முகப்பு » புகைப்பட செய்தி » Today Rasi Palan : இந்த ராசியினருக்கு இன்று (ஜூன் 16, 2022) பணவரத்து நன்றாக இருக்கும்..!

Today Rasi Palan : இந்த ராசியினருக்கு இன்று (ஜூன் 16, 2022) பணவரத்து நன்றாக இருக்கும்..!

Rasi palan | மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிக்கான இன்றைய (ஜூன் 16, 2022) ராசிப்பலனை கணித்தவர் பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • 112

    Today Rasi Palan : இந்த ராசியினருக்கு இன்று (ஜூன் 16, 2022) பணவரத்து நன்றாக இருக்கும்..!

    மேஷம்: இன்று தேவையற்ற சில காரியங்களை செய்ய வேண்டி இருந்தாலும் அதன் மூலம் நன்மை உண்டாகும். பணவரத்து திருப்தி தரும். தேவையான உதவி கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண வேண்டும் என்ற ஆர்வம் உண்டாகும். விளையாட்டு போட்டிகளில் திறமை வெளிப்படும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்.. அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7

    MORE
    GALLERIES

  • 212

    Today Rasi Palan : இந்த ராசியினருக்கு இன்று (ஜூன் 16, 2022) பணவரத்து நன்றாக இருக்கும்..!

    ரிஷபம்: இன்று எல்லா கஷ்டங்களும் நீங்கும். பொருளாதார மேம்பாடு உண்டாகும். பணவரத்து சீராக இருக்கும். வேலை பளு காரணமாக நேரம் தவறி உணவு உண்ண வேண்டி இருக்கும். வயிறு தொடர்பான கோளாறுகள் ஏற்பட்டு நீங்கும். திருமண முயற்சிகள் கைகூடும். வாழ்க்கை துணையால் பணவரத்து இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை.. அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

    MORE
    GALLERIES

  • 312

    Today Rasi Palan : இந்த ராசியினருக்கு இன்று (ஜூன் 16, 2022) பணவரத்து நன்றாக இருக்கும்..!

    மிதுனம்: இன்று கை, கால் வலி, உடல் சோர்வு உண்டாகலாம். அக்கம்பக்கத்தினரிடம் சில்லறை சண்டைகள் ஏற்பட்டு சரியாகும். கவுரவம் பாதிக்கும் படியான சூழ்நிலை வரலாம். தொழில் வியாபாரத்தில் பார்ட்னர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புத்தி சாதூர்யம் அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்.. அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

    MORE
    GALLERIES

  • 412

    Today Rasi Palan : இந்த ராசியினருக்கு இன்று (ஜூன் 16, 2022) பணவரத்து நன்றாக இருக்கும்..!

    கடகம்: இன்று வியாபாரம் தொடர்பான முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்கள், மேல் அதிகாரிகளுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். இயந்திரங்கள், ஆயுதங்கள், நெருப்பு ஆகியவற்றை கையாளும் தொழிலாளர்கள் கவனமாக இருப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்.. அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

    MORE
    GALLERIES

  • 512

    Today Rasi Palan : இந்த ராசியினருக்கு இன்று (ஜூன் 16, 2022) பணவரத்து நன்றாக இருக்கும்..!

    சிம்மம்: இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த மந்தநிலை மாறி வேகம் பிடிக்கும். குடும்பத்தில் இருப்பவர்களால் திடீர் பிரச்சனைகள் அதனால் வாக்குவாதம் போன்றவை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல்திறமை அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான காரியங்கள் நல்லபடியாக நடக்கும். எதிர்பாராத அனுபவங்களை பெறுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்.. அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

    MORE
    GALLERIES

  • 612

    Today Rasi Palan : இந்த ராசியினருக்கு இன்று (ஜூன் 16, 2022) பணவரத்து நன்றாக இருக்கும்..!

