சத்தில் இருப்பீர்கள். சிறந்த ஆக்கபூர்வமான கருத்துகளுடன் வெளிவருவீர்கள். இன்று உங்களுக்கு ஆரோக்கியமான மன நிலையும் உடல் நிலையும் இருக்கும். உங்கள் வேலையில் கவனம் செலுத்துவீர்கள். அதை நேரத்துடன் முடித்து விடுவீர்கள். நீங்கள் மகிழ்ச்சியான பொழுதுபோக்கில் அதிக நேரத்தைச் செலவு செய்வீர்கள்.
விருச்சிகம் : இன்றைய நாள் உங்களுக்கு கவனமாக இருக்க வேண்டிய நாளாக அமைகிறது. உங்கள் ஆளுமை உணர்வையும் பேச்சையும் கட்டுப்படுத்துங்கள். உங்கள் மனம் பதற்றமுடன் இருக்கும் மற்றும் உடல் பிரச்சனைகள் கவலையைத் தரக்கூடும். நீங்கள் வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்கவும் இல்லையென்றால் அது விபத்தில் முடிய வாய்ப்புள்ளது. தேவைப்பட்டால் சிகிச்சைக்கு வெளியே செல்வதைக் கூட தவிர்க்கவும். நீங்கள் இன்று குடும்பத்தினருடன் அல்லது நண்பர்களுடன் சண்டை போட வாய்ப்புள்ளது.
தனுசு : இன்றைய நாள் உங்களுக்கு பயனுள்ள நாளாக அமைகிறது. நீங்கள் பொருளாதார ரீதியில் இலாபம் அடைவீர்கள். உங்கள் பிரியமானவர்களுடன் உல்லாச பயணம் மேற்கொள்வீர்கள். வியாபாரத்துக்கான சரியான நாள் இதுவாகும். குடும்பத்தில் அமைதி நிலவும். திருமணத்தை எதிர்பார்க்கும் நபர்கள் தங்களுக்கு தகுந்த வாழ்க்கைத் துணையைச் சந்திப்பார்கள்.
மகரம் : இன்றைய நாள் உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக அமைகிறது. உங்கள் குடும்பத்தினால் நீங்கள் மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள். நெருங்கியவர்கள் மற்றும் நண்பர்களைச் சந்திப்பதாலும் மகிழ்ச்சி ஏற்படலாம். உங்கள் வியாபாரத்துக்கு பணம் திரட்ட நீங்கள் பல்வேறு இடங்களுக்கு செல்லவேண்டியிருக்கும். இது உங்களுக்கு இலாபத்தை தரும். தொழிலில் நீங்கள் மரியாதையையும், பணத்தையும் சம்பாதிக்கலாம். உங்கள் செயல்திறனைக் கண்டு உயர் அதிகாரிகள் திருப்தி அடைவார்கள்.
கும்பம் : இன்றைய நாள் உங்களுக்கு புதுமையான நாளாக அமைகிறது. உங்கள் போட்டியாளர்களுடன் சண்டை போடுவதைத் தவிர்க்கவும். சோம்பேறிதனம் உங்களுக்கு தொந்தரவு கொடுக்கும். ஆனாலும் நீங்கள் மனதில் மகிழ்ச்சியை உணர்வீர்கள். உங்கள் உயர் அதிகாரிகளை கையாளும் போது சிறிது கவனமாக இருக்கவும். பொழுதுபோக்குக்காக செலவு செய்யலாம். குழந்தைகள் பற்றிய கவலை உங்களைப் பாதிக்கலாம். வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல்கள் கிடைக்கப்பெறுவீர்கள்.
மீனம் : இன்றைய நாள் உங்களுக்கு அருமையான நாளாக அமைகிறது. அநீதியான செயல்களில் ஈடுபட்டால் நீங்கள் பிரச்சனையில் சிக்கிக் கொள்வீர்கள். உங்கள் கோபத்தையும் வார்த்தை பிரயோகத்தையும் கட்டுப்படுத்துங்கள். உடல் நலம் சம்பந்தமான விஷயங்களில் கவனமாக இருக்கவும். சட்ட விரோதமான செயல்கள் செய்வதைத் தவிர்க்கவும். இன்று உங்களுக்கு மருத்துவ செலவுகள் ஏற்படலாம். நீங்கள் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். எதிர்மறை சிந்தனைகள் உங்களின் தற்போதைய வாழ்க்கையைப் பாதிக்கலாம். அவைகளைத் தவிர்க்கவும்.