மிதுனம்: இன்று தொடங்கிய வேலை திட்டமிட்டபடி செய்ய முடியாமல் இழுபறியாக இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் நீங்கள் கூறுவதை ஏற்காமல் தங்களது விருப்பப்படி எதையும் செய்வார்கள். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை இருக்கும். பிள்ளைகளுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9
கடகம்: இன்று அடுத்தவர் கூறும் கருத்துக்களை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் அதில் உள்ள நல்லது கெட்டதை யோசிப்பது நல்லது. பண விவகாரங்களில் கவனம் தேவை. மாணவர்கள் எதையும் நன்கு யோசித்து பின்னர் செய்வது நன்மை தரும். நிதானமாக ஆழ்ந்த கவனத்துடன் பாடங்களை படிப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9
கன்னி: இன்று சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும்.ஆன்மீக நாட்டம் தெய்வ பக்தி அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். ஏற்றுமதி சிறக்கும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். பழைய பாக்கி வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5, 6
துலாம்: இன்று மேல் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களுடன் அனுசரித்து செல்வார்கள். விசேஷ நிகழ்ச்சிகளில் குடும்பத்தினருடன் கலந்து கொள்ள நேரிடும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைகளின் உடல்நிலையில் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7
தனுசு: இன்று மனோ தைரியம் கூடும். எதிர்ப்புகள் விலகும். எந்த சூழ்நிலையையும் அனுசரித்து செல்வீர்கள். லும் வீண்குழப்பம், காரிய தடை ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில் செல்லும் போது கூடுதல் கவனம் தேவை. பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். கவனதடுமாற்றம் உண்டாகலாம். பணவரத்து தாமதப்படும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்: 9, 3
மீனம்: இன்று எதையும் செய்யும் முன்பு திட்டமிட்டு அதன்படி செயல்படுவது நல்லது. பயணங்கள் செல்லும் போது கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. மாணவர்கள் கவனத்தை சிதறவிடாமல் பாடங்களை படிப்பதும் எதிலும் மெத்தனமாக செயல்படுவதை தவிர்ப்பதும் முன்னேற்றத்திற்கு உதவும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 3, 7