    கன்னி: இன்று வீண் அலைச்சல், வேலை பளு ஆகியவை அதிகரிக்கும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மை தரும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. பெண்கள் உங்களது செயல்களுக்கு மற்றவர்களது ஆதரவு கிடைக்கும். மாணவர்களுக்கு அடுத்தவரை பற்றிய விமர்சனங்கள், கிண்டல், கேலி பேச்சு போன்றவற்றை தவிர்த்து கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை.. அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

    MORE
    GALLERIES

  • 712

    Today Rasi Palan : இந்த ராசியினருக்கு இன்று (ஜூன் 16, 2022) பணவரத்து நன்றாக இருக்கும்..!

    துலாம்: இன்று பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த பண வரவு கிடைக்கும். குடும்ப கஷ்டங்கள் நீங்கும். தொழில், வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். யாருக்கும் அஞ்சாமல் நேர்மையாக செயலாற்றுவீர்கள். தடைபட்ட காரியங்களில் இருந்த தடை நீங்கி நன்றாக நடந்து முடியும். அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்.. அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

    MORE
    GALLERIES

  • 812

    Today Rasi Palan : இந்த ராசியினருக்கு இன்று (ஜூன் 16, 2022) பணவரத்து நன்றாக இருக்கும்..!

    விருச்சிகம்: இன்று மற்றவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் சமூகத்தில் அந்தஸ்தும், மரியாதையும் கிடைக்க பெறுவீர்கள். சிலர் குடும்பத்தை விட்டு பிரிந்து வெளியில் தங்க நேரலாம் கொடுக்கல், வாங்கலில் இருந்த சிக்கல் தீரும். எதிர்த்து செயல்பட்டவர்கள் விலகி சென்று விடுவார்கள். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். பொருளாதார நிலை உயரும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்.. அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

    MORE
    GALLERIES

  • 912

    Today Rasi Palan : இந்த ராசியினருக்கு இன்று (ஜூன் 16, 2022) பணவரத்து நன்றாக இருக்கும்..!

    தனுசு: இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். போட்டிகள் குறையும். எதிர்பார்த்த ஆர்டர் வரும். பணவரத்து திருப்தி தரும். கடன் பிரச்சனை கட்டுக்குள் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் உழைப்புக்கு ஏற்ற நல்ல பலன் கிடைக்கும். மேல் அதிகாரிகள் ஒத்துழைப்பும் இருக்கும். பங்கு மார்க்கெட்டில் முன்னேற்றம் காணப்படும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்.. அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

    MORE
    GALLERIES

  • 1012

    Today Rasi Palan : இந்த ராசியினருக்கு இன்று (ஜூன் 16, 2022) பணவரத்து நன்றாக இருக்கும்..!

    மகரம்: இன்று தொழில் விரிவுபடுத்துவது பற்றிய ஆலோசனை மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் உங்களுக்கு எதிராக பிரச்சனையை உண்டாக்கியவர்கள் தானாகவே அடங்கி விடுவார்கள். வீட்டில் சுப காரியம் நடக்கும். திருமண காரியங்களில் சாதகமான போக்க காணப்படும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். மதிப்பு கூடும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை.. அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

    MORE
    GALLERIES

  • 1112

    Today Rasi Palan : இந்த ராசியினருக்கு இன்று (ஜூன் 16, 2022) பணவரத்து நன்றாக இருக்கும்..!

    கும்பம்: இன்று தொழில் வியாபாரம் லாபகரமாக நடக்கும். எந்த ஒரு சின்ன வேலைக்காகவும் மிகவும் பாடுபட வேண்டி இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும் பயணங்களின் போது கவனம் தேவை. மாணவர்கள் சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டு படிப்பது நல்லது. வகுப்பில் கவனத்தை சிதற விடாமல் பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு.. அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

    MORE
    GALLERIES

  • 1212

    Today Rasi Palan : இந்த ராசியினருக்கு இன்று (ஜூன் 16, 2022) பணவரத்து நன்றாக இருக்கும்..!

    மீனம்: இன்று எல்லா கஷ்டங்களும் நீங்கும். பொருளாதாரம் மேம்படும் தைரியம் உண்டாகும். மற்றவர்கள் ஒப்படைத்த வேலையை பொறுப்போடு செய்து முடிப்பீர்கள். தேவையற்ற மன சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களிடம் அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சனை வராமல் தடுக்கலாம். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை.. அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

    MORE
    GALLERIES