ரிஷபம்: இன்று எதிர்பாராத திருப்பங்களால் சிலரது வாழ்க்கை தரம் உயரும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் நன்கு முடியும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். வியாபாரம் சிறக்க கடுமை யாக உழைக்க வேண்டி இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 4, 6
மிதுனம்: இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளை சிறப்பாக செய்து முடித்து மேல் அதிகாரிகளின் பாராட்டு பெறுவார்கள். குடும்பத்தில் இருப்பவர்களால் நன்மை உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே சந்தோஷமான நிலை காணப்படும். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5
கடகம்: இன்று உறவினர்கள் மூலம் அலுகூலம் உண்டாகும். மனக்குழப்பம் நீங்கி தெளிவான சிந்தனை உண்டாகும். இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும். மாணவர்கள் தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற நன்கு படிக்க வேண்டி இருக்கும். ஆசிரியர்கள் சக மாணவர்களின் ஆதரவும் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன் அதிர்ஷ்ட எண்கள்: 2, 6