பொருட்களை வாங்குவதில் ஒவ்வொரு மக்களும் ஒவ்வொரு விதம். சிலர் தங்கள் தேவைக்கு அதிகமாக பொருட்களை மிகுதியாக வாங்கிக் குவிப்பார்கள். சிலர் எது தேவையோ, அதை மட்டுமே வாங்குவார்கள். எதையாவது வாங்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்ற பேராவல், ஒருநாள் உங்களை கடனாளியாக்கி விடும் அல்லது மிகுந்த பற்றாக்குறையுடன் வாழ்க்கை நடத்த வேண்டியிருக்கும். அதே சமயம், இயற்கையாகவே சிலருக்கு ஷாப்பிங்ஃபோபியா என்னும் பொருட்களை வாங்கிக் குவிக்கும் எண்ணங்கள் இருக்கிறதாம். அவர்கள் எந்த ராசிக்காரர்கள், எப்படியெல்லாம் பொருட்களை வாங்குவார்கள் என்பதை இந்தச் செய்தியில் தெரிந்துக் கொள்ளலாம்....
தனுசு: கிரெடிட் கார்டு பயன்படுத்துவதற்கு முன்பாக ஒரு நொடி கூட இவர்கள் யோசிப்பதில்லையாம். அதே சமயம், பயணங்கள் மற்றும் புதிய அனுபவங்களுக்காகவே இதை அவர்கள் செய்கின்றனர். புதிய இடங்களுக்குப் பயணித்து, புதியவற்றை தெரிந்து கொள்ள இவர்களுக்கு அலாதி பிரியம் இருக்கிறதாம். அதேசமயம், மேக் அப், பேக், ஷூ போன்ற பொருட்களுக்கான செலவுகளை குறைவாக செய்கின்றனர்.
சிம்மம்: பார்ப்பதற்கு ஸ்டைலாக இருக்க வேண்டும் என்றும், பிறரை கவர வேண்டும் என்றும் நினைப்பார்களாம். ஆகவே, லேட்டஸ் அப்டேட் எதுவோ, அதற்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொண்டே இருப்பார்களாம். குறிப்பாக, விலை பற்றிய கவலையே இவர்களுக்கு இருக்காது. நல்ல பிராண்ட் மற்றும் டிசைனர் பொருட்களை வாங்குவதற்கு விரும்புவார்கள். புதிது, புதிதாக வாங்கிப் பயன்படுத்துவதில் ஆர்வம் உடையவர்கள்.
துலாம்: தங்களை எதிலும் சிறப்பானவர்களாக காட்டிக் கொள்ளும் நோக்கத்தோடு அதிகம் செலவு செய்பவர்கள். செலவு விஷயங்களில் தங்கள் பார்ட்னரை கெஞ்சி, கூத்தாடி சம்மதிக்க வைப்பார்கள். பின்னர், ரொம்பவே செலவு செய்துவிட்டு வாங்கிக் கட்டிக் கொள்வார்கள். சில சமயம், தங்களிடம் இல்லாத ஒன்றை வாங்கி வெற்றிடங்களை நிரப்பிக் கொண்டே இருப்பார்கள்.
மீனம்: பணத்தை கையாளுவதில் மிக மோசமான நடைமுறையை இவர்கள் கையாளுகின்றனர். ஒவ்வொரு நாளும் ஷாப்பிங் சென்று சின்ன, சின்ன பொருட்களை வாங்குவதில் ஆர்வம் உடையவர்கள். ஆனால், அவற்றை பெரும்பாலும் பயன்படுத்துவதில்லை. வரவுக்கு அதிகமாக செலவு செய்யும் இவர்கள் பெரும்பாலும் ஷாப்பிங் ஆப்-களை பயன்படுத்துவது இல்லையாம்.