கடகம்: மனக்குழப்பம் அதிகரிக்கும். பொருளாதாரப் பற்றாக்குறை ஏற்படும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.சொத்து விற்பனையில் எதிர்பார்த்த தொகை கிடைக்கும். தடைபட்ட காரியங்கள் நடைபெறும். கண்டகச் சனி ஆதிக்கத்தால் சுப விரயங்கள் ஏற்படும். ஒப்பந்தங்களில் கையெழுத்திடும்போது கவனம் தேவை. கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். பொருளாதாரம் பெருகும். புதிய தொழில் தொடங்கப் போட்ட திட்டங்கள் நிறைவேறும். புகழ்மிக்கவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பர்.
சிம்மம்: குருவின் பார்வை பதிந்தும் உங்கள் ராசி புனிதமடைகிறது. எனவே பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.தொழிலில் லாபம் வந்துசேரும். ஆற்றல்மிக்க கூட்டாளிகளும், ஆன்மிகப் பெரியோர்களும் உங்கள் அருகில் இருந்து, உங்களை வெற்றிபெறச் செய்வர். சகோதர ஒற்றுமை பலப்படும். வழக்குகள் சாதகமாகும். தேவைக்கேற்ப பணம் வந்துசேரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு, பிரபல நிறுவனங்களில் இருந்து அதிக சம்பளத்தில் அழைப்புகள் வரலாம்.
கன்னி: உங்கள் ராசியைக் குரு பகவான் பார்க்கிறார். எனவே சென்ற மாதத்தைக் காட்டிலும் இந்த மாதம் சிறப்பாக அமையும்.உறவினர் பகை வரலாம். அருகில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நேரம் இது. கொடுக்கல் - வாங்கல்களில் பற்றாக்குறை ஏற்படும். பணிபுரியும் இடத்தில் மேலதிகாரிகளின் வெறுப்புக்கு ஆளாவீர்கள். குடும்பத்தில் மருத்துவச் செலவு கூடும்.பயணங்களால் பலன் கிடைக்கும். புதிய வாகனம் வாங்குவதற்கான யோகம் உண்டு. சொத்து விற்பனையால் லாபம் கிடைக்கும். சொந்தங்கள் மூலம் உதவி வந்துசேரும்.பிள்ளைகளால் பெருமை வந்துசேரும். படித்து முடித்தவர்களுக்கு நல்ல வருமானம் தரும் வேலை கிடைக்கும். சுபகாரியங்கள் குருப்பெயர்ச்சிக்குப் பிறகு நடைபெறும். சொத்துக்கள் வாங்கும் யோகமுண்டு. பணிபுரியும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் படிப்படியாக அகலும். சம்பள உயர்வு கிடைப்பதற்கான அறிகுறி தோன்றும்.
துலாம்: அர்த்தாஷ்டமச் சனி மற்றும் அா்த்தாஷ்டம குரு ஆதிக்கம் இருப்பதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறும்.ஆரோக்கிய தொல்லை ஏற்படும். இந்த காலகட்டத்தில் நிதானத்தோடும்,அமைதியோடும் செயல்பட வேண்டும். இழப்புகளை ஈடுசெய்ய புதிய வாய்ப்புகள் வரலாம். பாகப்பிரிவினை நல்ல முடிவிற்கு வரும். எதிர்கால நலன் குறித்து முக்கிய முடிவெடுப்பீர்கள்.
தனுசு: குருபகவான் பலம்பெற்ற சனியோடு சேர்ந்து ‘நீச்ச பங்க ராஜயோகம்’ அடைகிறார். எனவே தொழில் வளர்ச்சியில் இருந்த தடைகள் அகலும்.கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாது. குடும்பத்திலும் சரி, வெளி வட்டாரத்திலும் சரி பிரச்சினைகள் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு கடன் சுமை கூடும். செவ்வாய் பெயர்ச்சியாகும் வரை பொறுமையை கடைப்பிடியுங்கள்.
மகரம்: ஏழரைச் சனியில் ஜென்மச் சனியின் ஆதிக்கம் நடப்பதால் எதையும் யோசித்துச் செய்வது நல்லது.பூமி சம்பந்தப்பட்ட வகையில் லாபம் கிடைக்கும். எதிர்கால நலன்கருதி எடுத்த முயற்சிகளில் பலன் உண்டு.டைசி நேரத்தில் கைவிரிப்பார்கள். வீடு மாற்றம், உத்தியோக மாற்றம் உருவாகும்.பிள்ளைகளின் கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். சங்கிலித் தொடர்போல வந்த கடன் சுமை குறையும். பணிபுரியும் பெண்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். பதவி உயர்வு கிடைப்பதற்கான அறிகுறி தென்படும்.
கும்பம்: பாகப்பிரிவினைகளில் இருந்த தடை அகலும். பணப் பற்றாக்குறை நீங்கும்.ஆரோக்கிய குறைபாடு வரலாம். குடும்பத்தில் பிரச்சினைகள் உருவாகும். கொடுக்கல் - வாங்கல்களில் கவனம் தேவை. உத்தியோகத்தில் வரவேண்டிய முன்னேற்றம் தள்ளிப் போகும். கடன்சுமை கூடும்.தொழிலில் லாபம் கிடைக்கும். குடும்ப முன்னேற்றம் கூடும். வெளிநாட்டு முயற்சியில் அனுகூலம் கிடைக்கும். எண்ணங்கள் எளிதில் நிறைவேறும்.பொதுவாழ்வில் புதிய திருப்பம் ஏற்படும். பணிபுரியும் பெண்களுக்கு எதிர்பார்த்த சம்பள உயர்வு கிடைக்கலாம்.
மீனம்: சனியின் பார்வை உங்கள் ராசியில் பதிவதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.குடும்பத்தில் மருத்துவச்செலவு கூடும். சொத்துக்களாலும், சொந்தங்களாலும் பிரச்சினை வரலாம். நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்றாக இருக்கும். பணவரவு திருப்தி தரும். தொழில் முன்னேற்றம் பெறும்.உற்றார், உறவினர்கள் உங்கள் முன்னேற்றத்தைக் கண்டு ஆச்சரியப்படுவர்.சென்ற சில மாதங்களாக ஏற்பட்ட இழப்புகளை ஈடுகட்ட எடுத்த முயற்சி கைகூடும்.