கிரகங்கள் ராசியை மாற்றும் போது அதன் தாக்கம் 12 ராசிகளிலுமே காணப்படும். நவகிரகங்களில் ஆடம்பரம், காதல், செல்வம், புகழ் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் தற்போது சனி ஆளும் கும்ப ராசியில் இருந்து கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் உச்சம் பெறும் ராசியான மீன ராசிக்கு சென்றார். இதனால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், இந்த 3 ராசிக்காரர்கள் சுக்கிர பெயர்ச்சியால் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். அந்த ராசிக்கு அதிபதியான குரு, மீனத்திற்கு அதிர்ஷ்டத்தை அள்ளி வழங்குவார் என்பது சிறப்பு.
சுக்கிரனின் மீன ராசி சஞ்சாரத்தால், வேறு சில ராசிக்காரர்களுக்கும் பணவரவு அதிகமாக இருக்கும். சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் மழையாய் பொழியும், பொருளாதார நிலை மேம்படும். மீனத்தில் சுக்கிரன் வருவதால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பணத்தை அள்ளி வழங்கப் போகிறார் என்பதை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளுங்கள்.
கன்னி: கன்னி ராசியில் சுக்கிரனின் சஞ்சாரம் நன்மை தரும். இவர்கள் வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி அடைவார்கள். வாழ்க்கையில் அன்பும் காதலும் அதிகரிக்கும். உங்கள் வாழ்க்கை துணைக்கு பதவி உயர்வு கிடைக்கும். இது குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலையை உருவாக்கும். . வியாபாரத்தில் லாபம் உண்டாகும். திடீரென்று பணம் கிடைக்கும்.
மீனம்: சுக்கிரன் மீன ராசியில் பிரவேசித்து, வியாழன் - சுக்கிரன் சேர்க்கை உருவாகி வருகிறது. எனவே, சுக்கிரனின் ராசி மாற்றத்தின் பலன்கள் மீன ராசிக்காரர்களுக்கு மிக அதிகமாகவும் ஆக்கப்பூர்வமாகவும் இருக்கும் நம்பிக்கை அதிகரிக்கும். பண வரவு சாதகமாக இருக்கும். தொழில்-வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் காதல் அதிகரிக்கும்.
மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் சஞ்சாரம் மிகவும் சாதகமாக இருக்கும். மார்ச் 15 ஆம் தேதிக்குள், இந்த ராசியினர் பெரும் நிதியை பெறலாம். இந்த சுக்கிர பெயர்ச்சியால் ஜாதகத்தில் மாளவ்ய ராஜயோகம் அமைவதால் ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வும், பணவரவும் கிடைக்கும். வியாபாரம் நன்றாக நடக்கும்.