மேஷம் : மீண்டும் மீண்டும் சவாலான சூழ்நிலையை சந்திப்பதாக நீங்கள் உணர்ந்தால் இந்த முறை நீங்கள் மிகவும் வலுவாக எதிர்கொள்ள தயாராகுங்கள். பணியிடத்தில் உங்களுக்கு இன்று கிடைக்கும் வாய்ப்பு உங்கள் மதிப்பை உயர்த்தும். நீங்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த நிதி உதவியை இன்று பெறலாம். உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு பட்டு துணி
ரிஷபம் : ஒரு புதிய நபர் உங்களுக்கு ஆர்வத்தை உண்டாக்க கூடும். வேறொருவரின் வாழ்க்கை உங்களுக்குள் ஒரு உத்வேகத்தை உண்டாக்கும். நீங்கள் இப்போது முன்பு ஈடுபட்ட பொழுதுபோக்குகளை மீண்டும் துவங்க நினைக்கலாம் அல்லது தற்போதைய பழக்கவழக்கங்களை தொடர நினைக்கலாம். உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு ஸ்ட்ரிங் லைட்
மிதுனம் : இன்று வேறொருவருடன் பார்ட்னர்ஷிப் சேர்ந்து எதிலும் ஈடுபடுவது நல்லது அல்ல. கிடைத்ததை கொண்டு வாழும் திருப்தி உங்களுக்கு இன்று கிடைக்கும். உங்களுக்கு இதுவரை கிடைத்துள்ள நன்மைகள் மற்றும் வளங்களை கருத்தில் கொண்டு திருப்தியடையும் மனநிலை ஏற்படும். வேலை நிமித்தமாக லேசான அலைச்சல் இருக்கலாம். உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு புதிய கார்
கடகம் : உங்களுக்கு நெருக்கமானவர்கள் உங்களை பற்றிய ரகசியங்களை வெளியே கசிய விடலாம். நீங்கள் அரசியல் அல்லது அரசு வேலையில் இருந்தால் இன்று பெரிய மாற்றத்தை காண்பீர்கள். வெளியாட்களை நம்புவதற்கு முன் நீங்கள் இருமுறை யோசிக்க வேண்டும். இன்று பணவரவு அதிகரிக்கலாம். உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு கோழி
சிம்மம் : இன்று உங்களுக்கு சீரான ஆற்றல் நிறைந்த அழகான நாளாக அமையும். உங்களுக்கு பிரியமானவர்கள் மற்றும் நெருக்கமானவர்களுடன் பேசி மகிழ கூடிய சந்தர்ப்பங்கள் ஏற்படும். மற்றவர்கள் உங்களுடன் தங்கள் உறவை மேம்படுத்த முயற்சிப்பார்கள். இன்று யாரிடமும் கோபத்தை வெளிப்படுத்தாமல் அமைதியாக இருங்கள். உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு அணில்
கன்னி : உங்களது ஒரு பழைய நண்பரை நீங்கள் இன்று நம்பும்படி இருக்கும். ஏனென்றால் அவர் உங்களுக்குள் நல்ல மாற்றத்தை ஏற்படுத்துவார். நிலுவையில் உள்ள பல வேலைகள் உங்கள் நேரத்தை வீணடிக்கலாம். மாலை நேரத்தை பொழுதுபோக்கிற்காக செலவிடுவீர்கள் என்றாலும், வரும் வாரத்திற்கான வேலைகளிலும் கவனம் தேவை. உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு கப்பர் வயர்
துலாம் : உங்கள் கடந்தகால அனுபவங்களின் அடிப்படையில் இன்று உங்களுக்கு நம்பிக்கை சார்ந்த சிக்கல் இருக்கலாம். பணியிடத்திலிருந்து உங்களுக்கு இன்று வரும் ஒரு நல்ல செய்தி உங்கள் ஒட்டுமொத்த மனநிலையை உற்சாகமாக்கலாம். உங்களின் உதவி மிகவும் தேவைப்படும் ஒருவர் உங்களை தொடர்பு கொள்வார். உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு மஞ்சள் ரோஜா
விருச்சிகம் : உங்கள் மீது விழும் விமர்சனத்தை ஆழமாக ஆராய வேண்டாம். அப்படி செய்வது வரவிருக்கும் வாய்ப்பை கெடுத்துவிடும். இன்று யாருடனும் வாக்குவாதம் செய்ய தேவை இல்லை. தியானம் செய்வது அல்லது இயற்கையை ரசிப்பதில் உங்கள் அமைதியை நீங்கள் காணலாம். உங்களுக்கு இன்று செல்வாக்கு மிக்க ஒருவருடன் அறிமுகம் ஏற்படலாம். உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு தேரை
தனுசு : நீங்கள் விலைமதிப்பற்ற ஒன்றை இழந்திருந்தால் அதை இன்று கண்டுபிடிக்கலாம். அதற்கு இன்று வலுவான வாய்ப்புகள் உள்ளன. உங்களை பணியமர்த்த ஆர்வமுள்ள மற்றும் உங்கள் மீது நம்பிக்கை உள்ள ஒருவர் உங்களை அணுகலாம். நண்பர்கள் தற்போது உங்களுக்கு மிக பெரிய ஆறுதலாக இருப்பார்கள். உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு பண தாவரம்
மகரம் : எதிர் பாலினத்தை சேர்ந்த ஒரு சுவாரஸ்யமான நபர் உங்கள் கவனத்தை ஈர்க்கலாம். எதிர்கால வேலைகளை திட்டமிட நீங்கள் இன்று சிறிது நேரம் ஒதுக்குவீர்கள். இன்று நடக்கும் பல விஷயங்களில் உங்களது கவனம் சிதறாமல் இருக்க வேண்டும். உங்கள் இலக்குகளை அடைவதற்கு முயற்சிகளை மேற்கொள்ள இன்று நல்ல நாள். உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு இறகு
கும்பம் : சாத்தியமும், நம்பிக்கையும் இன்று உங்களை உற்சாகப்படுத்துபவையாக இருக்கும். நேரத்தை வீணடிக்காமல் நீங்கள் எதை செய்தாலும் அதில் சீராக இருங்கள். வீட்டு விவகாரங்களில் பொறுமையாக இருக்க வேண்டும். வாங்கிய கடனை இன்று அடைக்க வேண்டியிருக்கும். உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு மஞ்சள் நிற குவார்ட்ஸ்
மீனம் : தாயின் ஆரோக்கியத்தில் இன்று கவனமாக இருக்க வேண்டும். உங்களைச் சுற்றி இன்று ஒரு ஆன்மீக சூழலை நீங்கள் அனுபவிக்கலாம். வெளியூரிலிருந்து இன்று உங்கள் வீட்டிற்கு விருந்தினர்கள் வரலாம். வழக்கமாக நீங்கள் ஈடுபடும் விஷயங்களில் இருந்து விலகி மற்ற விஷயங்களில் இன்று நீங்கள் கவனம் செலுத்த கூடும். உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு மர பெட்டி