மேஷம் : இன்று நீங்கள் மிகவும் மன உளைச்சலில் இருக்க நேரிடும். நீங்கள் உங்களை பற்றி யோசிக்க ஆரம்பிக்க வேண்டும். தேவையில்லாமல் யாராவது உங்களை குறை கூறினால் அதனை புறக்கணிக்கவும். அலுவலகத்தில் பொறுமையை கடைபிடிக்கவும். மன அழுத்தத்தை குறைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுங்கள். உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கிரிஸ்டல்
ரிஷபம் : இன்று நீங்கள் நம்பி பழகும் ஒருவரின் உண்மை முகத்தை காண நேரிடும். உங்கள் நண்பர் உங்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் நடந்து கொள்வார். அதனால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். அலுவலகத்தில் தேவையில்லாத பிரச்சனைகளில் தலையிட வேண்டாம். தடைபட்ட பணவரவு இன்று கிடைக்கும். உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - இறகு
மிதுனம் : நீண்ட நாட்களாக உங்களுக்கு இருந்த பிரச்சனை இன்று முடிவுக்கு வரும். அதனால் நீங்கள் இன்று மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இன்று சுறுசுறுப்பாக இருப்பீர்கள் என்பதால் இன்றைய நாளை பயன்படுத்தி கொள்ளுங்கள். உங்கள் உடன்பிறப்பு அல்லது உறவினருக்கு உங்கள் வழிகாட்டுதல் தேவைப்படலாம். இன்று மாலை உங்களுக்கு பிடித்த ஒருவரின் திடீர் வருகை இருக்கும். உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சில்வர்
கடகம் : இன்று குடும்பத்தினருடன் நேரம் செலவழித்து மகிழ்வீர்கள். இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். ஷாப்பிங் செல்ல நீங்கள் திட்டமிட்டு இருந்தால் இன்று சென்று வருவீர்கள். தம்பதிகள் இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்களுக்கு விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அதே நேரத்தில் வழக்கமான வேலைகளில் தடைகளை உருவாக்கலாம். உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - வானம்
துலாம் : இன்று உங்களுக்கு மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும். அதிக மன அழுத்தம் உங்களை சோர்வடையச் செய்யலாம். எனவே இன்று மகிழ்ச்சியாக இருங்கள். உங்களுக்கு பிடித்த இடத்திற்கு வெளியே சென்று வாருங்கள் . நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த நபர் உங்களை தேடி வருவார். உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பட்டு துணி
தனுசு : தொலைதூரத்திலோ அல்லது வெளிநாட்டிலோ இருந்து வரும் அழைப்பு உங்கள் நாளை சிறப்பாக மாற்றும். அதனால் இன்று ஜாலியாக இருப்பீர்கள். இன்று ஒரு குறுகிய வெளியூர் திட்டத்தை நிறைவேற்றுவீர்கள். உங்கள் தற்போதைய உறவுக்கு சில உடனடி பதில்கள் தேவைப்படலாம். எனவே உங்கள் துணையுடன் மனம்விட்டு பேசுங்கள் . உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சிம்னி
கும்பம் : இன்றைய நாள் கலவையான பலன்களைக் கொண்டுள்ளது. நீங்கள் உங்கள் வேலைகளில் கவனம் செலுத்தி விரைந்து முடிப்பீர்கள். உங்கள் கணவருடன் வெளியே சென்று வருவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். பொறுமையை கடைபிடிக்கவும். ரியல் எஸ்டேட்டில் காலடி எடுத்து வைக்க நினைப்பவர்கள் தற்போது அதனை ஒத்திப்போடலாம். உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - உப்பு
மீனம் : இன்று உங்களுக்கு ஒரு நல்ல வேலை குறித்த தகவல் கிடைக்கும். அதனை பயன்படுத்தி கொள்ளுங்கள். உங்கள் நண்பரின் ஒரு நல்ல ஆலோசனையானது பொன்னான நேரத்தை மிச்சப்படுத்தும். நீங்கள் இப்போது நம்பிக்கையுடனும், நிலுவையில் உள்ள முடிவை எடுப்பதில் உறுதியாகவும் இருப்பீர்கள். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு அதிக முன்னுரிமை கொடுங்கள். உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மயில்